top of page

Poovum Naanum Veru-34

இதழ்-34


சந்தோஷ் முனகியவாறு அசையவும் உணர்வுக்கு வந்தவர்கள், அவர்களது வாக்குவாதத்தை விடுத்து அவசரமாக அவனை நோக்கிப் போக, உறக்க நிலையில்தான் இருந்தான் அவன்.


அவனுடைய இந்த நிலை தீபனை வெகுவாக பாதித்திருப்பது நன்றாகவே விளங்கவும், அவனுடைய மனநிலையை ஓரளவுக்கு உணர்ந்தவளாக, "ப்ச்.. இதை ஒரு லெஸனா எடுத்துக்கோங்க மிஸ்டர் தீபன்! இனிமேலாவது இப்படி செய்யமாட்டீங்கன்னு நம்பறேன்!" என்றவள் அவன் எந்த ஒரு பதிலையும் சொல்லாமல் இறுகிப்போய் இருக்கவும், "டயர்டா தெரியறீங்க; நீங்களும் கொஞ்சம் தூங்குங்க! நான் போய் அம்மாவை பார்க்கறேன்!" எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள் வசுமித்ரா!


"மித்து!" என்ற தீபனின் மென்மையான அழைப்பில் அவள் அவனைத் திரும்பிப் பார்க்கவும், "உங்க அம்மா ஒரு அயர்ன் லேடி! அவங்களுக்கு ஒண்ணும் ஆகாது! பயப்படாத! உன்கூட நானும் இருக்கேன்!" என அவன் சொல்ல, அவனது அக்கறையான வார்த்தையில் அவளது கண்களில் வழிந்த கண்ணீரை அவளது துப்பட்டாவால் துடைத்துக்கொண்டே, தலையை அசைத்துவிட்டு அங்கிருந்து சென்றாள் மித்ரா!


அவளது கண்ணீர் கண்டு தவித்த மனதுடன்; அவள் சென்றதும் மூடிக்கொண்ட கதவையே சில நிமிடங்கள் வெறித்தவண்ணம் இருந்தவன், பின் கட்டிலில் போய் படுத்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டான் தீபன்!


அடுத்த நாள் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோரையும் எப்படி எதிர்கொள்ளப் போகிறோமோ என்ற அச்சம் மேலோங்கத் தூக்கம் கூட வரவில்லை அவனுக்கு!


***


தன்னை மறந்து எப்பொழுது உறங்கினானோ; ஆழ்ந்த உறக்கத்திலிருந்த தீபனை "எஸ்கியூஸ் மீ!" என்ற ஒரு பெண்ணின் குரல் கலைக்க, சந்தோஷை பரிசோதிப்பதற்காக மருத்துவருடன் ஒரு செவிலியரும் அங்கே வந்திருந்தார்!


மணி காலை ஏழைத் தாண்டி இருப்பது தெரிந்தது.


அதேநேரம் சந்தோஷும் கண்விழித்திருந்தான்!


"சாரி!" என்றவாறே எழுத்து வந்த தீபன், அந்த மருத்துவர் அவனைப் பரிசோதித்து முடிக்கவும், "இப்ப எப்படி இருக்கார் டாக்டர்?" எனக் கேட்க,


"ஹி இஸ் அபசல்யூட்லி நார்மல்! டயட் ஃபுட் வரும்; அதைச் சாப்பிட கொடுங்க! நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்!" என்று சொல்லிவிட்டுப் போனார் அந்த மருத்துவர்.


"சாரிடா மாப்பள!" என வருத்தத்துடன் சந்தோஷுடைய கையை தீபன் பற்றிக்கொள்ள, "ப்ச்! விடு மச்சான்!" என்றவன், "உன் ஃபோன கொஞ்சம் குடு!" எனச் சொல்லிவிட்டு, "எனக்கு காஃபி சாப்பிடணும் போல இருக்கு! சாப்பிடலாமான்னு தெரிஞ்சிட்டு, அதுக்கு அரேஞ் பண்ணிட்டு வரியா?" என அவன் சொல்லவும், கைப்பேசியை அவனிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றான் தீபன்.


அவன் சில நிமிடங்களில் திரும்ப, மனைவியைச் சமாதானப்படுத்தும் விதமாகப் பேசிக்கொண்டிருந்தான் சந்தோஷ்.


தீபனை பார்த்ததும், கட்டை விரலைத் தூக்கி 'சொல்லிட்டேன்!' என ஜாடை செய்தவன், "ப்ச்... எனக்கு ஒண்ணும் இல்ல! பங்க்ஷன் நல்லபடியா நடக்கும்! நான் சொன்ன மாதிரி எங்க அம்மா அப்பா; உங்க அம்மா அப்பா; எல்லாரையும் கன்வின்ஸ் பண்ணி இங்க கூட்டிட்டு வர வேண்டியது உன்னோட பொறுப்பு!


மிச்சம் மீதி சண்டையை இங்கே வந்து கன்டின்யூ பண்ணுடீ என் செல்ல பொண்டாட்டி!" என கொஞ்சலாகச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான் அவன்.


அதை பார்த்து புன்னகைத்துக்கொண்டான் தீபன்.


சில நிமிடங்களில் அங்கே இருந்த உணவு கூடத்திலிருந்து காஃபீ வர, இருவருமாக அதைப் பருகி முடித்தனர்.


சற்று நேரத்திற்கெல்லாம் அவர்கள் இருவரின் பெற்றோருடன் சரிகாவும் குழந்தையும் அங்கே வந்து சேர, அழுகையும் கோபமுமாக அந்த அறையே அமர்க்களப் பட்டது.


அவர்கள் யார் ஒருவ