Poovum Naanum Veru - 27
இதழ்-27
சட்டென தீபனிடமிருந்து பதறி விலகிய மித்ரா, "என்ன பண்றீங்க மிஸ்டர் தீபன்!" என உள்ளே போன குரலில் கேட்க, "என்ன பண்றீங்கன்னு கேட்கக்கூடாது மித்து!" என்றவாறு சற்றுமுன் தன்னை மறந்து அவனுடைய தோளைப் பற்றியிருந்த அவளது கை விரல்களை தன் விரல்களால் மென்மையாகப் பிடித்துக்கொண்டு, "மைக்கேல் மதன காமராஜன் படத்துல காமேஸ்வரன் கமலஹாசன் கிட்ட ஊர்வசி சொல்லுவாங்க இல்ல; அந்த மாதிரி, 'என்ன கட்டிண்டு இருக்கோம்'னு சொல்லணும்!
உடனே, 'ஆஆஆ! ஓஓஓ! சுன்னரி நீயும் சுன்னரன் ஞானும் சேர்ந்திருநாள் திருவோணம்'னு பேக் கிரௌண்ட்ல பாட்டெல்லாம் வரணும்!" என அவன் கிண்டலில் இறங்க,
மூண்ட சிரிப்பை அடக்கிக்கொண்டு லாவகமாகத் தனது கையை விடுவித்துக்கொண்டே, "பாட்டு வருதோ இல்லையோ; அந்த படத்துல வர மாதிரி உங்க அம்மா; அப்பா; சரிகாக்கா; முக்கியமா பாரதிம்மா! எல்லாரும் மொத்தமா இங்க வந்து நிக்க போறாங்க! அப்பறம் நம்ம கதை கந்தல்தான்!" என அவன் சொன்ன அதே வேகத்திலேயே மித்ரா பதில் கொடுக்க,
"நல்லதா போச்சு; அப்படி மட்டும் நடந்தால் எனக்கு வேலை மிச்சம்! நானே எப்படி எல்லாரையும் சரி கட்டுறதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன்; ” என்றவன், “நம்ம கல்யாணம் பிக்ஸ் ஆயிடும் !" என்று முடித்தான் அவன்.
'கல்யாணம்' என்ற வார்த்தையில் முகம் கறுத்துப்போக, "இல்ல மிஸ்டர் தீபன்! நமக்குள்ள கல்யாணமெல்லாம் ஒத்து வராது!
கல்யாணம் அப்படிங்கற பேச்சுக்கே என் வாழ்க்கைல இடமில்லைனு நான் முடிவு பண்ணி எட்டு வருஷம் ஆச்சு!" என்றாள் மித்ரா தீவிரமாக!
"கல்யாணம் வேண்டாம்னா! உன்னோட பாரதிம்மா கிட்ட தீபன்தான் வேணும்னு சொன்னதா சொன்னியே; அதுக்கு என்ன அர்த்தம்!
லிவிங் இன் ரிலேஷன்ஷிப்ல வேணா இருந்துக்கலாமா மித்ரா!" எகத்தாளமாக அவன் கேட்க, "என்ன பேசறீங்க நீங்க!" எனப் பற்களைக் கடித்தாள் மித்ரா கோபத்துடன்!
"பின்ன; பெரிய இவ மாதிரி பேசற!" என அவன் கடுகடுக்க, "ப்ச்! எனக்கு தீபன் வேணும்; ஒரு ஃப்ரெண்டா; எப்பவுமே!" என அவள் கொஞ்சம் இறங்கிய குரலில் சொல்ல,
"அப்படினா நீ என்னை லவ் பண்ணல! அப்படித்தானே மித்ரா!' என அவளது அகழி போன்ற கண்களில் தனது கண்களை மூழ்கடித்தவாறு அவன் கேட்க, அவனது கூர்மையான பார்வையைச் சந்திக்க இயலாமல் சற்று தடுமாறியவள், "ப்ச்... மிஸ்டர் தீபன்! சொன்னா புரிஞ்சிக்கோங்க!
ஒரு வேளை உங்களுக்காக உங்க அம்மா அப்பா இதுக்கு சம்மதிச்சாலும்; அவங்களால என்னை முழு மனசோட ஏத்துக்க முடியாது!
முக்கியமா சரிகாக்காவை நான் எப்படி ஃபேஸ் பண்ணுவேன்!
நீங்களே என்னை எப்படி நம்பினீங்கன்னே எனக்கு இது வரைக்கும் புரியல!
அவங்க என்னை எப்படி நம்புவாங்க! நான் உங்களை மயக்கிட்டதா இல்ல நினைப்பாங்க!
அவசரப்பட்டு ஒரு முடிவை எடுத்துட்டு நம்ம ஆயுளுக்கும் வருத்தப்படக்கூடாது!" என்றாள் மித்ரா கண்களில் நீர் திரையிட!
'யாரோ பெத்த பிள்ளைங்களுக்காக அந்த சுடுகாட்டுக்குள்ள நீ போன அப்பவே எனக்கு உன்னைப் பத்தி புரிஞ்சுபோச்சு மித்ரா!
ப்ராக்டிகலா நம்ம கல்யாணம் ஒத்துவராதுன்னு புரிஞ்சிருந்தும் அந்த திலீப்பை வேணாம்னு சொல்லிட்டு வந்திருக்கியே! இப்பதான் உன்னை ரொம்பவே பிடிக்குது!
உன்னைப் போய் நான் எப்படிச் சந்தேகப்படுவேன்!! என எண்ணியவன் அதைச் சொல்லாமல், "ஓ! என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா நீ ஆயுளுக்கும் வருத்தப் படுவியா மித்ரா?" என வேண்டுமென்றே அவளிடம் குத்தலாகக் கேட்டான் தீபன் அவள் மனதை அறிய.
"நான் என்ன சொன்னா; நீங்க என்ன பேசறீங்க! இது விதண்டா வாதம்" எனக் கலங்கிய மனநிலையுடன் அவள் சொல்லவும்,
"அப்படியே வெச்சுக்கோ! முதல்ல நான் கேட்டதுக்கு நீ பதில் சொன்னியா சொல்லு!" அவன் கேட்க,
"என்ன கேட்டீங்க; புரியல!" என்றாள் மித்ரா!
"நீ என்னை லவ் பண்றியா இல்லையா!" என தீபன் நேரடியாகவே கேட்க,
'தெரியல! என்னோட மனசில் இருக்கிற பீலிங்ஸ்க்கு எப்படி பேர் கொடுக்கறதுனே எனக்கு புரியல! கன்ஃபியூசிங்கா இருக்கு!" என மித்ரா சொல்ல, வாய் விட்டுச் சிரித்தவன், "இல்லனு தெளிவா உன்னால பதில் சொல்ல முடியல இல்ல! இந்த கன்ஃபியூசிங் ஸ்டேட்லேயே இரு! உன்னை எப்படி டீல் பண்ணனும்னு எனக்குத் தெரியும்!" என்றான் தீபன் கர்வமாக.<