மடல் - 26
ஒரு வாரத்திற்கு மேலாக முடிக்கப்படாமல் குவிந்து கிடந்த சென்னை அலுவலக வேலைகள் மொத்தமாகப் போட்டு அழுத்த, சக்தியுடன் ஸ்வராவால் அதிக நேரம் பேச இயலவில்லை.
தினமும் இரவில் மட்டும் ஒரே ஒரு முறை அவனோ அல்லது அவளோ வீடியோ கால் மூலம் அழைத்து சில நிமிடங்கள் மட்டும் பேசி முடித்துக் கொள்வார்கள்.
அவனுடைய அப்பாவிடம் தகவலைச் சொல்லி விட்டான் என்பதை மட்டும் அவளுக்குத் தெரியப்படுத்தி இருந்தான். மற்றபடி அங்கே என்ன நிலவரம் என்று அவன் எதையும் சொல்லவில்லை. ஆக ஏதோ பிரச்சனை என்பதை மட்டும் புரிந்து கொண்டாள். அதற்கு மேல் எதையும் தோண்டித் துருவிக் கேட்டு மனநிலையைக் கெடுத்துக் கொள்ள அவள் விரும்பவில்லை.
இப்படியே நான்கைந்து நாட்கள் செல்ல, வீடியோ காலில் அவளை அழைத்தான் சக்தி.
"ஹாய் மை லவ்" என்றபடி அவள் அந்த அழைப்பை ஏற்க,
"ஹாய் மை லவ், ஒரு ஹேப்பி நியூஸ்" என்றான் குதூகலம் துள்ளிக் குதிக்க.
"வாவ், என்னன்னு உடனே சொல்லு" என்றாள் அந்த உற்சாகத்தைப் பற்றிக் கொண்டு.
"எங்க வீட்ல நம்ம லவ்வ அக்சப்ட் பண்ணிட்டாங்க, நெக்ஸ்ட் வீக், ஆடிப்பெருக்கு வருது இல்ல. அன்னைக்கு எங்க பூர்வீக வீட்டில ஒரு பூஜைக்கு அரேஞ்ச் பண்ணி இருக்காங்க. ஆக்சுவலி இது லேடீஸ் எல்லாம் சேர்ந்து செய்யற பூஜை.
வருஷா வருஷம் இந்தப் பூஜையை ரொம்ப கிரேன்டா செய்வாங்க. அன்னைக்கு எங்க ஃபேமிலி மெம்பர்ஸ் எல்லாரும் எங்க கிராமத்து வீட்டுல கேதர் ஆயிடுவோம்.
ஸோ, அந்த மாதிரி எல்லாரும் ஒண்ணா சேர்ந்து இருக்கிற சமயத்துல நம்ம கல்யாணத்த பேசி முடிச்சிட்டா ஈஸியா இருக்கும்னு பாட்டியும் அப்பாவும், உங்க ஃபேமிலி மெம்பர்ஸ் எல்லாரையும் அங்க வரச் சொல்லி இருக்காங்க. நீ உங்க வீட்ல பேசி எல்லாரையும் அழைச்சிட்டு வந்துடு. நான் பகலவன் கிட்டயும் சொல்லிட்றேன்" என்றான் மகிழ்ச்சி கரை புரண்டோட.
"ஹேய், இது என்னப்பா இப்படி சொல்ற? உங்க வீட்டுப் பூஜன்னு சொல்ற, நீங்க ஃபார்மலா அம்மாவையும் அம்மம்மாவையும் இன்வைட் பண்ண வேண்டாமா?" என்று சற்றுத் தயக்கத்துடன் அவள் கேட்க,
"ஓ இப்படி எல்லாம் வேற இருக்கா, ஐ டோன்ட் நோ தட். ஆனா இதெல்லாம் அவங்க கிட்ட போய் எக்ஸ்பிளைன் பண்ணி உங்க அம்மாவை இன்வைட் பண்ண வைக்கிறது கஷ்டம். ஏன்னா நம்ம கல்யாணத்துக்கு அவங்க கிட்ட ரொம்ப பிரஷர் பண்ணிதான் சம்மதம் வாங்கினேன். ப்ளீஸ், ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட்" என்று கெஞ்சலாகவே அவன் சொல்லவும், மிகவும் சங்கடப்பட்டுப் போனாள்.
எதிர்ப்புறம் அவளது முக மாறுதல்களையும் மௌனத்தையும் படித்தவன், "நான் வேணா எங்க அம்மா கிட்ட சொல்லி உங்க அம்மாவை இன்வைட் பண்ண சொல்லட்டுமா. அவங்க மட்டும்தான் எனக்காகப் பேசுவாங்க" என்றான்.
முகத்தில் பிரதிபலித்த மகிழ்ச்சியுடன், 'சரி' என்பதாக அவள் தலை அசைக்க, "ஓகே மை லவ், டன்" என்று அழைப்பிலிருந்து விலகினான்.
அவள் விஷயத்தை வீட்டில் எல்லோரிடமும் தெரிவிக்க, யார் யார் செல்லலாம் என்பதாக பகலவனுடன் உட்கார்ந்து முடிவு செய்தனர்.
அடுத்த நாளே சக்தியின் அம்மா விசாலாக்ஷி, மல்லிகாவிடம் பேசி அவர்களைப் பூஜைக்கு அழைக்க அதுவரை எல்லாமே நன்றாகதான் நடந்தது.
காவிரி கரையோரம் அமைந்திருந்தது அவர்களது பூர்வீக கிராமம். பரம்பரை வீடு என்று அவன் சொன்னதே, தேக்காலும் பளிங்குக் கற்களாலும் இழைத்து கட்டப்பட்ட ஒரு சிறிய அரண்மனை போன்று இருந்தது.
அவர்களுடைய மிக நெருங்கிய உறவினர் வட்டமே, மாமன் மச்சான் என்று நூறு நூற்றி ஐம்பது பேரைக் கடந்திருந்தது. குறிப்பாக வீட்டுப் பெண்கள் எல்லாம் பட்டுடுத்தி, தங்க வைர ஆபரணங்களுடன் ஜொலிக்க, எந்தப் பக்கம் திரும்பினாலும் ஆடம்பரத்தின் சாயல்தான்.
இவர்கள் சார்பாக மல்லியுடன் கூட, அல்லிக்கொடி, பகலவன், சீராளன், சாந்தா, திலகா மற்றும் அவளது கணவர் மட்டுமே. விசாலாக்ஷி சொல்லியே இருந்ததால் ஸ்வராவையும் கூடவே அழைத்து வந்திருந்தார்கள்.
திருமணத்தைப் பேசி முடிவு செய்த பின்னால் நிச்சயதார்த்தத்திற்கு அனைவரையும் அழைத்துக் கொள்ளலாம் என்கிற முடிவில் இருந்ததால், வேறு யாருக்கும் சொல்லவில்லை.
செல்வச் செழிப்பில் அவர்களுக்கு இவர்கள் ஒன்றும் அவ்வளவு சளைத்தவர்கள் இல்லை என்பதால் பெரிதாக எந்த வித்தியாசமும் தெரியவில்லை என்றாலும் அங்கே இருந்தவர்களின் பரம்பரை தலைக்கணம் இவர்களைச் சற்று இளக்காரமாகத்தான் பார்க்க வைத்தது.
சக்தியுடன் இணைந்து விசாலாக்ஷி மட்டுமே அவர்களை நேரில் வந்து வரவேற்றார். மற்றபடி யாரும் பெரிதாகக் கண்டு கொள்ளக் கூட இல்லை.
சக்தி, அவர்களை நேராகப் பாட்டியிடம் அழைத்துப் போய் அறிமுகப்படுத்தினான்.
ஆளே உள்ளே புதைந்து போகும் அளவுக்கு சொகுசான மெத்தையுடனும் திண்டுகளுடனும் கூடிய ஆடம்பரமான திவானில் தோரணையாக அமர்ந்திருந்தார் எண்பது வயதைக் கடந்த அந்தப் பெண்மணி. வெள்ளைப் புடவை உடுத்தி தங்கத்தில் கோர்க்கப்பட்ட ருத்ராட்ச மாலையை கழுத்தில் அணிந்து நெற்றி முழுவதும் விபூதி பூசி பார்க்கவே பக்திப் பழமாகத் தெரிந்தார்.
காதிலும் மூக்கிலும் வைரம் டாலடிக்க, கையில் ஒரு ஜெபமாலையை உருட்டியபடி, மல்லியையும் ஸ்வராவையும் ஏற இறங்கப் பார்த்தவர், "இந்தப் பொண்ணையா நீ லவ் பண்ற? என்ன இருந்தாலும் கலர் கொஞ்சம் கம்மிதான் இல்ல" என்றார் அவளை மட்டந்தட்டும் தொனியில்.
சக்திக்கு சங்கடமாகிப் போக, ஸ்வராவுக்கோ கோபம் சுறுசுறுவென்று ஏறியது. அல்லியின் முகமும் கடுத்துப் போக, இருவரையும் பார்வையாலேயே அமைதிப் படுத்தினாள் மல்லிகா. மல்லிகாவைப் போலவே, இந்த இகழ்ச்சியை எல்லாம் பொறுத்துக் கொண்டு பகலவனும் முகத்தில் எந்தச் சலனத்தையும் காண்பிக்காமல் நின்றிருந்தான்.
"கிராண்ட் லஞ்ச் ரெடி ஆயிட்டு இருக்கு, பூஜ முடிய எப்படியும் ஒரு மணி ஆயிடும், அதுவரைக்கும் எங்க வீட்டுல நாங்க யாரும் பச்சத் தண்ணிக் கூட குடிக்க மாட்டோம். உங்களுக்கு வேணா ஏதாவது கூல்ட்ரிங்க்ஸ் எடுத்துட்டு வரச் சொல்லட்டுமா?" என்று அந்தப் பெண்மணி இடக்காக உபசரிக்க, எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.
விசாலாட்சி மட்டும் பூஜையில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நிற்க, மற்றபடி அந்தக் குடும்பத்தில் சுமங்கலி பெண்கள் அனைவரும் வரிசையாக அமர்ந்து விளக்கு பூஜை செய்து முடித்து புதுத் தாலிக் கயிற்றைக் கட்டிக் கொண்டார்கள்.
ஸ்வராவின் குடும்பத்தைப் பொறுத்தவரை இதெல்லாம் சற்று விசித்திரமான விஷயம்தான். அமைதியாக வேடிக்கை பார்த்தபடி உட்கார்ந்திருந்தனர். திலகாவின் ஒரு வயதுக் குழந்தை, அங்கிருந்த கூட்டமும் சூழ்நிலையும் பிடிக்காமல் அழுது கொண்டே இருக்க, சமாளிக்க முடியாமல் அவளும் அவர் கணவரும் அவர்கள் தங்கி இருந்த நட்சத்திர விடுதிக்குக் கிளம்பிச் சென்று விட்டனர்.
பூஜை முடிந்ததும் எல்லோரும் எழுந்து அவரவர் கணவரின் காலில் விழுந்து ஆசி வாங்க, வேறு ஒரு பெண்மணி சக்தியின் அப்பாவின் காலில் விழுந்து வணங்கவும் திக் என்றானது மல்லிகாவுக்கு.
மகளைத் திரும்பிப் பார்க்க அவள் முகத்தில் எந்த அதிர்வும் இல்லாமல் இருந்ததால் இது அவளுக்கு ஏற்கனவே தெரியும் என்பதைப் புரிந்து கொண்டாள்.
சில நிமிடங்களில் அவர்களை நோக்கி வந்த சக்தி, "அம்மாவையும் பாட்டியையும் அழைச்சிட்டு வா ராஜ், அப்பா பேசணும்னு சொன்னாங்க" என்று, அவனுடைய பாட்டிக்கு அருகில் போடப்பட்டிருந்த ஒரு நாற்காலியில் தோரணையாக அமர்ந்திருந்தவரிடம் அவர்களை அழைத்துப் போனான்.
சீராளனும் சாந்தாவும் ஓரமாக ஒதுங்கி நின்று கொண்டார்கள்.
"ஆமா எல்லாரும் வந்துருக்கீங்க, ஸ்வராவோட அப்பா எங்க?" என முதல் கேள்வியே அவரிடமிருந்து அமிலமாகச் சிதறியது.
"என்ன சக்தி, உங்க அப்பாவுக்கு என்ன பத்தி தெரியும்தான" என்று ஸ்வரா, முணுமணுப்பாகக் கேட்க, "டேட், நான்தான் ஆல்ரெடி சொல்லி இருக்கேனே" என்று சக்தி இடைப் புகவும், "அத இந்தப் பொண்ணு அவ வாயாலேயே சொல்லட்டுமே" என்றார் குதர்க்கமாக.
முதலில் இதற்கு அவர் சம்மதிக்கவே இல்லை. பிறகு இவனுடைய பிடிவாதத்தில் அரை மனதாக ஒப்புக் கொண்டது போல்தான் தோன்றியது. ஆனால் இப்படி பேசுவார் என்று அவனும் எதிர்பார்க்கவில்லை. பதில் பேச முடியாமல் ஸ்வரா திணறியதைப் பார்த்துப் பதறிப் போனான்.
"ஸோ, உங்க பொண்ணுக்கு அவளோட ஃபாதர் யாருன்னு நீங்க சொல்லல, ரைட்" என்று மல்லியைப் பார்த்துக் கேட்டவர், "ஆக்சுவலி எல்லாரும் உங்களை மல்லிகான்னு கூப்பிடுறாங்க இல்ல, பட் உங்க அபிஷியல் நேம், 'மனோகரி'தான? ஒரு பேர்ல கூட ஏன் இவ்வளவு கன்ஃப்யூஷன்" என்று அடுத்த கேள்வி கேட்க, கை கால்கள் எல்லாம் வெலவெலத்துப் போனது மல்லிகாவுக்கு.
"இட்ஸ் ஜஸ்ட் எ காமன் திங்… நத்திங் மோர் தன் தட்" என பதில் கொடுத்தாள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு.
இதெல்லாம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான் என்பதால் ஸ்வரா, இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனாலும், 'ஏன் இப்படி கேட்கிறார்?' என்று தோன்றியது. பகலவனுக்குமே கொஞ்சம் கொஞ்சமாக மனதிற்குள் கோபம் வளர்ந்து கொண்டே இருந்தது.
“அல்லீஸ் பேரடைஸ், பேருக்கு ஏத்த மாதிரியே ஒரு பாஷ் ரெசிடென்சியல் ஏரியாதான். ஆனா, அதுக்குள்ள நுழைஞ்சா, கவர்மெண்ட்ல கட்டி கொடுப்பாங்களே குடிசை மாற்று வாரிய குடியிருப்பு, அந்த ஃபீல் வருதாமே! அப்படின்னா அங்க குடி இருக்கிறவங்க எல்லாம் *ரி ஆளுங்களா?" என்று எகத்தாளமாகக் கேட்க,
"அங்க இருக்கிறவங்க எல்லாரும் எங்க கம்பெனில வேலை செய்ற ஸ்டாப்ஸ். வழக்கொழிஞ்சு போன ஒரு அவலமான வார்த்தையைச் சொல்லி அவங்களோட ஆரம்ப கால வாழ்க்கையை இப்ப யாரும் விமர்சிக்க வேண்டிய அவசியமே இல்லை. ஏன்னா அடுத்த ஜெனரேஷன் எல்லாம் ரொம்ப நல்லாவே முன்னேறிட்டாங்க" எனப் பதில் கொடுத்தான் பகலவன் கெத்தாகவே.
"இதெல்லாம் கேட்க நல்லாத்தாம்ப்பா இருக்கு, ஆனா, நயன்டீன் நயன்ட்டி எய்ட்ல இதே மனோகரின்ற பேர்ல ஒரு பிரக்னன்ட் லேடி சென்ட்ரல் ஜெயில்ல இருந்தாங்க, அது யாருன்னு, இதோ நிக்கிறாங்களே இவங்க கிட்ட நீயே கேட்டுச் சொல்லேன்" என்றார் மல்லிகாவைச் சுட்டிக் காண்பித்து.
"சக்தி, இது ரொம்ப டூ மச். உங்க அப்பாங்கறதுனால கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்கேன். இல்லனா நடக்கிறதே வேற" என்று தன் கட்டுப்பாட்டை இழந்துச் சீறினான் பகலவன்.
சுற்றி இருந்தவர் அனைவரின் பார்வையும் இவர்கள் பக்கம் வந்துவிட உடம்பெல்லாம் கூசிப் போனது மல்லிகாவுக்கு. பயத்தில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டார் அல்லிக்கொடி.
"உண்மை தெரியாம நீ ரொம்ப ஆடாத சரியா, இவங்களோடது மட்டும் இல்ல, உன்னோடதும் ஒரு மோசமான குற்றப் பின்னணிதான்! இன் ஃபேக்ட், உன்னோட பிறப்பே ரொம்ப கேவலமானது. அதப் பத்தியே உனக்கு தெரியாம மறைச்சி வெச்சிருக்காங்க.”
”இதோ நிக்கறாங்களே உன்னோட பாட்டி, இந்த அம்மாவுக்கு ரெண்டு புருஷன். ஒருத்தன் திருட்டு கேஸ்ல ஜெயிலுக்குப் போனவன். இன்னொருத்தனதான் இந்த அம்மாவே போட்டுத் தள்ளிடுச்சு. அதனால ஏழு வருஷம் ஜெயில இருந்துட்டு வந்துது. இதுல என்ன கொடுமன்னா" என்று அவனுடைய பிறப்பை பற்றிச் சொல்ல வந்தவர் அதற்கு மேல் பேச அருவருத்துக்கொண்டு, "இதையெல்லாம் நான் ஏன் உன்கிட்ட சொல்லணும், இதுங்க கிட்டயே கேட்டுத் தெரிஞ்சுக்கோ" என்று சொல்லிவிட்டு ஒரு வார்த்தை கூட எதிர்த்துப் பேச முடியாத அளவுக்கு எதிரே நின்றவர்களை உணர்வு ரீதியாகப் படுமோசமாக வீழ்த்தினார்.
"பிசினஸ்னு வரும்போது எனக்கு உங்களைப் பத்தின பேக்கிரவுண்ட் எதையும் பெருசா தெரிஞ்சுக்கணும்னு தோனல. ஆனா என் பையன் லைஃப்னு வரும்போது, நான் இதெல்லாம் எப்படி இன்வெஸ்டிக்கெட் பண்ணாம இருக்க முடியும்?
உங்க தொழிலை எப்படி நீங்க ஆரம்பிச்சீங்களோ, அதுக்கு மூலதனமா நீங்க எதைப் போட்டீங்களோ அதைப் பத்தி எல்லாம் எனக்கு அக்கற இல்ல, ஆனா பணம் சம்பாதிச்சுட்டா மட்டும் உங்களால எங்களுக்கு ஈக்வலா வர முடியாது. எல்லாத்துக்கும் பாரம்பரியம்ணு ஒண்ணு இருக்கணும். சோத்துக்கே வழியில்லன்னா கூட குடும்ப பெருமன்னு ஒண்ணு இருந்திருந்தா, உங்க பொண்ண சந்தோஷமா ஏத்துட்டு இருந்திருப்பேன், ஆனா இப்படி ஒரு சாக்கடைல போய் விழ என் பையன விடவே மாட்டேன்" என்று மூச்சு விடாமல் சிவப்பிரகாசம் என்கிற அந்த அகங்காரம் பிடித்த மனிதர் பேசி முடிக்க, உடல் கூசிப் போய் ஒடுங்கி நின்றாள் மல்லிகா.
பிரச்சனை வரும் என்று தெரியும், ஆனால் இந்தக் குறுகிய கால அவகாசத்திற்குள் இவர் இப்படி ஆணிவேர் வரை போய் பிடுங்கிப் பார்ப்பார் என்று இவள் கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்கவில்லை.
எதிர்த்து ஒரு வார்த்தை பேசக் கூட திராணி இல்லாமல் அப்படியே நெஞ்சை பிடித்துக் கொண்டு தரையில் அமர்ந்து விட்டார் அல்லிக்கொடி. பகலவனுமே அதிர்ச்சியில் வாயடைத்துப் போய் நிற்க, "போதுமா சக்தி, இந்த அளவுக்கு எங்கள கூப்பிட்டு வச்சு நாலு பேருக்கு முன்னால அசிங்கப்படுத்துற அளவுக்கு கொண்டு வந்து விட்டிருக்க பாரு. எங்க பக்கம் இவ்வளவு ட்ராபேக்ஸ் இருக்குன்னுதான் முன்னாடியே கண்டுபிடிச்சிட்டாரே, உங்க அப்பாக்வுகு இதுல இஷ்டம் இல்லனா, இஷ்டம் இல்லைன்னு முன்னாலயே சொல்லித் தொலைச்சிருக்கலாமே. எங்களைத் தனியா கூப்பிட்டுக் கூட பேசி இருக்கலாம். ஆனா இத்தன பேருக்கு எதிர நிக்க வச்சு எங்கள அவமானப்படுத்தினது எதுக்குன்னு நினைக்கற, இனிமேல் இந்த மாதிரி வந்து நிற்கிற துணிச்சல் எங்களுக்க வரவே கூடாதுங்கறதுக்குதான?" என்று பெண் புலியாக ஸ்வரா கர்ஜிக்க,
"சீ இந்த மாதிரி, நம்ம குடும்பத்து பொண்ணுங்க யாராவது எனக்கு எதிரா நின்னு பேச முடியுமா? இப்படி ஒரு மோசமான *ட்ச்ச லவ் பண்ணிட்டுதான் நீ என்னை எடுத்துட்டு நின்னியா சக்தி" என்று அவர் மகனை நோக்கிக் கேட்க, உச்ச பச்ச அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை அவனுக்கு. விழிகளை மட்டும் சுழற்றி, ஒரு இளக்கார சிரிப்பை வாய்க்குள் அடக்கியபடி சுற்றிலும் கூடி நின்ற அவனது சொந்தங்களைப் பார்த்துக் கல்லாகிப் போய் அவன் அப்படியே ஸ்தம்பித்து நிற்க, இடி விழுந்த மரமாக சரிந்து போயிருந்த பெண்கள் இருவரையும் ஸ்வராவும் பகலவனுமாக ஆளுக்கு ஒருவர் தாங்கிப்பிடித்து அங்கிருந்து வெளியில் அழைத்து வந்தனர்.
பாரம்பரியம் மிக்க அந்தப் பரம்பரை மாளிகை அவர்களைப் பார்த்து பல் இளித்துச் சிரித்தது.
***
நேராக அல்லிக்கொடியை வழியில் தென்பட்ட ஏதோ ஒரு மருத்துவமனைக்கு அழைத்துப் போய், உச்சபட்சமாக எகிறிப்போயிருந்த அவரது இரத்தக் கொதிப்பைக் கட்டுக்குள் கொண்டு வந்த பிறகு ஊர் திரும்பினார்கள்.
அவர்களுடைய பிறப்பைப் பற்றிய உண்மைகளை மட்டும் இவர்கள் முன்னமே சொல்லியிருந்தால், இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாமே, இவ்வளவு அவமானத்தையும் பொறுத்துக் கொண்டு இப்படி அமைதியாகத் திரும்பி வரவேண்டிய சூழல் உருவாகி இருக்காதே என்கிற ஆதங்கம் மட்டும் இருவருக்குமே இருந்தது.
ஆனாலும், ஸ்வராவாகட்டும் பகலவனாகட்டும் மல்லியையோ அல்லிக்கொடியையோ இது சம்பந்தமாக ஒரு வார்த்தைக் கூட கேட்கவில்லை.
அவர்கள் வாழும் வாழ்க்கை முறையை முழுமையாக அருகில் இருந்து பார்த்து உள்வாங்கி உணர்ந்து கொண்டவர்கள் அல்லவா?! அறத்துக்குப் புறம்பாக இவர்கள் எதுவும் செய்திருக்க மாட்டார்கள் என்கிற நம்பிக்கை இருவருக்குமே முழுமையாக இருந்தது. அதேபோல இது போன்ற விஷயங்களை எல்லாம் மான அவமானத்துடன் தொடர்புபடுத்தித் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்ளவில்லை இருவரும். அதற்கான பக்குவத்தைக் காலம் அவர்களுக்கு ஏற்கனவே கடத்தி இருந்தது.
அவர்களாக வாய் திறந்து கேட்கவில்லை என்றாலும் கூட, வழக்கம் போல, ஓரிரு தினங்கள் தனிமையில் அழுது தீர்த்துத் தெளிந்து வந்த மல்லிகாதானகவே இருவரையும் அழைத்து ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் முழுமையாகச் சொல்லிவிட்டாள்.
தன்னைப் பற்றிய அனைத்து உண்மைகளையும் சொன்னவள், ஊர், பேர் எதையும் மகளிடம் வெளிப்படுத்தவில்லை. அதேபோலதான் செய்ததாக நினைத்துக் கொண்டிருக்கும் கொலையைப் பற்றி மகளிடம் சொல்லும் தைரியம் மட்டும் அவளுக்கு வரவே இல்லை.
எது எப்படியோ ஒருவருக்கு ஒருவர் அனுசரணையாக ஆதரவாக இருந்துகொண்டு தங்களைத் தாங்களே தேற்றிக் கொண்டார்கள். அவர்களுக்கான எதார்த்த வாழ்க்கை என்பது அவர்களைத் தொடர்ந்து ஓட வைத்துக் கொண்டே இருத்தது.
மும்பை வந்து தொழிலைக் கவனிக்கும் மனநிலையில் இருவருமே இல்லை என்பதை மட்டும் ஒரே ஒரு முறை சக்தியை அழைத்து பகலவனே சொல்லி இருந்தான்.
அதற்குப் பின் சில தினங்கள் சக்தியிடமிருந்து எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் இருந்தது.
ஸ்வராவுக்கோ, எப்படியாவது இந்த உளவியல் தாக்குதலிலிருந்து வெளியில் வந்துவிட வேண்டும் என்கிற முனைப்பு மட்டும் இருந்து கொண்டிருக்க, தன்னைத் தானே சமன்படுத்திக் கொள்ள போராடிக் கொண்டிருந்தாள்.
ஒரு தெளிவுக்கு வர முடியாமல் அவள் தவித்துக் கொண்டிருக்க திடீரென்று ஒரு நாள் சக்தியிடமிருந்து அழைப்பு வந்தது. அதை ஏற்காமல் அவள் தவிர்த்தாலும், அவன் திரும்பத் திரும்ப அழைக்கவே, வேறு வழியில்லாமல் எடுத்துப் பேசினாள்.
அவன் தங்கி இருக்கும் நட்சத்திர விடுதியின் பெயரைச் சொன்னவன், "எனக்கு இப்ப உடனே உன்ன பார்த்துப் பேசி ஆகணும், அதுவும் தனியா! உடனே கிளம்பி இங்க வா" என்று அவளை நிர்பந்திக்க,
"இதுக்கு மேல நமக்குள்ள எதுவும் இருக்குன்னு நினைக்கிறியா, சக்தி? நான் நிச்சயமா வரமாட்டேன்" என்று வெட்டி விடுவது போல சொன்னவளிடம், அழைப்பைத் துண்டித்து விட்டு உடனே வீடியோ காலில் வந்தவனின் கையில் ஒரு சிறிய ரக துப்பாக்கி இருந்தது.
"நீ இப்ப உடனே இங்கக் கிளம்பி வரலன்னா, அப்படியே சுட்டுட்டுச் செத்துடுவேன்" என்று பித்துப்பிடித்தவன் போலச் சொல்ல, பதறிப்போய், வேறு வழி இல்லாமல் அவனைப் பார்க்கச் சென்றாள்.
அவன் தங்கி இருந்த அறைக்குள் நுழைந்த நொடி, வெறி பிடித்தவன் போல பாய்ந்து அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான். மூர்க்கமாக அவனிடம் விலக முடியாது என்பதை உணர்ந்தவளாக சில நிமிடங்கள் அவனுடைய அணைப்பிலேயே அடங்கி இருக்க, நேரம் செல்லச் செல்ல தானே இளகி அவளை விட்டு விலகினான்.
"ஸோ, ஸ்டில் நீ என்ன லவ் பண்ற அப்படித்தான. பட் இந்த டெசிஷனுக்கு வரதுக்கு உனக்கு இவ்வளவு நாள் தேவைப்பட்டுது இல்ல" என்று அவள் இளக்காரமாகக் கேட்க, "நோ ராஜ், உன்னை என்னால பிரியவே முடியாது. நீ இல்லாம எனக்கு ஒரு வாழ்கையே இல்ல. அதுல எனக்கு எப்பவுமே எந்த டவுட்டும் கிடையாது. பட், என்னால என்னோட அப்பாவ தாண்டி வர முடியல அதுதான் உண்ம" என்று பதில் சொல்ல,
"அப்படி இருக்கும்போது இப்ப என்னை எதுக்கு இங்க கூப்பிட்ட" என்று அவனது முகத்தை நேராக பார்த்துக் கேட்டாள்.
"உன்ன நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா, என்ன எங்க அப்பாவோட அஃபிஷியல் வாரிசு இல்லன்னு டிக்ளேர் பண்ணிடுவேன்னு மிரட்டுறாரு. எல்லா ப்ராப்பர்ட்டீஸையும் என்னோட ஹாஃப் சிஸ்டர் பேருக்கு எழுதிடுவாராம். ஸோ, எனக்கு யோசிக்க கொஞ்சம் டைம் தேவைப்பட்டுது" என்றவனை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்தவள்,
"அப்படின்னா அதுக்கு ஓகே சொல்லிட்டியா, சக்தி? அதனாலதான் என்ன மீட் பண்ண வந்திருக்கியா?" என்று கேட்க,
"அது எப்படி ராஜ் முடியும்? ரியலி இட்ஸ் எ டஃப் டெசிஷன், யூ நோ… ஆரம்பத்துல இருந்தே இந்த மாதிரி பழகிட்டதனால உனக்கு இது நார்மலா இருக்கலாம். ஆனா எனக்கு இது ரொம்ப டஃபா இருக்கு" என்று சொல்ல,
"இப்ப என்னதான் பண்ணலாம்னு சொல்ற நீ" என்று எரிந்து விழ,
"கூல் ராஜ், நான் சொல்றத டென்ஷனாகாம கேளு, ப்ளீஸ்" என்று மிகவும் கெஞ்சலாகச் சொன்னவன்,
"நமக்கு இப்போதைக்கு ஒரே ஒரு சாய்ஸ்தான் இருக்கு" என்று சொல்லிவிட்டு தயக்கத்துடன் அவளைப் பார்த்தபடி, "பேசாம நாம லிவிங் இன் ரிலேஷன்ல கண்டினியூ பண்ணலாமா. அப்படி மட்டும் நடந்தா எங்க அப்பாவால என்ன எதுவும் செய்ய முடியாது. நாம வெட்டிங்னு சொன்னாதான் உன்னோட பர்த் பத்தின தேவையில்லாத பிரச்சனை எல்லாம். நமக்கு பிடிச்ச மாதிரி நம்ம வாழ்ந்துட்டு போனோம்னா யாரும் நம்மள எந்த கேள்வியும் கேட்க முடியாதுதான?" என்று அவன் சொல்லி முடிக்க, அடுத்த நொடி அவனை ஓங்கி அறைந்திருந்தாள் ஸ்வரா.
"ராஜ்" என்று அவன் பதற,
"கொன்னுடுவேன் ராஸ்கல், எங்க அம்மா கிட்ட என்னோட பிறப்புக்கு காரணமானவன், '**த்தியாளா வெச்சுக்குறேன்'னு இதையேதான் வேற மாதிரி சொன்னானாம். அந்த வார்த்தைக்கு உனக்கு அர்த்தம் தெரியும்ன்னு நினைக்கிறேன். நீ அதையே டீசன்ட்டா சொல்ற அவ்வளவுதான். உனக்கெல்லாம் பொண்ணுங்கள பார்த்தா எப்படி தெரியுது? இந்த லவ் மண்ணாங்கட்டின்னு பேர சொல்லிக்கிட்டு வெறும் செக்ஸ தவிர வேற இன்டென்ஷனே இல்லாம இப்படி ஒரு வாழ்க்கையை நான் வாழ்வேன்னு நினைச்சியா? இதுக்கெல்லாம் உன்ன விட்டா வேற ஆளே இல்லன்னா நினைக்கிற?" என்று எரிமலையாய் வெடித்துச் சிதற,
"நோ ராஜ், நான் எந்த தப்பான இன்டென்ஷன்னோடவும் சொல்லல" என்று தன் கூற்றுக்கு அவன் விளக்கம் சொல்ல முற்பட,
"இதுக்கு மேல இதை பத்தி ஒரு வார்த்தை பேசின உன் கைல இருக்குற துப்பாக்கிய எடுத்து நானே உன்னை சுட்ருவேன். அதைவிட பெட்டர் நீயே சுட்டுட்டு போய் சேரு. இதுக்கெல்லாம் நான் ஆள் இல்ல. என்னோட லைஃப்ல இதைவிட பெட்டர் சாய்ஸ் எல்லாம் நிறைய இருக்கு. என்ன நம்பி ஆயிரம் குடும்பங்கள் பிழைக்குது. அவங்களுக்குத் தேவையானத செய்யறதுக்கே எனக்கு இந்த ஆயுசு போராது, ஓகே. இனிமேல் எனக்கு ஃபோன் பண்ணி என்ன டிஸ்டர்ப் பண்ணாத. உங்க அப்பன் சொல்ற பொண்ண கட்டிக்கிட்டு, அந்த ஆளோட இனிஷியலோட சேர்த்து, உங்க பரம்பரை சொத்து மொத்தத்தையும் உன் தலையில போட்டுக் கொளுத்திக்கோ. இல்ல இதையும் தாண்டி, உனக்கு நான் வேணும்ன்னா, எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுட்டு வா, சந்தோஷமா நாம கல்யாணம் பண்ணிக்கலாம். உன்ன கடைசி வரைக்கும் வச்சு நான் காப்பாத்தறேன்" என்று நிமிர்வுடன் சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றாள் ஸ்வரா, இனி இவன் தனக்குத் தேவையே இல்லை என்கிற தெளிவான முடிவுடன்.
இந்தப் பாதிப்புகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள இன்னும் அதிகம், தொழிலுக்குள் தன்னைப் புகுத்திக் கொண்டாள். இவை அனைத்திற்கும் நடுவில் தனது பிறப்புக்கு காரணமானவனை எப்படியாவது கண்டுபிடித்து, நிற்க வைத்து கேள்வி கேட்க வேண்டும் என்கிற ஆத்திரம் மனதிற்குள் கனன்று கொண்டே இருந்தது. எப்படி எப்படியோ கேட்டு பார்த்தும் மல்லியிடமிருந்து அதற்கான பதில் கிடைக்கவே இல்லை.
ஒரு கட்டத்திற்கு மேல் சலித்துப் போய், "எனக்கு புடிச்ச மாதிரி, குடோன்ஸ் வெக்க பர்ஃபெக்ட்டான இடத்தை சூஸ் பண்ணி கொடு, நீ கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்றேன்" என்று சொல்லிவிட, கிடங்கு வைக்க இடம் தேடும் முனைப்போடு ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருந்தாள், கூடவே… தன் அன்னையின் ஆணிவேரைத் தேடி.
அது நன்காட்டூரில் கிடைத்து விட, தான் நினைத்து வந்ததை முழுமையாக செயல்படுத்த முடியாதபடிக்கு ராஜத்தின் உடல் நிலை குறுக்கே வந்துவிட்டது.
அவரை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு, அவள் மல்லிகாவை அழைத்துச் சொன்னதும், முதலில் அதிர்ச்சியில் தடுமாறினாலும், "எனக்கு அந்த ஊருக்கு வரதுல கொஞ்சம் கூட இஷ்டமில்ல, அது என்னோட அம்மாவுக்காகன்னு சொன்னாலும் கூட. அவங்கள உடனே சென்னைக்கு கூட்டிட்டு வந்துடு. இங்க கேர் ஃபார் லைஃப்லையே அட்மிட் பண்ணி அவங்கள குணப்படுத்திக்கலாம். நான் தாமரை கிட்ட பேசி எல்லா அரேஞ்மென்ட்ஸையும் செஞ்சு வெச்சிடறேன். உன்கிட்ட எனக்காக ஒரே ஒரு ரெக்வெஸ்ட் மட்டும்தான் இருக்கு, தயவு செஞ்சு என்ன பத்தின உண்மைய அங்க யார் கிட்டயும் ரிவில் பண்ணிடாத" என்று மகளிடம் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டாள் மல்லிகா. அம்மாவின் பேச்சை மீறி ஒரு அடி கூட எடுத்து வைக்கத் துணியவில்லை ஸ்வராவுமே. சில மணிநேரங்களுக்குள்ளேயே கேர் ஃபார் லைஃப்க்கு மாற்றப்பட்டார் ராஜம், ஜீவானந்தத்தின் ஒப்புதலுடன்.
***
Enda shakthi lovr na ena nu teriuma da poda nee ellam un appan kuda irundu sol pe hi ketu