
வணக்கம் அன்பு தோழமைகளே 💖
என்னுடன் தொடர்ந்து பயணிக்கும் அன்பான வாசகர்கள் அனைவருக்கும் எனது அன்பும் நன்றியும்.
மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு கதைக்கான அப்டேட்களுடன் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. வாரம் இரண்டு பதிவுகளாவது கொடுக்க முடியும் என்கிற நம்பிக்கையில்தான் மீண்டும் தொடர்கிறேன்.
முக்கியமாக, ஆலங்கட்டிமழை கதை பற்றி முக்கியமான ஒரு தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நான் ஏற்கனவே நான் காட்டுமல்லி டைட்டில் வைத்தபொழுது ஏற்பட்ட ஒரு மன வருத்தம் மீண்டும் ஏற்படாமல் தவிர்க்கவே இந்த டிஸ்க்ளைமர்.
வர்ஷிணி மெமரி லாஸ் ஆகி அம்னீசியாவால் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்பதை இந்த 15 எபிசோட் வரைக்கும் படித்தவர்கள் கொஞ்சமாக கெஸ் செய்திருப்பீர்கள் என நம்புகிறேன். ரஞ்சனிக்கு Triplets அதாவது ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள் என்பது தெரியும். அந்த மூன்று குழந்தைகளை ஒரு குழந்தை வர்ஷிணிக்கு பிறந்த குழந்தை - கதையின் ஒரு முக்கியமான இந்த சஸ்பென்ஸை நான் இங்கே ரிவீல் செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாகக் கருதுகிறேன். காரணம் விரைவில் தெரிய வரும்.
லாஜிக் பற்றியெல்லாம் உங்களுக்கு நிறையக் கேள்வி வரலாம். அதையெல்லாம் கதையின் போக்கில் தெரிந்து கொள்வீர்கள்.
கதையைப் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Happy Reading, Friends 💖
நட்புடன்,
KPN



கதை தொடர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி. நன்றி
🙏