top of page

Kadal Va.Radha?9

காதல்-9


அவன் விசாரணைக்காக உள்ளே அழைக்கப்பட, அந்த விசாரணைக் குழுவின் உறுப்பினர்கள் முன்பாக சென்று மரியாதை நிமித்த முகமன்களுக்கு பின் உட்கார்ந்தான் கண்ணன்.


சில நிமிடங்களுக்கு அந்த வழக்கு சம்பந்தமான மருத்துவ அறிக்கைகளையும் மற்ற ஆவணங்களையும் மேலோட்டமாக பார்த்துவிட்டு, "நீங்க குடுத்த ராங் ட்ரீட்மெண்டாலதான் மிஸ்டர்.சிகாமணிங்கற பேஷண்ட் இறந்திருக்கார்னு அவரோட சன் உங்க பேர்ல போலீஸ் கம்பளைண்ட் கொடுத்திருக்கார்.


அதைத் தொடர்ந்து கோர்ட்ல இதை விசாரிக்கச் சொல்லி எங்களுக்கு கைடன்ஸ் கொடுத்திருக்காங்க.


வி திங்க் யூ ஆர் ஏபுல் டு கோஆபரேட் வித் அஸ்" என்று ஒருவர் சொல்ல, "யா... ஸ்யூர் டாக்டர்" என்றான் கண்ணன்.


"வெல்... இது வரைக்கும் உங்க பேர்ல எந்த வித ப்ளாக் ரிமார்க்ஸும் இல்ல;


நாங்க கேள்விப்பட்ட வரைக்கும் உங்க பேர்லயும்; நீங்க சார்ந்திருக்கற ஹாஸ்பிடல் பேர்லயும் பப்ளிக்ல நல்ல ஒப்பீனியன் இருக்கு!


தென் ஏன் இந்த சறுக்கல்?


உங்க சைட்ல இருந்து என்ன சொல்ல வறீங்க டாக்டர் ஆனந்த கிருஷ்ணன்?" என அந்த குழுவின் மற்றொரு உறுப்பினர் கேட்க தன் இருக்கையிலிருந்து நிமிர்ந்து உட்கார்ந்தவன், "சிவியர் பெயின் இன் லெஃப்ட் இயர், ரிங்கிங் சவுண்ட் இந்த ப்ராப்லம்ஸ்காக ட்ரீட்மெண்ட்க்கு வந்தார் அந்த பேஷண்ட்.


யூசுவல் ப்ரிலிமினரி டெஸ்ட் பண்ணி பார்க்கும்போது அவருக்கு இயர் ட்ரம்ல ஃப்ளூயிட் கலெக்ஷன் இருக்கறத டயக்னைஸ் பண்ணேன்.


அவருக்கு இனிஷியலா ஓரல் அன்டிபயாட்டிக்ஸ் ப்ரிஸ்க்ரைப் பண்ணேன் வித் பெயின் கில்லர்ஸ்” என அவருக்குக் கொடுக்கப்பட்ட மருந்துகளின் விவரங்களைச் சொன்னவன், “பட் அதுக்கு கண்ட்ரோல் ஆகல; தென் ஒன்லி இன்சிஷன் அண்ட் ட்ரைனேஜ் ப்ரொசீஜர்க்கு போனது!


அவரோட சீ.டி அண்ட் அதர் லேப் ரிப்போர்ட்ஸ் எல்லாமே உங்க பார்வைக்கு வந்திருக்கும்னு நினைக்கறேன்" என அவன் சொல்ல ஆமோதிப்பாக தலை அசைத்தார் எதிரே உட்கார்ந்திருந்தவர்.


"தென் அந்த ப்ரொசீஜர் பத்தி பேஷண்ட்டுக்கும் அவங்க சன்னுக்கும் க்ளியர் எக்ஸ்ப்ளனேஷன் கொடுத்திருக்கோம்.


அண்ட் தட் ப்ரொசீஜர் வாஸ் டன் பர்ஃபெக்ட்லி!


அதுவரைக்கும் ஹி வாஸ் குட்.


அண்ட் தென் **** அன்டிபயாட்டிக்ஸ் மெடிசின்ஸ் ஐ.வீல கொடுத்தோம்!


அதுக்கு பிறகுதான் அவருக்கு பிட்ஸ் வந்திருக்கு.


அதனால ரெஸ்ட்லெஸ் ஆன அவரோட ஃபேமிலி மெம்பர்ஸ் அவரை எங்க ஹாஸ்பிடல்ல இருந்து ஏ அண்ட் பீ ஹபிடல்ஸ் வேளச்சேரி பிரான்ச்க்கு ஷிஃப்ட் பண்ணிட்டாங்க.


அங்கதான் அவர் இறந்துபோனார்" என அவன் விளக்கமாகச் சொல்ல, "அதனால அவரோட டெத்துக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லனு சொல்றீங்களா டாக்டர் ஆனந்தகிருஷ்ணன்!


அவருக்கு நீங்க கொடுத்த மெடிசின் அலர்ஜி ஆகியிருக்குன்னு போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்ல க்ளியரா இருக்கு யூ நோ" என ஒருவர் வேகமாய் கேட்க,


"அஃப்கோர்ஸ்! நான் அதை மறுக்கல; நிச்சயமா அவருக்கு மெடிசின் அலர்ஜி ஆகி இருக்கு; அது அவரோட பிரைன பாதிச்சிருக்கு! ஆனா அதுக்கும் எங்க ட்ரீட்மெண்ட்க்கும் எந்த சம்பந்தமும் இல்ல?" என்றவன் "அவருக்கு கொடுத்த அன்டிபயாட்டிக்ஸ் எஸ்பயரி ஆகி இருந்தது!


அதைத் தெரியாமல் அவருக்கு செலுத்தி இருக்கோம்!" என்றவாறு தான் தனிப்பட்ட முறையில் கொண்டுவந்திருந்த கோப்பை அவர்களிடம் நீட்டினான்!


குழப்பத்துடன் அவர் அதை வாங்கியவர், "என்ன டாக்டர் கிருஷ்ணன்! உங்களோட நெக்லீஜென்ஸ்ல ஒரு உயிரே போயிருக்கு? இப்படி பொறுப்பில்லாம பதில் சொல்றீங்க?" என்றவாறு அவர் அதைப் பிரித்தார்.


"எஸ் டாக்டர்! எனக்கும் அதுல வருத்தம்தான்.


ஒரு டாக்டரா ஐ அஷேம்ட் அபவ்ட் தட்.


ஆனா அந்த மெடிசின்ஸ் பிரெஷ் பேக்ல, புது மேன்யுபாக்ச்சரிங் டேட்டோட; ஒரு போலியான எஸ்பயரி டேட்டோட இருந்தது.


அதைத் தனிப்பட்ட முறைல நாங்க ஆதண்டிக்கலேட் லேப் ஒண்ணுல கொடுத்து டெஸ்ட் பண்ணி இருக்கோம்!


அதுக்கான ப்ரூஃப் இந்த ஃபைல்ல இருக்கு. அந்த மெடிசின்சோட சாம்பிள் இதுல இருக்கு!


அந்த லாட்ல வந்த எல்லா மெடிஸின்ஸும் எங்க கிட்ட அப்படியே ஸ்டாக்கா இருக்கு!


இந்த மெடிசின்சை எங்களுக்கு சப்ளை பண்ணது ஒரு ப்ராப்பர் லைஸன்ஸ்ட் ஏஜென்சி!


அணுவிந்த் ஃபார்மாஸ் ப்ரைவேட் லிமிடெட் அப்படிங்கற கவர்மண்ட் அப்ரூவ்ட் கம்பெனிதான் அதை மேன்யுபாக்ச்சர் பண்ணி இருகாங்க!


நம்பாம நாங்க என்ன பண்ணுவோம்? அந்த மெடிசினை யூஸ் பண்ணோம்! அது ஆபத்துல போய் முடிஞ்சது!


இதுல என்னோட தப்பு எங்க இருக்குனு சொல்லுங்க" என அவன் நிமிர்வுடன் கேள்வி கேட்க வாய் அடைத்து போயினர் விசாரணை குழுவின் உறுப்பினர்களாக இருந்த மருத்துவ வல்லுநர்கள் மூன்று பேரும்.


மேலும் இரண்டு மருத்துவமனைகளின் பெயரைக் குறிப்பிட்டவன், "அங்க நடந்த டெத்சுக்கும் இந்த லாட்ல வந்த மெடிசின்ஸ்தான் காரணம்!


அதுக்கும் ப்ரூஃப் இந்த ஃபைல்ல இருக்கு!


இனிமேல் நீங்கதான் டிசைட் பண்ணனும்" என கண்ணன் தெளிவாகக் கூற, "ஓகே டாக்டர்! நீங்க இப்ப போகலாம்! சூன் எங்க அறிக்கை வரும்" என்று அதில் ஒருவர் சொல்ல, நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் கண்ணன்.


வெளியில், கலவரம் நிறைந்த முகத்துடன் அவனுக்காகக் காத்திருந்த ராதா அவனைப் பார்த்ததும், "கண்ணன்!" என்றவாறு எழுந்துவந்து அவனது கையை பற்றிக்கொள்ள, அவளது கையில் பிசுபிசுத்த வியர்வை அவள் மனதில் குடியிருக்கும் பயத்தின் அளவை அவனுக்குச் சொல்லாமல் சொல்லியது.


சுற்றுப்புறம் உணர்ந்தாலும் அவளது கையை உதற மனமின்றி அப்படியே வெளியில் வந்தவன், "வரும்போது எப்படி ராதா வந்த?" என்று கேட்டான் கண்ணன்.


"நான் இருக்கற நிலைமைல என்னால ட்ரைவ் பண்ணமுடில கண்ணன்!


கால் டாக்சிலதான் வந்தேன்!


என்னை ஆத்துல ட்ராப் பண்ணிடுங்கோ!" என்றாள் ராதா படபடப்புடன்!


உள்ளே நடந்த விசாரணை பற்றி அவளும் கேட்கவில்லை.


அவனும் ஒன்றும் சொல்லவில்லை!


பிடித்த கரத்தை விடாமல் வாகனம் நிறுத்தும் பகுதிக்கு வந்தவன் வாகனத்தை உயிர்ப்பிக்க, அவள் வந்து அருகில் உட்கார்ந்தாள்.


அவளுடைய இல்லம் நோக்கி அந்த வாகனம் பயணப்பட்டது.


***


சில தினங்களிலேயே, சேஷாத்ரி தன் செல்வாக்கைப் பயன்படுத்தி மேலிடத்தில் அழுத்தம் கொடுத்ததால், அவர்கள் பக்கம் இருந்த நியாயமும் துணை புரிய அந்த நோயாளி இறந்ததில் கண்ணனோ அவர்களுடைய மருத்துவமனையோ எந்த விதத்திலும் காரணம் இல்லை என மேற்கொண்டு அவன் மருத்துவராகச் சேவை செய்வதில் எந்த சிக்கலும் இல்லாத வண்ணம் அவனை விடுவித்தனர்.


கண்ணன் குடும்பத்திலும் சரி சேஷாத்திரி குடும்பத்திலும் சரி நீண்ட நாட்களுக்குப் பிறகு எல்லாருமே நிம்மதி பெருமூச்சு விட்டனர்.


சம்பவம் நடந்த தினம் மருத்துவமனை சென்று அங்கே இருந்த உள்நோயாளிகளை சந்தித்து அவர்களுடைய பயத்தைப் போக்கி, நிலைமையைச் சற்று சரிசெய்துவிட்டு சேஷாத்ரிக்கு நம்பிக்கையும் தைரியமும் கொடுத்துவிட்டு வந்தவன்தான் அதன் பின் அங்கே செல்லவே இல்லை கண்ணன்.


விசாரணைக்குப் பின் சில நாட்கள் தேர்த்துறை சென்று அங்கே இருந்துவிட்டு வந்தவன் அந்த நல்ல செய்தியைச் சொல்ல சேஷாத்ரியை தேடி அங்கே வந்தான்.


அவனை அங்கே கண்டதும் எழுந்துவந்து அவனை ஆற தழுவிக்கொண்டவர், "ரொம்ப சந்தோஷம் டாக்டர் ஆனந்த கிருஷ்ணன்!" என்றார் மகிழ்ச்சி பொங்க.


'சீக்ரமாவே பெரியவரை பார்த்து முகுர்த்தத்துக்கு நாள் பார்க்க சொல்லணும்!


பெத்த பொண்ணை இவன் கைல ஒப்படைக்கறதுக்கு முன்னடி இந்த ஹாஸ்பிடல்ல இவன் கைல ஒப்படைக்கணும்!


அப்பத்தான் எனக்கு நிம்மதி' என மனதில் எண்ணியவர், "நான் ஒரு பிள்ளையை பெத்திருந்தாகூட அவன் இப்படி செஞ்சிருப்பான்னு சொல்ல முடியாது!


நீ அதைவிட ஒரு படி மேல போயிட்ட!


நீ ரொம்ப நன்னா இருப்படா கண்ணா!" என்றார் அவர் மனநிறைவுடன்.


"அப்படிலாம் ஒண்ணும் இல்ல குரு! ரொம்ப புகழாதீங்கோ" என்றான் அவன் அடக்கமாக.


"உனக்கு தெரியாதுடா; நான் நிஜமாத்தான் சொல்றேன்" என்றவர், "மாமிதான் ரொம்பவே சந்தோஷமா இருக்கா! நீ ஆத்துக்கு போன உடனே உனக்கு ஸ்பெஷலா ஏதாவது கொடுத்து அனுப்புவா பாரு!" என உற்சாகமாகச் சொன்னார் அவர்.


"சரி குரு! நான் கிளம்பறேன்!" என அவன் விடைபெற, "அஸ் யூசுவல் நாளைக்கு ட்யூட்டிக்கு வந்துடுடா!" என்றார் அவர் உரிமையுடன்.


"நிச்சயமா குரு" என்று புன்னகைத்தவாறு அங்கிருந்து கிளம்பினான் கண்ணன்.


நேராக அவன், அவன் குடி இருக்கும் 'பிளாட்'டுக்கு வர, கதவு திறந்தே இருந்தது.


யோசனையில் நெற்றி சுருங்க உள்ளே நுழைந்தவன் அங்கே ராதாவை காணவும், "உன்ன இங்க வரவேண்டாம்னு சொல்லி இருக்கேன் இல்ல!


ஏன் வந்த?" என கண்டனமாகக் கேட்க,


'அட ராமா! வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறிடுத்தே!' என மானசீகமாகத் தலையில் கை வைத்தவள், "நீங்க என்னை இங்க வராதன்னு சொல்றீங்கோ!


அம்மா என்னடானா, 'டீ ராதா நல்ல சமாச்சாரம் வந்திருக்கேன்னு திரட்டிப்பால் பண்ணேன்.


அது கண்ணனுக்கு ரொம்ப பிடிக்கும்!


மொதல்ல இதை போய் அவன்கிட்ட குடுத்துட்டு வா'ன்னு சொல்றா!


நான் யார் சொல்றதை கேக்கறது?" என அவள் பாட்டாய் பாட, அதில் சிரிப்பு வந்தது அவனுக்கு.


"உங்கம்மா அப்பாவி! உன்னை மாதிரி வில்லியா என்ன" அவன் கிண்டல் தொனிக்கக் கேட்கவும், "பாவி கண்ணா! நானா வில்லி! நான் உங்களோட ஹீரோயினாக்கும்!" என சிரித்துக்கொண்டே சொன்னவள், "எப்பவுமே என் மேல உங்களுக்கு காதல் வராதா?" எனப் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு அவனிடம் கேட்டாள் ராதா.


அவள் நேராக அப்படிக் கேட்கவும், அவளுடைய கண்களின் ஆழத்திலும் முகத்தின் சிவப்பிலும் தன்னை மறந்து அவன் ஏதோ சொல்ல வர அவளுடைய கைப்பேசி இசைத்தது.


அதில் இருவருக்குமே எரிச்சல் மூள, "சொல்லு அணு! இந்த நேரத்துல போன் பண்ணி இருக்க! எதாவது முக்கியமான விஷயமா" என்று கேட்டாள் ராதா!


"ராதா! அணுவிந்த் பார்மா கம்பெனில நானும் உன்னோட அத்திம்பேரும்தான் முக்கியமான ஷேர் ஹோல்டேர்ஸ்!'


அந்த கம்பெனி ஏதோ ஸ்கேம்ல மாட்டியிருக்காம்!


எல்லா டீவீலயும் வந்ததுண்டு இருக்கு!


எனக்கு அதை பத்தி ஒண்ணுமே தெரியாதுடி!


உங்க அத்திம்பேர் சொன்னாரேன்னு எங்கெங்கேயோ கையெழுத்து போட்டுத் தொலைச்சுட்டேன்!


எனக்கு பயமா இருக்குடி ராதா!


அப்பா கிட்ட சொல்லி நீதான் எப்படியாவது எங்க ரெண்டுபேரையும் காப்பாத்தணும்" என்றாள் அவளுடைய தமக்கையும் அரவிந்தனின் மனைவியுமான அனுபமா!


உறைந்து போய் நின்றாள் ராதா!


அங்கே குடிகொண்டிருந்த அமைதியில் எதிர்முனையில் பேசிய அனைத்தும் தெளிவாகச் செவிகளைத் தீண்ட அதிர்ந்துபோனான் கண்ணன்!


அதே நேரம் கலிபோர்னியாவின் ஒரு உயர்ரக 'பார்'ரில் உட்கார்ந்துகொண்டு பதட்டத்துடனும் பயத்துடனும் அபிமன்யுவிடம் படபடத்துக்கொண்டிருந்தான் அரவிந்தன்.


"நீ சொன்னதை நம்பித்தானே நீ சொன்ன இடத்துல எல்லாம் கையெழுத்து போட்டோம்!


இப்ப இப்படி எங்களை சிக்க வெச்சுட்டியே!" என அபிமன்யுவைக் குற்றம்சாட்டினான் அவன்.


"இட்ஸ் அன் ஆக்சிடென்ட்!


நானே எதிர்பார்க்காம நடந்தது.


என்ன பண்ண சொல்ற" என வெகு இயல்பாகக் கேட்டவன்,


"இண்டியால எல்லாம் மெடிசின்ஸ டாக்டர் ப்ரிஸ்கிரைப் பண்ணனும்னு அவசியமே இல்ல!


எதாவது ஒரு மெடிக்கல் ஸ்டோர்ல போய் எனக்கு இப்படி ஒரு ப்ராப்லம் இருக்குன்னு சொன்னா உடனே மெடிசினை கொடுத்துடுவாங்க!


இப்படி பொறுப்பில்லாம பெரியவங்கதான் மெடிசின் எடுத்துக்கறாங்கன்னு பார்த்தால் சின்ன குழந்தைகளுக்கும் இப்படி வாங்கி கொடுக்கறாங்க.


எக்ஸ்பயரி டேட் பத்தி யார் கவலை படறாங்க!


ரெண்டு ரெண்டு டேப்லெட்டா வாங்கி போடும்போது அதோட பேரே முழுசா தெரியாது; இதுல எக்ஸ்பயரி டேட்டை பார்க்க முடியும்.


கண்மூடித்தனமாக நம்பிக்கையின் பேர்ல மெடிக்கல் ஷாப்ல கொடுக்கற மருந்தை வாங்கிட்டு போய் அப்படியே சாப்பிட்டு வைப்பாங்க!


என்ன; இப்பல்லாம் நம்ம மக்கள் கொஞ்சம் உஷாரா இருக்க ஆரம்பிச்சுட்டாங்க!


சிலபேர் நியூ ஸ்டாக் கேக்கறாங்க!


ஓல்ட் ஸ்டாக் மெடிஸின்ஸ் அப்படியே நின்னு போய் எக்ஸ்பயரி மெடிசினோட ஸ்டாக் அதிகமாகுது.


அதைத்தான் ரீசைக்கில் பண்ணி புது ஸ்டாக்கோட கலந்து அனுப்பறோம்.


என்னோட ஏ அண்ட் பீ ஃபார்மால தயாராகி இப்படி மீந்துபோன மருந்துகளை ரீசைக்கில் பண்றதுக்காக ஆரம்பிச்ச கம்பெனிதான் உன்னோடது!" என அவன் சர்வ சாதாரணமாகச் சொல்ல மிரண்டு போனான் அரவிந்தன்.


"ஐயோ! என்ன சொல்ற அபி! இதுல எவ்வளவு உயிர் போகும்?" என அவன் உள்ளே போன குரலில் கேட்க,


"ப்ச்... உயிரெல்லாம் அப்படி ஒண்ணும் பட்டுனு போகாது!


என்ன வியாதி கொஞ்சம் லேட்டா குணமாகும்; இல்லன்னா அப்படியே இருக்கும்!


அதனால நமக்கு என்ன நஷ்டம்! ஒரு விதத்துல லாபம்தான்!


ஏன்னா இன்னும் அதிக டோஸேஜ் எடுப்பாங்க!" என்றான் அவன் அலட்சியமாக.


"என்ன அபி இப்படி சொல்ற; இப்ப மூணு பேர் செத்து போயிருக்காங்களே! அதுக்கு என்ன சொல்ற?" என அவன் கவலையுடன் கேட்க, "அது ரேர் கேஸ்! இதுக்கெல்லாம் கவலை பட்டா நாம சர்வைவ் ஆக முடியாது" என்றான் அர்ஜுன்.


என்னதான் அவன் தனக்கு நண்பனாக இருந்தாலும் நெருக்கமானவனாகத் தன்னை காட்டிக் கொண்டாலும் அவன் தன்னை காட்டிலும் மிக உயரத்தில் இருப்பவன்.


தன் சுய லாபத்திற்காக எந்த எல்லை வரையிலும் செல்பவன் என்பதை அறிந்திருக்கவும் அவனிடம் பேசவே அச்சமாக இருந்தது அரவிந்தனுக்கு.


"இப்ப என்னோட நிலைமை; பாவம் அனுவையும் இதுல மாட்டிவிட்டிருக்கோமே?" எனத் தயக்கத்துடனே கேட்டான் அவன்.


ஒரு இகழ்ச்சியானப் புன்னகையுடன், "நான் நினைச்சா இப்ப கூட உங்க ரெண்டுபேரையும் இதுல இருந்து காப்பாத்த முடியும்!" என அபிமன்யு வெகு அலட்சியமாகச் சொல்ல, "ப்ளீஸ்! அதை முதல்ல செய்" என்றான் அவன் இறைஞ்சுதலாக.


"என்னை பொறுத்தவரைக்கும் எல்லாத்துக்குமே ஒரு விலை இருக்கு அரவிந்த்!" என அபிமன்யு தன் பேரத்தைத் தொடங்க, "என்ன?" என அதிர்ந்தான் அரவிந்தன்.


"எஸ்! இதுக்கு விலை அனுராதாங்கற பெண்ணும் அனுகிரஹாங்கற ஹாஸ்ப்பிட்டலும்!


எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இது ரெண்டும் எனக்கு சொந்தமாகணும்” என அவன் தீவிரமாகச் சொல்ல, "ஐயோ! இதைப் பத்தி என்னோட மாமனார்கிட்ட பேச கூட என்னால முடியாது!


கண்ணாலேயே எரிச்சிடுவார் அந்த மனுஷன்" என அலறினான் அரவிந்தன்!


“அதைப் பத்தி எனக்குக் கவலை இல்ல; உன் மாமனாரை எப்படியாவது கன்வின்ஸ் பண்ணி இதுக்கு சம்மதிக்க வெக்க வேண்டியது உன்னோட தலைவலி!


இல்லனா இண்டியால இருக்கற எதாவது ஒரு ஜெயில்ல நீயும் உன் பொண்டாட்டியும் களி தின்ன வேண்டியதுதான்" என முடித்தான் அபிமன்யு.


செய்வதறியாமல் அரண்டுபோய் உட்கார்ந்திருந்தான் அரவிந்தன்.0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page