Nee Enbathe Naanaga - 10
10 - ரௌத்திரம்
மாலை நேரம். அந்த அடுக்குமாடி குடியிருப்பின் முன்புறம் இருந்த குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த மரபெஞ்சில் அமர்ந்து கொண்டிருந்தாள் ஜானவி.
அன்புச்செல்வியும் மீனாவும் விளையாடி கொண்டிருக்க, செழியனும் அவர்களோடு சேர்ந்து குழந்தை போல் விளையாடி கொண்டிருந்தான்.
ஜானவியின் விழிகளோ அவர்கள் மூவரை மட்டுமே கடிவாளம் கட்டிய குதிரை போல் பார்த்து கொண்டிருந்தது. அந்த காட்சியை பார்க்கும் போது அவளுக்கு அப்படி ஒரு மனநிறைவு.
ஜானவி எந்தவித வேலைப்பாடும் இல்லாத மஞ்சள் நிற சுடிதார் அணிந்து கொண்டு தன் மேல்அழகை மறைத்த வண்ணம் ஒரு வெள்ளை நிற துப்பட்டாவை போட்டிருந்தாள்.
அந்தி மாலையின் செந்நிற துகள்கள் அவள் மேனி நிறத்தோடு சேர்ந்து மின்ன, அந்த திவ்யமான அழகு அவள் வெளிப்புற தோற்றத்திலிருந்து மட்டும் பிரதிபலிக்கவில்லை. அவள் மனதிலிருந்தும் பிரதிபலித்தது. சில நாட்களாக அவள் வாழ்வும் மனநிலையும் மாறியிருந்ததன் வெளிப்பாடுதான் அது!
மௌன சிலையென அமர்ந்திருந்த அவளின் அமைதியை குலைத்தது அவள் கைபேசியின் ரீங்கார ஒலி. அதனை காதில் வைத்து பேசியவளின் பார்வை அப்போதும் அவர்கள் மூவரை விட்டு நீங்கவில்லை.
“நான் ஜட்ஜ ம்மா கிட்ட கூட பேசிட்டேன் ஜானு... கண்டிப்பா இந்த தடவை கேஸ் பைனல் ஆகிடும்... மத்த பார்மாலடீஸ் கூட சீக்கிரம் முடிச்சுடலாம்” என்று எதிர்புறத்தில் ஒரு குரல் சொல்ல, “நிஜமாவா மேடம்” என்று அவள் முகம் அத்தனை அழகாக மலர்ந்தது. அவள் அதற்காகத்தானே காத்திருந்தாள்.
“ஹம்ம்... ஆனா நீ அந்த ஆளை சும்மா விட கூடாது ஜானவி... பெருசா எதாச்சும் நஷ்ட ஈடா கேட்டு வாங்கணும்”
“ஐயோ வேண்டவே வேண்டாம் மேடம்... என்னால இனிமே முடியாது... திரும்பியும் இந்த பிரச்சனை பெருசாகும்... எனக்கு என் பொண்ணு என் கூட இருந்தா மட்டும் போதும்... இனி அந்த ஆளோட சங்காத்தமே வேண்டாம்” என்று அவள் முடித்து கொள்ள அதற்கு மேல் அவர்கள் சம்பாஷணை நீளாமல் ஒரு சில வார்த்தைகளோடு நிறைவடைந்தது.
ஜானவி தன் பேசியின் தொடர்பை துண்டித்த போதும் அவள் முகத்தில் இன்னும் அவள் கேட்ட செய்தியின் சந்தோஷம் நிலைகொண்டிருந்தது.
“என்ன? கால் பேசனதும்... ரொம்ப ஹேப்பியா ஆயிட்டீங்க ஜானவி... என்ன விஷயம்?” என்று செழியன் அவள் அருகில் வந்து கேட்க,
“என் வக்கீல்தான்... சீக்கிரம் டிவோர்ஸ் கிடைசிடும்னு சொன்னாங்க” என்றவள் சொல்ல, செழியன் முகம் வருத்தாமாக மாறியது.
“இதுக்கா ஹேப்பியானீங்க?!” என்று அவன் சந்தேகமாக கேட்க, “எனக்கு இப்போதைக்கு இதுதான் ஹேப்பியான நியூஸ் செழியன்” என்றாள் அவள் முகமெல்லாம் புன்னகையோடு!
செழியன் அவளை புரியாமல் பார்க்கும்