Poovum Naanum Veru-30
இதழ்-30
வசுமித்ராவை மென்மையாக அவனிடமிருந்து பிரித்தவன், அவளை ஆராய, அவளது உதடு கிழிந்திருப்பதைப் பார்த்து கோபத்தில் அவன் உடல் இறுகியது.
முகம் உணர்ச்சி துடைத்திருக்க, அவன் மனதில் என்ன நினைக்கிறான் என்பதைப் புரிந்துகொள்ள இயலவில்லை அவளால்.
அவளது இதழ் ஓரம் உலர்ந்திருந்த ரத்தத்தை மென்மையாகத் துடைத்தவன், அவளை வருமாறு ஜாடை செய்துவிட்டு முன்னே செல்ல, அவனை பின் தொடர்ந்தாள் மித்ரா!
மாடிப்படிகளில் 'லாண்டிங்' பகுதியில் ஒருவன் அடிபட்டுச் சரிந்துகிடக்க, காலால் அவனை ஒதுக்கித் தள்ளிவிட்டு கீழே இறங்கினான் தீபன்.
கீழே வந்ததும், அங்கே இருந்த பெரிய வரவேற்பறையில் திவாகருடைய அடியாட்கள் மூலைக்கு ஒருவராகச் சுருண்டு கிடக்க, தீபனின் ஆட்கள் அவனை வந்து சூழ்ந்துகொண்டார்கள்!
அதில் தலைவன் போல் இருந்தவன் உரிமையுடன், "இவங்கதான் நீங்க கட்டிக்க போற பொண்ணா தம்பி! ரொம்ப அழகா இருகாங்க!" எனச்சொல்ல, வெட்கம் கலந்த லேசான புன்னகை அவனது முகத்தில் எட்டிப்பார்க்க,"அண்ணா! சும்மா இருங்க!" என்றான் தீபன் சற்று நெகிழ்வாக!
மற்றவர்கள் எல்லோரும் 'ஓ' வென குதூகலிக்க, வெட்கம் மேலோங்க அவனுக்குப் பின்னல் ஒன்றிக்கொண்டாள் மித்ரா!
"நேரம் ஆச்சு போகலாம்!" எனச் சொல்லிக்கொண்டே அருகில் இருந்த அறையின் கதவை தீபன் திறக்க, அடி பட்ட வலியில் முனகிக்கொண்டிருந்தான் ஜவஹர்!
வெளியில் நின்றுகொண்டே, "செத்த பாம்பை அடிக்க வேணாம்னு நானே ஒதுங்கி போனா கூட ஏண்டா அண்ணன் தம்பி ரெண்டு பேரும் தேடி தேடி ஆப்பு மேல வந்து உட்கார்ந்துக்கறீங்க!
ஒருவேளை நீ செத்த பாம்பு இல்லையோ! விஷம் இன்னும் இருக்கு போல இருக்கே! மொத்தமா காலி பண்ணிடலாமா!" என எகத்தாளமாகக் கேட்டவன், "உன் அண்ணன் கிட்ட சொல்லு; உங்க டைம் முடிய போகுதுன்னு!" என்று கர்ஜித்துவிட்டு மித்ராவின் கையை பற்றி இழுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான் தீபன்!
வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அவனது வாகனத்தின் முன் பக்க கதவை தீபன் திறந்துவிட, மித்ரா உட்காரவும், சுற்றிவந்து உள்ளே உட்கார்ந்தவன் அதைக் கிளப்பினான்.
அவனது ஆட்கள் வந்த வாகனம் அவர்களை பின் தொடர்வது அவளுக்குப் புரிந்தது.
சில நிமிட மௌனத்திற்குப் பிறகு, "எதுக்காக உன்னை கடத்தினானுங்க?" என உணர்வற்ற குரலில் அவன் கேட்க, காரின் முன் பக்க கண்ணாடியில் தெறித்த மழைத் துளிகளை நடனமாடித் துடைத்துக்கொண்டிருந்த வைப்பரை பார்த்துக்கொண்டே, சற்று தயக்கத்துடன், "வசந்தை பத்தி கேட்டாங்க!" என அவள் சொல்லவும், அவனுடைய கோபத்தில் அந்த வாகனம் ஒரு குலுங்கு குலுங்கியது!
"மேடம் என்ன சொன்னீங்க!" என அவன் கடுமையுடன் கேட்க, "உங்க கிட்ட என்ன சொன்னேனோ அதையேதான்; அதாவது தெரியாதுன்னு சொன்னேன்!" என்றாள் அவள் அலட்சியமாக.
"ப்பா! என்ன தெனாவெட்டுடீ உனக்கு!" என்றவன், "அவனுங்க என்னை மாதிரி நல்லவனுங்க இல்ல! தெரியுமா! ரொம்ப ரொம்ப மோசமானவனுங்க!" என்றவாறே சர்ரென வாகனத்தை ஓரமாக நிறுத்தியவன், அவனுடைய ஆட்களின் வாகனம் அவர்களைக் கடந்துசெல்லும் வரை மவுனமாக இருந்துவிட்டு, "உன்னை கடத்தினானுங்க இல்ல; அதே மாதிரித்தான் என்னையும் அப்ப கடத்தினானுங்க! என்ன சித்ரவதை அனுபவிச்சேன் தெரியுமா!
சரிகா பட்ட துன்பம் அதைவிட அதிகம்!
பராதிம்மா போன் பண்ணி உன்னை காணும்னு சொன்னதும் என் உயிரே போயிடுச்சுடீ!
அதுவும் ட்ரேஸ் பண்ணவே வழி இல்லாம செஞ்சிருக்கானுங்க!
இருந்தாலும் ஜவஹரோட போன் ஹிஸ்டரியை எடுத்து, அவனோட காண்டாக்ட்டையெல்லாம் தேடி பிடிச்சு; அவனோட ட்ரக் சப்ளையர் குமார்னு ஒருத்தனை பிடிச்சோம்!
அவனை விட்டு போன் பண்ண வெச்சு இடத்தை கண்டு பிடிச்சேன்! உஃப்.. உன்னை நேரில் பார்க்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு!
உனக்கு ஒரு சின்ன கீறல் கூட விழாம காப்பாத்தணும்னு நினைச்சேன்!
ப்ச்! முடியல!" என வருந்தியவன், விரல்களால் அவளது காயத்தை மென்மையாக வருடி, இதமாக அதன் மேல் முத்தமிட்டான், 'சாரி!" என்று சொல்லிக்கொண்டே!
அவனது பேச்சில், செயலில் அவள் உறைந்துபோயிருக்க, "உன்னோட இந்த பிரச்சினைக்கு நான்தான் காரணம்!" எனத் தொடர்ந்தவன், "நேத்து பார்ட்டிக்கு அந்த திவாகர் வர