STORY LINKS IN FIRST COMMENT
வணக்கம் மக்களே!
இந்த சூழ்நிலை
இந்த நேரம்
இந்த நிமிடம்….
எல்லோரடைய மூளைக்குள்ள ஒரே பெயர் மட்டும்தான் தெறிச்சிக்கிட்டே இருக்கில்ல?
கொரானா🥵 கொரானா😷 கொரானா😫
அதுவும் எல்லோரும் முதலிடம் இத்தாலி...
இரண்டாவது இடம் சீனா...
மூன்றாவது இடம் ஸ்பெயினா அமேரிக்காவா?
இந்தியா எத்தனாவது இடம்னு ஒலிம்பிக்ல தங்க மெடலுக்கு பார்த்துட்டு இருக்க மாதிரி கொரானவால் பாதித்த நாடுகளின் வரிசை பட்டியலை சீரியஸா பார்த்துட்டு இருப்பீங்கன்னு எனக்கு தெரியும்.
நோய்ல சாகிறவனை விட நோய் வர போகுதுன்னு பயந்து பயந்தே சாகிறான் பாருங்க😰 அவனோட பட்டியல்தான் நீளமா இருக்கும்னு நான் நினைக்கிறேன்.
பாதுகாப்பா இருக்கலாம்…
ஆனா ஜாக்பாட் மாதிரி குடும்பத்தோட வீட்டில இருக்க சந்தர்ப்பம் வாய்ச்சாலும் நியுஸ் பார்த்திட்டு டிவிலயே தவம் கிடக்கற அசாமிங்களுக்கு கொரானா வந்தா என்ன வாரட்டி என்ன?
இதெல்லாம் கூட பரவாயில்ல
இந்தியா சத்தியமா தாக்குபிடிக்காது😱
நம்ம நாட்டுல சுத்தமே இல்ல😱
எந்த ஒரு நவீன உபகரணமும் இல்ல😱
நல்ல டாக்டர்ஸ் இல்ல😱
நல்ல நர்ஸ் இல்ல😱
இப்படி குறை மட்டுமே சொல்லிட்டு இருக்க மனநிலை கொரானா வைரஸ் விட மோசம் 😫
அக்சுவலி ஹிரோஷிமா நாகசாகி இப்படி அணு ஆயுதங்கள் கொண்டு தன் இனத்தை தானே கூண்டோட அழித்த, அதுவும் வலி நிறைந்த மரணம், அதை தொடர்ந்த அவர்கள் சந்ததிகள் அனுபவிக்கும் கொடுமை…. இது பற்றியெல்லாம் யோசிச்சா கொரானா என்ற கிருமி மனிதனை விட அத்தனை கொடூரமானது இல்லவே இல்லை.
அதுவும் நான் கிறிஸ்டியன் நான் ஹிந்து நான் இஸ்லாம் நான் அமெரிக்கன் தமிழன் சொல்லிட்டு இருக்க நம்ம எல்லோரையும் பார்த்து
டே … நீ எல்லாரும் வெறும் மனிஷ சாதிதான் ஒரு குடைக்கு கூழ கொண்டு வந்து நிறுத்தி இருக்கு பாருங்க🤩
சீரியஸ்லி அந்த உலக சமத்துவத்தை இதுவரை நம்ம யோசிச்சு கூட பார்த்திருக்க மாட்டோம்😇
இங்கிலாந்து நாட்டு இளவரசனா இல்ல கூவத்தில இருக்க குப்பனா சுப்பனா… இப்படி எதுவும் பார்க்காம நம்மை அட்டாக் பண்ணிட்டு போயிட்டே இருக்க anti hero கொரானா
நிச்சயமாக பயங்கர கொடூர கொலை செய்யும் நோய் இல்ல…
நாம் அடிக்கடி பார்க்கிற சளி காய்ச்சலோட அண்ணன் தம்பி குடும்பம்தான்…
அதுவும் நம்ம ஆளு வள்ளுவர் இதுக்கு ஏத்த மாதிரி ஒரு குறள் சொல்லி இருக்காரு
இடுக்கண் வருங்கால் நகுக
அதனை
அடுத்தூர்வது அஃதொப்பது இல்.
எந்த பிரச்சனையையும் வந்தாலும் சிரிச்சிகிட்டே கடந்து வாடான்னு
Positivity
Full positivity🤩
இது இந்த சூழ்நிலையில யார்கிட்டயுமே இல்லையே என்று
நம்பிக்கையோட இந்த நாட்களை கடந்து வருவோம்…
நம்மால முடியலன்னு வேற யாரால?.😁😁
அதனால இந்த கனமான சூழ்நிலையில ஒரு இலகுவான கதை
எமோஷன்ஸ் ஸ்ட்ரேஸ் சோகம் த்ரில்லர் லாஜிக் இப்படி எதுவும் இல்லாம ஜாலி ஜாலியா ஒரு கதை குடுத்தா என்னன்னு நானும் kpn யோசிச்சோம்.
இரண்டு பேரும் சேர்ந்து இந்த கதையை எழுதலாம்னு முடிவு பண்ணோம்.
❤வைரஸ் 143❤
இயற்கை எப்படிப்பட்ட பேரிடர்களையும் நமக்கு கொடுத்தாலும் அந்த இயற்கை மனித குலத்திற்கு மட்டுமே தனிப்பட்ட முறையில் கொடுத்திருக்கும் ஒரு வரம் சிரிப்பு.
😀😃😄😁😆😅🤣😂
நம் நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக குலைக்கும் அளவிற்கு சம்பவங்கள் கொடுக்கும்
அழுத்தமான மனநிலையிலிருந்து மீண்டுவர நமக்கு இருக்கும் ஒரே ஆயுதம் சிரிப்பு மட்டுமே. 🤩
மனம் விட்டுச் சிரித்தால் மனஅழுத்தம் குறையும்🤩
நாம் இழந்து கொண்டிருக்கும் நம்பிக்கையும் நம்மிடம் கொஞ்சம் மீதம் இருக்கும்🙂
அதற்கான சிறு முயற்சியே இந்த 'வைரஸ் 143'
❤❤❤❤❤❤❤
சிரிப்பு மட்டுமே நோக்கமாக கொண்டு நாங்கள் கொடுக்கவிருக்கும் ஒரு தொடர்.
இதில் லாஜிக் எல்லாம் எதிர்பார்க்கக்கூடாது மக்களே.
எங்கள் ஒரே நோக்கம் சிரிக்க வைப்பது மட்டுமே.
இதில் கொஞ்சம் ரொமான்ஸும் கலந்திருப்பதால் மக்களின் மகிழ்ச்சிக்கு கேரன்டி நிச்சயம்.
எங்களுடன் சேர்ந்து இந்த காதல் கிருமியை பரப்ப நீங்கள் தயாரா?
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
Love Virus Attack - 1
LOVE VIRUS ATTACK - 2
LOVE VIRUS ATTACK - 3
LOVE VIRUS ATTACK - 4
Love Virus Attack -5
Love Virus Attack - 6
Love Virus Attack 7
Love Attack 8
Love Attack 9
Love Attack -10