Poovum Naanum Veru - 26
இதழ்-26
திலீப் மித்ராவை அவனுடைய பெற்றோரிடம் அறிமுகப்படுத்துவதற்காக அழைத்துச்செல்ல, அவர்கள் அன்பாக அவளிடம் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் எதோ பதில் சொல்லிக்கொண்டிருந்தாள் அவள்.
அதைப் பார்த்ததும் வயிற்றில் எழுந்த புகைச்சலை அணைக்க மதுவின் அடுத்த சுற்றையும் முடித்தான் தீபன்.
முழு ஒப்பனையுடன் அதி ஆடம்பரமாக அங்கே வந்திருந்த ஒரு பெண் மித்ராவிடம் சென்று அவளை அணைத்துக்கொண்டு, எதோ கேட்க, இன்முகமாகத் தலையை ஆட்டி அவன் பதில் சொல்லவும், அடுத்த சுற்று, இப்படி சில நிமிடங்களுள்ளாகவே சுற்றுகளை முடித்திருந்தான் தீபன்.
கொஞ்சம் கொஞ்சமாக விருந்தினர்கள் வருகை அதிகரிக்ககவும் பார்ட்டி களை கட்ட தொடங்கியது.
தெரிந்தவர் பலரும் தீபனை பார்த்துவிட்டு அவனை விசாரிக்க, அதில் ஒரு பெண்மணி, "பொண்ணு செம்ம அழகா இருப்பாளாமே! நீங்க பார்த்திருக்கீங்களா தீபன்! அவளோட அப்பா அம்மாவுக்காக வெயிட்டிங்காம்! அவங்க வந்த உடனே அனௌன்ஸ்மென்ட் கொடுப்பாங்களாம்! அதுவரைக்கும் வெயிட் பண்ணிதான் ஆகணும் ப்ச்!" என திலீப் மணக்கவிருக்கும் பெண்ணை காணும் ஆவலில் பேசிக்கொண்டே போனார்.
ஒரு கட்டத்தில் நிலை கொள்ளாமல் அங்கே இருக்கவும் பிடிக்காமல், திலீப்பை இருந்த இடத்திலிருந்தே ஜாடை செய்து அழைத்த தீபன், அவன் அருகில் வரவும், "என்னவோ உடம்புக்கு முடியல திலீப்; நான் கிளம்பறேன்; என்ஜாய் தி பார்ட்டி! ஹவ் எ ஒண்டர்புல் மொமெண்ட்!" என்று சொல்லிவிட்டு அவன் செல்ல எத்தனிக்க, "ஹேய்! ரொம்ப முடியலையா! நான் வேணா யாராவது ட்ரைவரை அனுப்பட்டுமா?" என்று திலீப் அக்கறையுடன் கேட்க, "இட்ஸ் ஓகே! நானே மேனேஜ் பண்ணிப்பேன்! பை!" என்று சொல்லிவிட்டுத் தள்ளாடியபடி அங்கிருந்து சென்றான் தீபன்.
அவனை தாத்தா அவசரமாகக் கூப்பிட, தீபனுடைய தள்ளாட்டம் கூட மனதில் பதியாமல் அவரை நோக்கிச் சென்றான் திலீப்.
அவன் அந்த விடுதியை விட்டு வெளியில் வர, மழை வேறு பிசுபிசுத்துக்கொண்டிருந்தது.
'வேலட் பார்க்கிங்' காரணமாக அவனுடைய காரை அந்த விடுதியின் பணியாளர் ஓட்டி வந்து நிறுத்தவும், அதில் ஏறி அமர்ந்தவன், அதை ஓட்டிச்சென்று ஓரமாக நிறுத்திவிட்டு, கார் ஸ்டியரிங்கிலேயே தலையைச் சாய்த்து படுத்துக்கொண்டான்.
நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு
நினைவினை கடந்துவிடு
நெஞ்சே நெஞ்சே உறங்கிவிடு
நிஜங்களை துறந்துவிடு
கண்களை விற்றுத்தான் ஓவியமாஆஆ
வெண்ணீரில் மீன்கள் தூங்குமாஆஆ
கண்ணீரில் காதல் வாழுமா
நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு
நினவினை கடந்துவிடு
நெஞ்சே நெஞ்சே உறங்கிவிடு
நிஜங்களை துறந்துவிடு