top of page

Poovum Naanum Veru - 23

இதழ்-23


ஜவஹர் வயிற்றில் உதைத்ததால் உண்டான வலியைப் பற்களைக் கடித்துப் பொறுத்துக்கொண்டு விழிகளை மூடி சுவர் ஓரமாகச் சுருண்டு கிடந்த தீபனை பார்த்து, "டேய்! செத்துக்கித்து தொலைஞ்சிட்டானா என்ன!


இப்ப இவனுக்கு எதாவது ஆச்சுன்னா நம்ம நிலைமை மொத்தமா கோவிந்தாதான்!" என திவாகர் அலற,


"அண்ணா! இவன் செத்தாதான் என் வெறி அடங்கும்!


நான் இந்த பொண்ணுங்க கிட்ட ஏற்படுத்தி வெச்சிருந்த பயத்தை ஒரே நாளுக்குள்ள காலி பண்ணிட்டான்!


என்னையே பயந்து ஓடி ஒளியவெச்சுட்டான்!


கொஞ்சம் வீடியோஸ் வேற இவன் கிட்ட மாட்டியிருக்கு!


இவனை இப்படியே பெட்ரோலை ஊத்தி கொளுத்திட்டு போயிட்டே இருக்கலாம்!" என ஜவஹர் வெறியுடன் கத்தியபடி தீபனை காலால் உதைக்க வர, இழுத்துப் பிடித்து மிக முயன்று அவனை அடக்கியபடி, "டேய்! கொஞ்சம் பொறுமையா இருடா!


நேரடியா ஹோம் மினிஸ்டர் வரைக்கும் போற அளவுக்கெல்லாம் இவங்க குடும்பம் ஒர்த் இல்லன்னு தோணுது!


யார் மூலமா போயிருக்காங்கன்னு விசாரிக்க சொல்லியிருக்கேன்;


யாருன்னு கண்டுபிடிச்சு அவங்கள ஆஃப் பண்ணா போதும்! ஒரு மூணு மாசம் வெயிட் பண்ணு!


அப்பறம் இவனை வெச்சு செய்யலாம்!" என்றான் திவாகர், தீபன் மயக்கமாக இருக்கிறான் என்ற எண்ணத்தில்.


அந்த நேரம் அவன் அறிந்திருக்க நியாயமில்லை பழி தீர்க்க அந்த மூன்று மாதமே தீபனுக்கு போதுமானது என்று ஏனென்றால் அவன் சொன்ன அந்த வார்த்தைகள் அவர்களால் எண்ணிப்பார்க்கக்கூட இயலாத அளவிற்கு ஒரு வன்மத்தை தீபனின் மனதில் உண்டாகியிருந்தது.


பேசிக்கொண்டே தீபனின் அருகில் சென்று அவனுடைய சுவாசத்தைக் கவனித்துவிட்டு, "டேய்! உண்மையிலேயே செத்துக்கித்து தொலையப்போறான்! இவனை இப்படியே தூக்கிட்டு; எங்க சித்தப்பாவோட ஹாஸ்பிடல் இருக்கு இல்ல அங்க போய்; நான் சொன்னேன்னு சொல்லி இவனுக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்க சொல்லுங்க!


அட்மிட்லாம் பண்ண வேணாம்!


ஏன்னா இவன் பொழுது விடியறதுக்குள்ள அவங்க வீட்டுல இருக்கணுமாம்! கமான் பாஸ்ட்!" என அவர்களுடைய அடியாட்களிடம் கட்டளையாகச் சொல்லிவிட்டு, வசந்தை ஏளனமாகப் பார்த்துக்கொண்டே, "டேய்! உனக்கு வேற தனியா சொல்லனுமா? இவனையெல்லாம் இப்படியே கை கழுவி விட்டுட்டு; மொதல்ல கிளம்பி நம்ம மெட்ராஸ் வீட்டுக்கு வரசொன்னாரு அப்பா! இங்க இருந்து ஏழரைய கூட்டாத!


எல்லாத்தையும் விட முக்கியமான விஷயம்; இவனோட தங்கை இருக்கற வீடியோ!" என சொல்லிவிட்டு நிறுத்தியவன், எதோ நினைவில் வர, "இல்ல அது மட்டும் இல்ல; எந்த ஒரு வீடியோவும் இனிமேல் நீ ஷேர் பண்ண கூடாது! எல்லாத்தோட ஒரிஜினல் ஃபுட்டேஜையும் கூட டிஸ்போஸ் பண்ணிடு; இல்லன்னா உன்னோட சேர்ந்து நாங்களும் களி தின்ன வேண்டியதுதான்!


கருமம் கருமம்! இன்னும் என்ன என்னவெல்லாம் பண்ணி தொலைச்சிருக்கியோ! மூடி மறைக்க என்னவெல்லாமோ செய்ய வேண்டியதா இருக்கு" எனத் தம்பியிடம் எரிந்து விழுந்தான் திவாகர்.


வசந்தை வைத்துக்கொண்டே அதுவும் தன் அல்லக்கைகளின் முன்னிலையில் அண்ணன் தன்னை இகழ்வாகப் பேசியதில் முகம் கன்றிப் போக, "வசந்த்! இங்க இருக்கற எல்லா திங்க்ஸையும் யார் கைக்கும் கிடைக்காத மாதிரி பக்கவா பேக் பண்ணி! எங்கயாவது புதைச்சிட்டு கொஞ்ச நாள் நீ உன் வேலையை பாரு!


சீக்கிரமே திரும்பி வந்துடுவேன்!" என வசந்த்திடம் சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாகச் சென்றான் ஜவஹர் எதிர்காலம் தீபன் மூலம் அவனுக்கு என்ன செய்ய காத்திருக்கிறது என்பதை அறியாமலேயே!