Memories
Just now I got chance to read this novel awesome writing it created lot of my school memories
Just now I got chance to read this novel awesome writing it created lot of my school memories
வலசை போகும் பறவைகளாய்.
எத்தனை பெரியார்கள் வந்தாலும் இன்னும் பெண் கல்வி என்பது எல்லாருக்கும் சாத்தியம் இல்லை. பெண் பருவம் அடைந்ததும் கல்யாணம் செய்து விட வேண்டும் என நினைக்கும் மக்கள் எப்போதும் மாறுவதே இல்லை.
தங்கம், குயிலி, அஞ்சு மூவரும் பள்ளி தோழிகள். வசந்தகுமார் போன்ற ஆசிரியர்கள் இந்த சமூகத்துக்கு கிடைத்த பொக்கிஷம். சாதி வெறி பிடித்த கிராம தலைகள் அவரை ஊரை விட்டு துரத்தி விடுகிறார்கள். படிக்க ஆசைப்படும் அஞ்சுவும், தங்கமும் தங்கள் குடும்பத்தினரால் இள வயதிலேயே திருமண வாழ்க்கையில் தள்ளி விடப் படுகிறார்கள்.
பிரிந்த மூவரும் சந்திக்கும் போது அவர்களின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை கதையில் பார்க்கலாம். கணவன் குழந்தை என கனவு கண்ட குயிலியின்வாழ்க்கை தலை கீழாக மாறுகிறது. கதைகளில் படித்த வாழ்க்கை நிஜ வாழ்க்கை இல்லையென அனுபவம் sசொல்கிறது. சூர்யா தன் சபலத்தால் வலிந்து வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொள்கிறான். பாதிக்கப் பட்டது குயிலிதான்.
வலசை பறவைகள் பற்றிய விளக்கங்கள் அருமை. சிறகுகள் வலிக்க வலிக்க பறக்கும் பெண்களின் வலி யாருக்கு புரியும்? எந்த வயதிலும் போராடி வெல்லும் பெண்கள் பாராட்டுக்கு உரியவர்களே. அடுத்த தலை முறையினர் பறக்கும் சிறகுகளாவது வலிமையாக இருக்கட்டும்.
மனமார்ந்த நன்றி @chitrasaraswathi64 சித்ராம்மா.
கிருஷ்ண ப்ரியா நாராயணனின்(கேபிஎன்) வலசை போகும் பறவைகள் எனது பார்வையில்.
பெண்களின் முன்னேற்றம் பற்றிய அக்கறையுடன் கதை எழுதும் எழுத்தாளர் கிருஷ்ணா. வலசை போகும் பறவைகள் என பெண்களின் வாழ்க்கையை தந்திருக்கிறார்.
குயிலி நாயகி என்றாலும், அஞ்சு மற்றும் தங்கம் இணை நாயகிகள்.
ஒற்றை பெற்றோராக பெண்கள் குழந்தைகளை வளர்ப்பதில் வெளிநாட்டில் வளர்ப்பதற்கும் நம் சமுதாயத்தில் வளர்ப்பதற்கும் உள்ள வேறுபாடு பற்றி சொல்வது உண்மை.
நம் சமூகத்தில் ஆண் ஒற்றை பெற்றோராக பெறும் மதிப்பு அதே பெண் ஒற்றை பெற்றோராக பெறும் மதிப்பிற்கும் உள்ள வேறுபாட்டை யதார்த்தமாக தந்திருக்கிறார்.

நன்றி, நன்றி, நன்றி வாசகர்களே!
இந்தக் கதை தொடங்கியது முதலே, இங்கே தொடர்ந்து Comment செய்கிறீர்கள் என்பதே எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி அளிக்கிறது.
நிறைவுப் பகுதியைப் பதிவேற்றம் செய்துவிட்டேன். உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
இதோ எபி...
Thanks a lot for your valuable comment.