மடல் - 23
உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஊரை விட்டு ஓடி வந்த பிறகு, ஒரு முறை கூட நிகழ்ந்துபோன சம்பவங்களை மனதிற்குள் கொண்டு வரவே இல்லை மல்லிகா. போனவை போனவையாகவே இருந்து விட்டுப் போகட்டும் என நிகழ்காலத்தில் மட்டுமே வாழ்ந்ததால்தான் அவளால் இந்த அளவுக்கு வளர்ச்சி அடையவே முடிந்தது போலும்.
யாரை நினைக்கவில்லை என்றாலும் அம்மாவை மட்டும் அவள் நினைக்காத நாளில்லை. அம்மாவின் அரவணைப்புக்கு மட்டும் மனம் ஏங்கித் தவிக்கும். என்னதான் அல்லிக்கொடி அவளைத் தாங்கினாலும், பெற்ற தாயின் இடத்தை யார் ஒருவராலும் நிரப்ப முடியாதல்லவா?
ஸ்வராவின் ஸ்பரிசத்தில் தன் அன்னையை உணர்ந்ததால், அவரின் நினைவுகளோடு சேர்ந்து பதினெட்டு வருடங்களுக்கு மேலாக நெஞ்சுக்குள் அடைத்து வைத்திருந்த வேதனை மொத்தமும் மல்லியின் கேவலில் வெடித்துச் சிதற, பயந்தே போனாள் ஸ்வரா.
"அம்மா… ம்மா… ப்ளீஸ்ம்மா… நோம்மா… ஐம் சாரிம்மா… இனிமே உன்ன ஹர்ட் பண்ற மாதிரி நடந்துக்கவே மாட்டேன்ம்மா. பிலிவ் மீ… ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர் செல்ஃப்" என அம்மாவை எப்படி தேற்றுவது எனப் புரியாமல் மன்றாடினாள்.
ஒரு சில நிமிடங்கள் தன் நினைவே இல்லாமல், மல்லி கதறித் துடிக்க, தூர இருந்தே இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த சுசீலா அல்லிக்கொடிக்கு அழைத்துச் சொல்லிவிட்டாள்.
அலுவலகம் நோக்கிப் பகலவனுடன் பயணித்துக் கொண்டிருந்த அல்லியும், சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்து அவனிடம் சொல்லி வீட்டிற்கு வாகனத்தைத் திருப்பச் சொன்னார்.
எப்படியோ மகளின் அணைப்பில் சற்றுத் தேறி, மல்லிகா சமநிலைப்பட்டு எழுந்துச் சென்று முகம் கழுவி வந்தாள்.
குற்ற உணர்ச்சி மேலோங்கி, கலவரம் மண்டிப் போய் கிடந்த மகளின் முகத்தைப் பார்த்ததும் மெலிதாகப் புன்னகைத்தபடி அவளுக்கு அருகில் வந்து உட்கார்ந்தவள், "ஓகே லீவ் இட் ராஜ், இனிமேலாவது என்ன பழி வாங்கற எண்ணத்தை விட்டுட்டு உன்னோட வளர்ச்சியை மட்டும் கவனி" என்று தழுதழுத்தக் குரலில் சொல்ல, "ஷ்யூர் மா, உன் ஆசைப்படியே நாளைலயிருந்து கம்பெனிக்கு வந்து பார்ட் டைமா வேலை பார்க்கிறேன். கொஞ்சம் கொஞ்சமா அட்மினிஸ்ட்ரேஷனையும் கத்துகிறேன். இனிமே உன்னைக் கவலைப்படவே விட மாட்டேன்" என்று உறுதியளிக்கும் விதமாகச் சொல்ல, மகளை மென்மையாக அணைத்துக் கொண்டாள்.
அதற்குள் பகலவனும் அல்லிக்கொடியும் அங்கே வந்துவிட, இருவரும் சகஜமாக பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து நிம்மதியுற்றனர்.
அல்லியின் பதற்றமான முகத்தைப் பார்த்துவிட்டு, "கவலப்படாத அல்லிம்மா, எவ்ரிதிங் நார்மல்" என்று அவரை ஆற்றுப்படுத்தியவள்,
"பகலவா நம்ம ராஜ் நாளையிலிருந்து ஆஃபீஸ்க்கு வரேன்னு சொல்லி இருக்கா. அவளுக்கு ட்ரெய்னிங் கொடுக்க வேண்டியது உன்னோட பொறுப்பு" என்று சொல்லிவிட,
"அத்த நீ தப்பிச்சுட்டு, என்ன இந்தப் பிசாசு கிட்ட மாட்டி விடுறியா" என்று பகடி பேசினாலும் அவனுக்குமே நிம்மதிதான்.
தொடர்ந்து வந்த நாட்களில் ஸ்வராவின் பொறுப்புணர்ச்சியைப் பார்த்து மல்லிகா அசந்தே போனாள் என்பதே உண்மை. படிப்பிலும் சரி தொழிலிலும் சரி அவள் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட, இரண்டிலுமே வெற்றிப் பாதையில் பயணிக்கத் தொடங்கினாள்.
அடுத்த தலைமுறை தொழிலில் ஈடுபடத் தொடங்கிய பிறகு ஆயத்த ஆடைகள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தவிர பல்வேறு தொழில்களில் முதலீடு செய்ய ஆரம்பித்தார்கள்.
முக்கியமாக, மல்லிகாவின் நீண்ட நாள் கனவான, விவசாய விளைப் பொருட்களின் நேரடி விற்பனை. இதற்காக 'ஆர்.ஆர். மார்ட்ஸ்' என்கிற பெயரில், சென்னையின் சில முக்கிய பகுதிகளில் பெரிய பெரிய அங்காடிகளைத் திறந்து சில்லறை விற்பனைகளை செய்து வந்தார்கள்.
நாளுக்கு நாள் விற்பனை அதிகரிக்க, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தையுமே அங்கே வைத்து விற்பனை செய்யும் அளவுக்கு அந்த வியாபாரம் விரிவடைந்தது.
அரிசி, பருப்பு வகைகள், மாவு வகைகள், போன்றவற்றை மக்கள் தாங்களாகவே தங்கள் தேவைக்கு ஏற்ப எடுத்து எடைப் போட்டு வாங்க ஏதுவாகப் பெரிய பெரிய கொள்கலன்களில் கொட்டி விற்பனை செய்ய, ஒவ்வொரு கிளைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
வெவ்வேறு இடங்களில் இருந்து விளைப் பொருட்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்வதில்… அவற்றை பத்திரமாகச் சேமித்து வைப்பதில் தொடங்கி, பொருட்கள் வந்து சேர தாமதமாவது போன்று சிற்சில சிரமங்கள் இருந்ததால், நேரடியாக விவசாயிகளிடமிருந்து வாங்கி, ஆங்காங்கே கிடங்குகள் ஏற்படுத்தி அவற்றை பத்திரமாகச் சேமித்து விற்பனை செய்யலாம் என முடிவு செய்து, அதற்கும் இடங்கள் பார்க்கத் தொடங்கியிருந்தார்கள். தேவைப்பட்டால் சொந்தமாக பயிர் வைக்கலாம் என்கிற எண்ணம் கூட இருந்தது.
கூடவே காலத்திற்கு தகுந்தார் போல, ஒரு முயற்சியாக ஸ்வராவும் பகலவனும் சேர்ந்து இணைய வழி விற்பனையிலும் ஈடுபடத் தொடங்க, அதுவும் வெற்றிப்பாதையில் பயணித்தது.
அவர்களது இணையதள விற்பனை அங்காடியை இன்னும் மேம்படுத்தி, உலக அளவில் எடுத்துச் செல்லலாம் என்று திட்டமிடும் பொழுதுதான், பகலவனுடன் கல்லூரியில் படித்த அவனது உயிர் தோழனான சக்தி அதில் முதலீடு செய்ய முன்வர, இந்த மூவரின் கூட்டணியில் உருவானது 'ராசி டெக்னாலஜிஸ் லிமிடட்' நிறுவனம்.
அதே வேகத்தில் கல்லூரிப் படிப்பையும் முடித்துவிட்டு முழு நேரமாக குழும நிர்வாகங்களில் பங்கெடுக்கத் தொடங்கினாள் ஸ்வரா.
***
இந்தியாவின் டாப் டென் பணக்காரர்களுடன் ஒருவரான சிவப்பிரகாசத்தில் மகன் சக்தி, பகலவனுடன் அவன் படிக்கும் கல்லூரியில் அதே பிரிவிலேயே சேர்ந்திருக்கிறான் என்பதில் தொடங்கி, அவனுடைய வீட்டிற்குச் சென்று அவனது குடும்பத்தினருடன் நெருங்கிப் பழகும் அளவுக்கு, குறிப்பாக சிவப்பிரகாசம் அவனை மிகவும் மரியாதையுடன் நடத்தும் அளவுக்கு இருவருடைய நட்பும் வளர்ந்தது வரை வீட்டில் எல்லோருக்குமே தெரியும்.
தொடக்ககால கல்லூரி வாழ்க்கையில் போதைப் பழக்கம், தேவையற்ற சகவாசம் எனப் பாதை மாறி, போதை மருந்தின் ஆதிக்கத்தில் புத்தி பேதலித்து மணிக்கட்டை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சக்தியை, சமயத்தில் காப்பாற்றி மருத்தவமனையில் சேர்த்தான் பகலவன்.
சிவசக்தி குழும குடும்பத்தைச் சேர்ந்த யாரும் பொது வெளியில் ஒரு தும்மல் தும்மினால் கூட அது ஒரு ஊடக செய்தி. இப்படி இருக்க, அவர்கள் குடும்பத்து ஒரே வாரிசு தற்கொலைக்கு முயன்றான் என்பது மட்டும் வெளியில் கசிந்தால் அது பெரும் பிரச்சனைகளுக்கு வழி வகுத்திருக்கும்.
அப்படி ஒரு இக்கட்டான சூழலைப் பக்குவமாக கையாண்ட பகலவன், சிவப்பிரகாசத்தின் அபிமானத்தைப் பெற்றுவிட, சக்தியைப் போதைப் பழக்கத்திலிருந்து மீட்பதில் இவன் பங்கு முக்கியமானதாக இருந்தது. பகலவன் மட்டும் கிணற்றில் குதி என்று சொல்லிவிட்டால் அடுத்த நொடியே கண்ணை மூடிக்கொண்டு குதித்து விடுவான் சக்தி, அந்த அளவுக்கு அவன் மீது அன்பும் நம்பிக்கையும் கொண்டிருந்தான்.
மற்றபடி சிவப்பிரகாசம் அவனை அந்த அளவுக்கு ஏற்றுக் கொண்டதற்கு ராஜராஜேஸ்வரி குழுமத்தின் பின்புலமும் மற்றுமொருக் காரணம். இல்லையென்றால் அவருக்கு இருக்கும் செருக்குக்கு, அவர் இவனை அருகில் நெருங்கக் கூட விட்டிருக்க மாட்டார். இவர்களுடைய வியாபார வளர்ச்சிக்கு இவ்வளவு பெரிய முதலீடெல்லாம் சாத்தியப்பட்டிருக்காது.
அவள் பகலவனுடன் இருக்கும் சமயங்களில் ஒரு முறையேனும் அந்தப் பேச்சில் சக்தி எட்டிப் பார்க்காமல் இருக்க மாட்டான். 'அப்படி என்ன அவன் நம்மள விட இவனுக்கு குளோசா?' என சமயத்தில் ஸ்வராவுக்கு எரிச்சல் கூட உண்டாகும்.
அதுவும் அவர்களது இணையதள விற்பனை அங்காடிக்கு ஒரு பெரிய அளவு முதலீடு தேவையாக இருக்க, கோடிக்கணக்கில் வங்கிக்கடனுக்கு முயன்று கொண்டிருந்த சமயம், அதை அறிந்து தானாக முன்வந்து அதில் அவன் முதலீடு செய்வதாகச் சொல்லவும், அவர்களது நட்பு கண்டு ஸ்வராவுக்கே வியப்பாகத்தான் இருந்தது.
சென்னை மாநகரில் ஒரு முக்கியப் பகுதியில் அமைந்திருந்த ராஜராஜேஸ்வரி குழும அலுவலகத்தில் தனக்கான பிரத்தியேக கேபினில் அமர்ந்து, 'ஓ மை காட்… ஃபயர் வால் ப்ரொடெக்ஷன் அது இதுன்னு சொல்லிட்டு ஆயிரத்தெட்டு பாஸ்வேர்ட் கேக்குது பாரு, இந்த மாதிரி வேலை எல்லாம் நைசா நம்ம பக்கம் தள்ளி விட்டுடுவான் இந்த பகலவன்' என மனதிற்குள்ளேயே புலம்பியபடி இணையதளம் மூலமாக பண பரிவர்த்தனை ஒன்றை செய்து கொண்டிருந்தாள் ஸ்வரா.
கதவு தட்டும் ஓசைக் கேட்க, நிச்சயமாகப் பகலவனாகத்தான் இருக்கும் என்கிற எண்ணத்தில், "யா கம் இன்" என அனுமதி கொடுத்து விட்டு, கடவுச்சொல்லைப் போட்டுவிட்டு ஒ.டி.பிக்காகக் காத்திருந்தவளின் கவனம் மொத்தம் தன் கைப்பேசியில் இருக்க, அருகில் நிழலாடுவது தெரிந்தாலும் தலை நிமிரவே இல்லை.
அவள் எதிர்பார்த்த தகவல் அவளது கைபேசிக்கு வந்திருக்க, "ஜஸ்ட் அ செகன்ட்" என்றபடி அதை தன் மடிக்கணினியில் கொடுத்து அந்த வேலையை முடித்துவிட்டு நிமிர்ந்து பார்க்க, "ஹாய் ராஜ், ஹவ் ஆர் யூ" என்றபடி நின்ற புதியவனைப் பார்த்து, 'யார் இவன். அப்பாயிண்ட்மெண்ட் இல்லாம எப்படி உள்ள வந்தான்?' என ஒரு நொடி திடுக்கிட்டாலும், "ஃபைன் தேங்க்யூ… பட் நீங்க?" என்று இழுக்க,
"இவந்தான் சக்தி, நான் இவன பத்தி உங்கிட்ட வேற எதையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, அப்படித்தான?" என்றபடியே அவனுக்கு அருகில் வந்து நின்றான் பகலவன்.
இதுவரை புகைப்படங்களில் கூட அவனைப் பார்த்ததில்லை. சமூக வலைத்தளங்களில் படங்களைப் போடும் பழக்கம் இவர்கள் யாருக்குமே கிடையாது. முன்பு எப்பொழுதோ ஒரே ஒருமுறை பத்திரிகையில் பார்த்திருக்கிறாள், ஆனால் முகம் நினைவில் இல்லை.
இவனை அறிமுகப்படுத்தி வைக்கிறேன் என்று சொல்லியிருந்தானே தவிர, இப்படி சொல்லாமல் கொள்ளாமல் அலுவலகத்திற்கு அழைத்து வருவான் என அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. விழிகள் பெரிதாக விரிய "ஹாய்" என்றபடி எழுந்து நின்றவள், குலுக்குவதற்காகக் கையை நீட்ட, விரல்களைக் குவித்து முஷ்டியை மடக்கி 'விஸ்ட் பம்ப்' செய்வது போல் அவன் தன் கையை நீட்ட தானும் அது போலவே முஷ்டியை மடக்கி அவனுடைய கையுடன் முட்டினாள்.
அடுத்த நொடி, தன் கையைத் திருப்பி அவன் விரிக்க அவனது உள்ளங்கையில் வீற்றிருந்தது அவளுக்கு மிகவும் பிடித்த மேங்கோ பைட் ஒன்று.
"ஏய் பார்ரா, எப்பவோ சொன்னத ஞாபகம் வெச்சுட்டு டைமிங்கா யூஸ் பண்ற" என்று பகலவன் வியக்க, "வாவ்" என்றபடி அதை எடுத்து பிரித்து தன் வாயில் போட்டுக் கொண்டாள்.
"காக்கா கடி கடிச்சு, எங்களுக்கெல்லாம் ஷேர் கொடுப்பீங்கன்னு பார்த்தேன்" என்று அவன் குறும்பாகச் சொல்லவும் அவளுடைய முகமே சிவந்து போனது.
பகலவனைப் பார்த்து நன்றாக முறைத்தவள், "இதெல்லாமா நீ போய் சொல்லி வைப்ப" என்று பொய்யான கோபத்துடன் கேட்க,
"உங்கள பத்தி சொல்லாம வேற யார பத்தி சொல்லுவான், ஒரு டென் மினிட்ஸ் நாங்க உட்கார்ந்து பேசிட்டு இருந்தா, அதுல பைவ் மினிட்ஸ் ராஜ்தான் இருப்பா" என்று வேறு சக்தி சொல்ல அவளுடைய முகம் மேலும் சிவந்தது. அவனுடைய பார்வை இரசனையுடன் அவளது முகத்தில் படர்ந்தது.
ஒருவரை நேரில் சந்திப்பதற்கு முன்பாகவே அவர்கள் மீது ஏற்பட்டுவிடும் ஒரு நல்லபிப்ராயம், சக்தியைப் பொறுத்தவரை ஸ்வராவுக்கும் ஏற்பட்டிருந்தது.
என்னதான் இன்று இவ்வளவு பெரிய அந்தஸ்துக்கு இவர்கள் வந்திருந்தாலும் இவர்களுடைய ஆரம்ப கால வாழ்க்கை என்பது மிகவும் சிக்கல்கள் நிறைந்ததாகத்தானே இருந்தது?
பகலவனைப் பொருத்தமட்டும் ஸ்வராவை விட இதில் அதிகப் பிரச்சனைகளை சந்தித்திருகிறான். குழந்தைப் பருவம் என்பது அவனுக்கு மிகக் கசந்ததாகத்தான் இருந்தது. எதற்காக உதாசீனப் படுத்தப் படுகிறோம் என்பதே தெரியாமல் நிறைய பாதிக்கப்பட்டிருந்தான்.
உடன் வசித்தவர்கள் பரிதாபப்பட்டோ அல்லது காழ்ப்புணர்ச்சியிலோ பேசும் பல வார்த்தைகளுக்கு இன்றுவரை கூட அவனுக்குப் பொருள் விளங்கியதில்லை.
அதைப் பற்றி அவளிடம் அடிக்கடிப் பேசியிருக்கிறான்.
மல்லியாகட்டும், அல்லிகொடியாகட்டும் இருவரும் சிறை சென்று வந்தவர்கள் என்பதான பேச்சு ஸ்வராவின் மனதில் பதியத் தொடங்கும் முன், அவர்களுடைய வாழ்க்கை அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்திருக்க, பகலவனுக்குப் புரிந்தும் புரியாத நிலை. திலகா எல்லாவற்றையும் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தாலும், அதையெல்லாம் வெளியில் சொல்லக்கூடாது என்பதை நன்றாக உணர்ந்தே இருக்க, மறந்தும் வெளிபடுத்தவில்லை.
தன்னைப் பற்றிய ஏதோ ஒரு மர்மம் பகலவனை குடைந்துகொண்டே இருக்க, அதை அவன் மறக்கத் தொடங்கியதே சக்தியின் நட்பு கிடைத்ததற்குப் பிறகுதான்.
பகலவனுடனான நட்பிற்கு அவன் கொடுத்திருக்கும் மரியாதை அவளை… அவனை மரியாதையுடன் பார்க்க வைத்தது.
முதல் பார்வையிலேயே அவனை மிகவும் பிடித்து விட, அதன்பின் காபி வரவழைத்து அதைப் பருகிய படி, அங்கே அமர்ந்து வெகு நேரம் பொதுப்படையாக மூவருமே பேசிக்கொண்டிருந்தனர்.
பிறகு தொழில் விஷயமாக அவசியம் வெளியில் சென்றாக வேண்டிய சூழ்நிலை இருக்க சக்தி கிளம்பிச் சென்றுவிட, "ஐயோ, அதுக்குள்ள கிளம்பிட்டானே" என்றுதான் இருந்தது ஸ்வராவுக்கு. தன் எண்ணப்போக்கை முகத்தில் காண்பிக்காமல் இருக்க மிகவும் படாத பாடு பட்டுப்போனாள்.
***
'ராசி டெக்னாலஜிஸ்' நிறுவனம் சம்பந்தமான ஆயத்தப் பணிகளைத் தொடங்கிய பிறகு, இரவு பகல் என்றில்லாமல் வேலை பிழிந்து எடுக்க, ஒன்று இவளோ அல்லது பகலவனோ இருவரில் ஒருவர் சக்தியுடன் இருந்தே ஆக வேண்டிய சூழல் உருவாக, இவளுக்கு அவனுடனான நெருக்கம் கூடித்தான்போனது.
சில மாதங்களில் 'ராசி'யின் வேலைகள் நல்லபடியாக முடிந்து, இந்தியா முழுவதுமே வியந்து பேசும்படி அதன் தொடக்க விழா நடந்து முடிந்தது.
அதற்கு முன்பாகவே, இவர்கள் நிறுவனம் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு மரியாதை நிமித்தமான பார்ட்டியில் இரண்டு குடும்பங்களுக்குமான அறிமுகமும் நிகழ்ந்தது.
அதில் பகலவன், ஸ்வராவுடன் மல்லிகாவும் அல்லியும் சில அலுவலக மேலாளர்களும் கலந்துகொள்ள, சக்தியின் அம்மா, அப்பா, தங்கை மற்றும் அவளது கணவரும் கலந்துகொண்டனர்.
அது முழுக்க முழுக்க தொழில் ரீதியான சந்திப்பாக அமைய, தனிப்பட்ட பேச்சுக்கள் எதுவும் இல்லாமல் போனது. அது ஒரு விதத்தில் ஸ்வராவுக்கு நிம்மதியைக் கொடுத்தது. ஆனாலும், அவளுக்குள் இருப்பது போல ஒருவித அலைப்புறுதலை அவள் சக்தியிடமும் உணர, காரணம் புரியாமல் சற்றுக் குழம்பினாள்.
'ஒருவேளை இந்த பார்ட்டியின் ஏற்பாடுகளில் ஏதாவது குறை இருந்திருக்குமோ, அது அவனது குடும்பத்தாருக்குத் தெரிந்தால் ஏதாவது பிரச்சனையாகும் எனக் கவலைப்படுகிறானோ ஃபர்ஸ்ட் இம்ப்ரஷன் பெஸ்டாக இருக்க வேண்டுமே' என பலவாறு மண்டைக்குள் ஏதோ குடைய அது குறித்து அவனிடம் பேச வேண்டும் என்று காத்திருந்தாள். அன்றைய பொழுதுக்கு அதற்கு சரியான நேரம் அமையாமல் போனது.
அடுத்த நாள் அவன் அலுவலகத்திற்கு வந்த உடனேயே அவனுடைய கேபினுக்குச் சென்றவள், சம்பிரதாயமான முகமன்களுக்குப் பிறகு, "வாட் ஹேப்பன்ட் சக்தி, நேத்து பார்ட்டில நீ ஒரு மாதிரி ஜோன் அவுட் ஆகி இருந்தது போல தோனுச்சு. அரேஞ்மெண்ட்ஸ்ல ஏதாவது ப்ராப்ளம் இருந்துதா?" என அதை அவனிடம் வெளிப்படையாகவே கேட்டுவிட்டாள்.
அதைக் கேட்ட நொடி அவனுடைய முகம் அப்படியே இறுகிப்போனது. "சாரி, நான் ஏதாவது தப்பா கேட்டுட்டனா?" என்று அவள் தயக்கத்துடன் வினவ,
"நாட் அட் ஆல் ராஜ், பட் அத நாம இங்க பேச வேண்டாம். இஃப் யூ ஆர் ஃப்ரீ, நாம ஏதாவது காஃபி ஷாப் போகலாமா?" என்று அவன் கேட்கவும், இலகுவாக அதற்கு ஒப்புக்கொண்டவள் அவர்களுடைய அலுவலகத்திற்கு அருகிலேயே இருந்த ஒரு பிரபல காஃபி ஷாப்பிற்கு அவனுடன் சென்றாள்.
அவரவருக்குப் பிடித்த பிளெண்டில் காஃபியை ஆர்டர் செய்துவிட்டு, தன்னுடைய கைபேசியை சைலன்டில் போட்டவன் அவளுடைய முகத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
அவளுக்கு ஒரு மாதிரி கூச்சமாகிப் போக, "வாட் இஸ் திஸ் சக்தி, பேசணும்னு கூட்டிட்டு வந்துட்டு என் முகத்தையே பாத்துட்டு உக்காந்து இருக்க, இதுல ஏதாவது ரீல்ஸ் இல்ல ஷாட்ஸ் ஓடிட்டு இருக்கா?" என்று கிண்டலாகக் கேட்க,
"யா ராஜ், சாரி… ஐ டோன்ட் நோ… ஹவ் டு" என்று இழுத்தவன், "யூ நோ சம்திங்… உன்னோட முகத்தைப் பார்த்தா, எல்லா கவலையும் மறந்து என்னோட மனசு அப்படியே அமைதியாகிப் போகுது" என்றான் நெகிழ்ச்சியுடன்.
"ஹேய், சும்மா என்ன வச்சு காமெடி பண்ணாத, த கிரேட் இன்டஸ்ட்ரியலிஸ்ட் சிவப்பிரகாசம் அண்ட் த சோசியல் ஆக்ட்டிவஸ்ட் விசாலாட்சியோட ஒன்லி சன் சக்திக்குக் கவலையா?" என்று சற்றுக் கிண்டல் தொனிக்கவே அவள் கேட்டு விட,
"நீ என்ன நெனச்சிட்டு இருக்க, பணம் காசு, பெரிய பேக்ரவுண்ட் இருந்தா மட்டும் அவங்க ரொம்ப சந்தோஷமா இருப்பாங்கன்னா?" என்று கேட்டான் மிகவும் அடிபட்டு போன பாவத்தில்.
"ரியலி சாரி சக்தி, உன்ன ஹர்ட் பண்ணனும்னு அப்படி சொல்லல. சும்மா ஒரு ஃப்ளோல வந்துடுச்சு" என்று அவள் வருந்த,
"இட்ஸ் ஓகே ராஜ், ஆனா நீ நினைக்கிற மாதிரி கிடையாது. எனக்கும் ஒரு கசப்பான மறுபக்கம் இருக்கு" என ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டவன், "ஆக்சுவலி நீ சொன்னியே சோசியல் ஆக்டிவேட் விசாலாட்சி, இந்த ஊர் உலகத்தைப் பொறுத்த வரைக்கும் ஒரு பெரிய எலைட் வுமன், ஆனா எங்க குடும்பத்தைப் பொறுத்த வரைக்கும் அவங்க எங்க அப்பாவோட செகண்ட் வைஃப்" என்றான் வருத்தம் மேலோங்க. சற்று அதிர்ச்சியாக இருந்தாலும், நிறைய கேள்விகள் எழுந்தது மனதுக்குள்.
"வாட் சக்தி, எனக்குப் புரியல… ப…ட்… ஃபர்ஸ்ட் வைஃப் இறந்து போனா இன்னொரு கல்யாணம் செஞ்சுக்கறது, டிவோர்ஸ், ரீ மேரேஜ் இதெல்லாம் இப்ப ரொம்ப நார்மல்தான. நீ ஏன் இவ்வளவு கில்டியா ஃபீல் பண்ற" எனக் கேட்டாள் தயக்கத்துடன்.
"யா ராஜ், ஆனா எங்க ஃபேமலில இப்படி எதுவும் கிடையாது. ஃபர்ஸ்ட் வைஃப் உயிரோட இருக்கும்போதே, அவங்கள டிவோர்ஸ் கூட செய்யாம அப்பா எங்கம்மாவ கல்யாணம் செஞ்சிட்டாரு. அது எப்படி ஒரு லீகல் மேராஜா இருக்க முடியும்? மோர் தேன் தட், எங்கப்பாவோட ஃபர்ஸ்ட் வைஃப் வேற யாரும் இல்ல, மை மாம்ஸ் ஓன் சிஸ்ட்டர்" என்றான் வலியுடன்.
"வாட் எ *க், குழந்தை இல்லன்னு சொல்லி மச்சினிக்கு ரூட் போட்டிருப்பாரு… வேற என்ன பேக்கிரவுண்ட் ஸ்டோரி இருக்க போகுது" என்றாள் எரிச்சலாக.
ஒரு வியப்புடன் அவளை ஏறிட்டவன், "பரவால்ல கரெக்டா பாயின்ட்ட படிச்சிட்ட" என்றான் பாராட்டாக.
"இது மாதிரி எவ்ளோ பாக்கறோம், இது என்ன பெரிய மேட்டரா?" என்று அவள் கேட்க,
"யா… கரெக்ட், சொத்துக் கைய விட்டுப் போகக் கூடாதுன்னு சொல்லி வீட்டுப் பெரியவங்களே எங்க அம்மாவை ஃபோர்ஸ் பண்ணி அப்பாவுக்குக் கட்டி வெச்சாங்க. அன்பார்ச்சுனேட்லி, பெரியம்மாவும் அம்மாவும் ஒரே டைம்லயே கன்சீவானாங்க.”
”யூ நோ சம்திங் ராஜ், அம்மா பெரியம்மா ரெண்டு பேருமே ரொம்ப இண்டிபென்டன்டான லேடிஸ். ஆனாலும், பெரியம்மாவுக்கு எக்ஸ்ட்ரீம் சுயநலம். அம்மாவுக்கு எக்ஸ்ட்ரீமான சுயமரியாதை. நான் பொறந்ததுக்கப்புறம் அப்பாவை விட்டு மொத்தமாக ஒதுங்கிட்டாங்க. ஆனா தன்னோட சொந்த முயற்சியால பப்ளிக்ல நல்லா எக்ஸ்போஸ் ஆயிட்டாங்க. ஆண் பிள்ளையைப் பெத்த ஒரே காரணத்தால அம்மாவுக்கு இந்த பிரிவிலேஜ் ஈசியா கிடைச்சது.”
”பட், குடும்பத்துல பெரியம்மாதான் ரொம்ப டாமினேட்டிங். ஆனா வெளி உலகத்துல இப்படி ஒரு வைஃப் எங்க அப்பாக்கு இருக்கிறதே யாருக்கும் தெரியாது.”
”இந்த ரீசன்சால எப்பவுமே குடும்பத்துக்குள்ள நிறைய கன்ஃபூஷன்ஸ் இருந்துட்டே இருக்கும். ஈவன் என் ஃஹாப்-சிஸ்டர் ஹஸ்பண்ட் கூட, எங்க மாமோட ஓன் பிரதர்ஸ் சன்தான். எதனாலன்னா சொத்து ரீதியா எங்களுக்குள்ள எந்தப் பிரச்சனையும் வரக்கூடாதுன்றதுல ரொம்ப கேர் ஃபுல்லாக இருக்காங்க" என தன் துயரத்தை வெளிப்படையாக அவளிடம் சொன்னவன்,
"இதையெல்லாம் யார் கிட்ட இருந்து வேணாலும் மறைக்கலாம். ஆனா என்னால உன்கிட்ட இருந்து மறைக்க முடியாது. என்ன பத்தி டாப் டு பாட்டம் எல்லாமே நீ தெரிஞ்சுக்கணும்னு நினைக்கிறேன். பட் இத உன்கிட்ட ஷேர் பண்ணும் போது ஐ ஃபீல் சோ ஆக்வேர்ட்" என்றான் கண்களில் நீர் கோர்க்க.
இவ்வளவு பெரிய இரகசியத்தை தன்னிடம் ஏன் இவன் இப்படி வெளிப்படையாகச் சொல்கிறான் என அவளுக்குப் புரிந்தும் புரியாமலும் குழப்பமாக இருக்க, அவனது கரத்தை எடுத்து தன் கைக்குள் பொத்தி வைத்தபடி, "இதே மாதிரி பலரோட வாழ்க்கையில பல துயரமான விஷயங்கள் புதைந்துதான் கிடக்கு சக்தி. எல்லாத்தையும் தோண்டி தோண்டி போஸ்ட்மார்ட்டம் பண்ணா யாராலயும் யார் கூடவும் சுமூகமா பழக முடியாது. இவங்க எல்லாம் நம்மகிட்ட பர்மிஷன் வாங்கிட்டுதான் நம்மள பெத்தாங்களா? இவங்க தேவைக்குப் பெத்துக்கிட்டாங்க. இதுல நம்மளோட குற்றம் என்ன இருக்கு? இதுக்காக நம்ம வருத்தப்படவோ அவமானப்படவோ தேவையே இல்ல, சக்தி. இதையெல்லாம் இப்படியே தூசி மாதிரி தட்டிட்டுப் போயிட்டே இருக்கணும். தலை மேல தூக்கி வச்சு சுமக்கக் கூடாது. லீவ் இட், எந்தச் சூழ்நிலைலயும் நீ நீயா இருக்க பாரு"என தனக்குத்தானே சொல்லிக் கொள்வதை அவனுக்கும் சொன்னாள். அதில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுப் போனவனாக அப்படியே அவளது கையைத் தனது உதடு வரை எடுத்துச் சென்று சுற்றுப்புறம் உணர்ந்து அப்படியே விட்டான். அதை தெளிவாக உணரவே, ஆயிரம் கேள்விகளைத் தாங்கி அவனுடைய முகத்தில் போய் படிந்தது அவளது பார்வை.
'ராசி' நிறுவனம் இயல்பாகச் செய்லபடத்தொடங்கும் வரை, ஓட்டமாக ஓடிக் கொண்டிருந்ததில் பெரிதாக எதிலும் கவனம் இல்லை. ஆனால், போதுமான ஆட்களை வேலைக்கு அமர்த்தி, எல்லாமே முறைப்படுத்தப்பட்டு, ஒரு இயல்பு நிலைக்கு வந்த பிறகு, சக்தியின் நடவடிக்கைகளில் இருக்கும் வித்தியாசம் அவளுக்குப் புரிந்தது.
அவளைப் பார்க்கும்போதே அவனது கண்களில் ஒரு மின்னல் வெட்டுகிறது.
அவளிடம் பேசும்போது, மிகவும் யோசித்து வார்த்தைகளைக் கோர்க்கிறான்.
அவளிடம் அதிக கரிசனம் கொள்கிறான். ஆனால் அது வெளிப்படையாக தெரியாமல் இருப்பதில் கவனமாக இருக்கிறான்.
சில நாட்களாகவே எதையோ சொல்ல வருவதும் பின் மென்று விழங்குவதுமாக நழுவுகிறான்.
இன்று இவன் பேசியது மட்டும் காரணம் இல்லை, அனைத்தையும் தாண்டிய ஏதோ ஒன்று அவனுக்குத் தன் பால் ஏற்பட்டுவிட்டது என்பது தெள்ளத் தெளிவாக விளங்கிப் போனது ஸ்வராவுக்கு. ஆனாலும் உள்ளுக்குள்ளே பயம் ஊற்றெடுத்தது. என்றைக்குத் தானாக உடைத்து இது பற்றிய அவன் தன்னிடம் பேசுகிறானோ அப்பொழுது இதற்கான பதிலைச் சொல்லிக் கொள்ளலாம் என முடிவு செய்தாள்.
***
இரவு உணவு முடித்து எல்லோரும் அவரவர் அறைக்குள் சென்று அடங்கிய பிறகு மல்லிகாவின் படுக்கை அறைக் கதவை மெலிதாகத் தட்டி விட்டு உள்ளே நுழைந்தாள் ஸ்வரா.
அந்த அறை முழுதும் எதிரொலித்த குறட்டை ஒலி, அல்லிக்கொடி ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்று விட்டார் என்பதைச் சொல்லாமல் சொல்ல, அவரது உறக்கத்தைக் கெடுக்காத வண்ணம் விளக்கை எல்லாம் அணைத்துவிட்டுத் தன் மடிக்கணினியில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்த மல்லி, "வா ராஜ், ஏதாவது முக்கியமான விஷயமா அம்மா கிட்ட பேசணுமா?" என்ன மெலிதான குரலில் கரிசனமாகக் கேட்க,
"எஸ் மா… ஐ நீட் சம் கிளாரிஃபிகேஷன்ஸ்" என்றாள் அவளுக்கு அருகில் வந்தமர்ந்தபடி.
தன் மடிக்கணினியை ஸ்லீப்பிங்கில் போட்டுவிட்டு, "அல்லிம்மா முழிச்சுக்கிட்டாங்கன்னா ஆயிரம் கேள்வி கேப்பாங்க, வா நாம பால்கனில போய் பேசலாம்" என எழுந்து கதவைத் திறந்து கொண்டு பால்கனி நோக்கிச் செல்ல, தானும் பின்னாலேயே சென்றாள்.
மேலே தொங்கிய அலங்கார விளக்கு மெல்லிய ஒளியைக் கசிய விட, அங்கிருந்த மின்விசிறியைச் சூழலவிட்டுவிட்டு, ஓரமாக அமைந்திருந்த கிரானைட் திண்ணையில் போய் இருவரும் அமர்ந்தார்கள்.
ஆராய்ச்சிப் பார்வையுடன் மல்லி மகளை ஏறிட, "மா… அன்பு காதல் இதையெல்லாம் வச்சு ஒருத்தர எப்படி டாமினேட் பண்ண முடியும்னு ஒரு தடவ நீ என்கிட்ட சொன்ன இல்ல, தட் இஸ்… தட் லவ் ஃபாமிங்" என்று அவள் இழுக்கவும்,
"ஆமா முன்னாடி எப்பவோ, என்னோட சிச்சுவேஷன உனக்குப் புரிய வைக்கிறதுக்காக சொன்னேன். இன்னும் அதே இடத்துலதான் நின்னுட்டு இருக்கியா, மேல அப்டேட் ஆகலையா" எனக் கேட்டாள் சிரித்தபடி.
"அப்படியெல்லாம் இல்லம்மா, நிறைய படிச்சு என்னை நானே அப்டேட் பண்ணிட்டு இருக்கேன். ஆனாலும் நீ என்னோட மனசாட்சி மாதிரி. எனக்கான கிளரிஃபிகேஷன நீதான் குடுக்கணும்" என்றாள் ஸ்வரா அழுத்தமாக.
"வாட் ராஜ், நீ யாராலயாவது இன்ஃப்ளுயன்ஸ் ஆகியிருக்கியா. ஐ மீன், ஆர் யூ இன், தட் ஸோ கால்ட் லவ் வித் சம்படி?" எனக் கேட்டாள் ஒரு மாதிரியான தொணியில்.
"இப்ப வரைக்கும் இல்லம்மா. பட் எப்ப வேணா என்னோட பவுண்டரீஸ் பிரேக் ஆகலாம். அந்தப் பயத்துலதான் கேட்கறேன், ஜஸ்ட் கிளாரிஃப மீ… வாட் இஸ் ட்ரூ லவ்" என நேரடியாகவே கேட்டுவிட்டாள்.
"ட்ரூ லவ், ரியலி!" எனக் கிண்டலுடன் வியந்த பாவத்தில் அவள் விழி விரிக்க, "ம்மா" எனச் சலுகையாய் சிணுங்கினாள் மகள். "ரியலி ராஜ், நீ எத ட்ரூ லவ்ன்னு சொல்றன்னு எனக்கு புரியல" என உண்மையாகவே வியப்புடன் கேட்டவள், "சரி நான் கேட்கறதுக்கு பதில் சொல்லு?" என்றாள் புதிராக!
"நம்ம பேச்சு வழக்குல இந்த அன்புங்கிற விஷயத்துக்கு நிறைய பேர் வச்சிருக்கோம்! அதுல பேரன்ட்ஸ் தன்னோட குழந்தை மேல வச்சிருக்கற அன்புக்கு பேரு என்னன்னு சொல்லு பார்க்கலாம்"
"அஃபக்ஷன் அதாவது பாசம்"
"ஓகே பைன், அண்ணன், தங்கச்சி, அக்கா, தம்பி இவங்களுக்குள்ள இருக்கிற அந்த அன்புக்குப் பேரும் இதே பாசம்தான், ரைட்... தென், நம்ம கூட படிக்கிறவங்க, கூட வேலை செய்றவங்க, இந்த மாதிரி நம்மரிலேஷன்ஷிப்ல இல்லாத ஒருத்தர் கிட்ட ஏற்படக்கூடிய அன்புக்கு பேரு"
"நட்பு"
"ஈவன், ஒரு நாய் பூனமேல கூட நம்மால அன்பு பாராட்ட முடியும்தான? இப்படி எல்லாவிதமான அன்புக்குமே லவ்ன்னு ஒரு காமன் நேம் வெச்சு சொல்லலாம்தான! ஆனா, நம்மோட செக்ஸுவல் பார்ட்னர நாம சூஸ் பண்ணும் போது, அவங்க மேல நமக்கு ஏற்படக்கூடிய அன்புக்கு மட்டும் ஸ்பெசிபிக்கா 'லவ்' அப்படின்னு ஒரு பேர் வெச்சிருக்கோம்... மேபி மத்த எல்லா சொந்தத்தை விட இந்த சொந்தத்த நாம ரொம்ப முக்கியமானதாக நினைக்கிறதால கூட அப்படி இருக்கலாம்... இதுல, ட்ரு லவ்... ஃபேக் லவ்... அப்படி எல்லாம் ஆசிட் டெஸ்ட்லாம் பண்ண முடியாது, ராஜ்"
"தென் எப்படி மா, அத நாம? தெரிஞ்சுகிறது" என்று ஸ்வரா கவலையுடன் கேட்கவும்,
"தன்மை, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி... இத பத்தி நீ எப்பவாது கேள்விப்பட்டிருக்கியா"
"ஸ்ட்ரேஞ்ச், இப்ப நீ சொல்லித்தான் ஃபர்ஸ்ட் டைம் கேட்கறேன்"
"பெண்களுக்கான நாலு குணம்னு சொல்லுவாங்களே, அதெல்லாம் என்னன்னு தெரியுமா உனக்கு"
"யூ மீன், அச்சம் மடம்... பிளா... பிளா... "
"எக்ஸாக்ட்லி, ஆனா பெண்களை பயங்கரமா டிசிப்ளின் பண்றதுக்காக இதையெல்லாம் சொல்லி வெச்சவங்க, ஆடூஉக் குணம்னு... ஆண்களுக்கான இந்த நாலு குணங்கள பத்தி பெருசா சொல்லல"
"ஓஓஓஓ"
"அதுல முதலாவதா… தன்மை, அதாவது அறம் தவறாம இருக்கறது, ரெண்டாவது நிறை, நிறைவான குணங்களோட இருக்கறதுன்னும் சொல்லலாம், ஆனா இதுக்கு கற்பு, உறுதி அப்படிங்கற அர்த்தங்களும் இருக்கு. அதாவது ஆண்களும் கற்பு நெறியோட இருக்கணும். அடுத்ததா… ஓர்ப்பு, ரொம்ப ஸ்ட்ராங்கான மனோதிடம், தன்ன கட்டுப்படுத்திக்கற பக்குவம், இதுவும் ஆண்களுக்கு அவசியம். லாஸ்ட்டா... கடைப்பிடி, சும்மா ஒரு விஷயத்தை ஃபாலோ பண்ணனும்னு இதுக்கு அர்த்தம் இல்ல, கடைப்பிடி...ன்னா ஒரு விஷயத்துல இன்வால்வானா அதை எப்பாடு பட்டாவது செஞ்சு முடிக்கணும்ங்கற துணிவு... இதுவும் ஒரு ஆணுக்கு இருக்கணும்னு சொல்றாங்க. ஸோ, நீ சூஸ் பண்ற பார்ட்னருக்கு இந்த குவாலிட்டிஸ் எல்லாம் இருக்கான்னு புரிஞ்சுக்க ட்ரை பண்ணு" என்று மல்லிகா சொல்லி முடிக்க,
"வாவ் மா... யு ஆர் எ ஜீனியஸ்" என மெச்சியவள், "ம்மா, உன் லைஃப்ல நீ இந்த மாதிரி பர்சன் யாரையாவது பார்த்து இருக்கியா" என்று அறிந்து கொள்ளும் ஆவலுடன் கேட்டாள் ஸ்வரா.
"ஏன் இல்லாம, நம்ம சீராளன் மாமா, இந்த குவாலிட்டிஸ்ல பொருந்திப் போகிற ஆளா நான் முதல் முதலா பார்த்தது அவங்களத்தான், அப்பறம் நம்ம டெய்லர் அண்ணா, பகலவன் மாதிரி நம்ம கிட்ட வளர்ர பசங்க" என்று அவள் சிலரை அடையாளம் காண்பிக்க, உள்வாங்கிக் கொண்டாள் ஸ்வரா.
"அப்படியே நீ சொல்ற பார்வைல எடுத்துட்டாலும், ட்ரூ லவ்ன்னா… தட் மஸ்ட் பீ அன் கன்டிஷனல். ஆணானாலும் சரி பெண்ணானாலும் சரி தன் பார்ட்னர் கிட்ட எந்த விதமான எதிர்பார்ப்பும் வெச்சுக்கக் கூடாது. எந்த இடத்துலயும் சப்போர்ட் பண்ணலன்னா கூட பரவாயில்ல, ஆனா அவங்களுக்குப் பிடிச்சத செய்யத் தடங்கலா மட்டும் இருக்கக் கூடாது. முக்கியமா, செக்ஷுவல் அட்ராக்ஷன் மட்டுமே காதலோட அடித்தளமா இருக்கக் கூடாது. ஒன் டு ஒன்… அட்மிரேஷன் அண்ட் ரெஸ்பக்ட் இருக்கணும், டாட்" என முடித்தாள்.
"தட்ஸ் மல்லிகா, இந்த கிளாரிடி வேண்டிதான் உன் கிட்ட கேட்டேன். லவ் யூ ம்மா" என்றாள் ஸ்வரா குதூகலத்துடன்.
"சிம்பிள்… இப்ப நீ எனக்காக சொன்னியே, இதுதான் ராஜ், லவ். அன்பு, பாசம் இதெல்லாம் இருக்கில்ல இதெல்லாத்தோட டிஃப்ரன்ட் வெர்ஷன். இப்ப உன் இன்டென்ஷன் புரிஞ்சாலும், நீ யார லவ் பண்றன்னு இப்ப கேட்க மாட்டேன். பிகாஸ்… எனக்கு உன்ன பத்தி தெரியும். நான் உனக்கு குடுக்குற இந்த ஸ்பேஸ்தான்… நான் உன் மேல வச்சிருக்க லவ்.”
”மோர் ஓவர்… இட்ஸ் டூ எர்லி டு ஆஸ்க். நீ முதல்ல இதுல தெளிவா இருக்கணும். ஒரு சின்ன காத்தடிச்சா கூட உதிர்ந்து போகற சருகு மாதிரி இல்லாம, நீயும் உன் பார்ட்னரும் உங்க முடிவுல ஸ்ட்ராங்கா இருக்கணும். தென் வந்து என்கிட்ட சொல்லு, கல்யாணம்ன்ற நெக்ஸ்ட் லெவலுக்கு மூவ் பண்ண உனக்கு சப்போர்ட் பண்றேன்" என்றவள்,
"அண்ட் மோஸ்ட் இம்பார்ட்டன்ட்" என்ற எச்சரிக்கையுடன், "இந்த மாடர்ன் இரால, ப்ரீ மெரிட்டல் செக்ஸ், லிவிங் இன் ரிலேஷன்ஷிப் மாதிரி விஷயங்கள என்னதான் நாம நார்மலைஸ் செஞ்சாலும், ரிஸ்க் பேக்ட்டர் மட்டும்… எல்லா காலத்துலயும் இருக்கற மாதிரி இப்பவும் பெண்களுக்குத்தான் அதிகம் இருக்கு, பிகாஸ் ஆஃப் ஹர் ரீபுரொடக்டிவ் சிஸ்ட்டம். ஈவன் ஒரே ஒரு அபார்ஷன் கூட ஒரு பெண்ணை ஃபிசிக்கலி அன்ட் மென்ட்டலி ரொம்ப டேமேஜ் பண்ணும். ஸோ லைக், பர்த் கன்ட்ரோல் பில்ஸ் அண்ட் ஆல்" என்று சொல்லிக் கொண்டே வந்தவள், "என்ன சொல்ல வரேன்னு புரியுது இல்ல?" என நிறுத்த, தடதடக்கும் இதயத்துடன் தலை அசைத்தாள் ஸ்வரா.
"இதனால டு த கோர் பாதிக்கப்பட்டவன்ற முறைல சொல்றேன் ராஜ், ஒரு ஆணோட அவசரத்துக்கு, எந்த இடத்துல 'நோ' சொல்லி அணைபோடணும்ன்ற அறிவு பெண்ணான உனக்குதான் இருக்கணும். இத. அவன் புரிஞ்சிட்டு இயல்பா கடந்து போனா ஃபைன், இல்லாம ஃபோர்ஸ் பண்ணான்னா, ஹீ இஸ் அன்ஃபிட் ஃபார் ஃபேமிலி லைஃப்… ஆர் சோ கால்ட் லவ், அதோட அவன கட் பண்றதுதான் புத்திசாலித்தனம். ஒரு இல்லீகல் ரிலேஷன்ஷிப் எவ்வளவு டாக்சிக்னு உனக்கு நான் சொல்லி புரிய வைக்க வேண்டியதில்ல" எனத் தெளிவாகச் சொல்லி முடிக்க,
"யூ ஆர் ரியலி அமேஸிங்ம்மா" என அவளை அணைத்துக் கொண்டாள் ஸ்வரா, அவள் சொன்ன அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டவளாக.
As a mom of a girl child, really admired your writing on love bombing and malli's advice in this update. Thanks so much
That was one of the best advice