top of page

Kaattu Malli - 5

Writer's picture: Krishnapriya NarayanKrishnapriya Narayan

Updated: Jan 2, 2024

மடல் - 5


வல்லரசுவை நோக்கி இயல்பாக புன்னகைத்தபடி, “வாங்க அங்கிள், என்ன இவ்வளவு தூரம் அதுவும் நீங்களே நேர்ல வந்திருக்கீங்க, எனிதிங் இம்பார்டன்ட்?” என இயல்பாகக் கேட்ட ஸ்வரா, அவனுக்கு அருகில் நின்றவனை ஒரு பொருட்டாகக் கூட கருதாதது போன்ற பாவனையைக் கொடுத்தாள்.


அதில் குழம்பிப்போய் அவன் சக்தியை ஏறிட, அவளைப் பற்றி அறிந்தவனாக இத்தகைய உதாசீனங்களையெல்லாம் எதிர்நோக்கியே வந்திருக்க, அவன் தன் கோபத்தை அடக்கியபடி இயல்பாக நின்றிருக்க,


மேலும் குழம்பியவனாக, “ம்மா, தம்பி... சிவசக்தி க்ரூப்ஸ் சிவப்பிரகாசம் சார் மகனாமே! உங்க பர்ட்னர்ன்னு சொன்னாரு” என இழுக்க,


“ஆமாம் அங்கிள், பார்ட்னர்தான், ஆனா இந்த பிசினஸ்ல இல்ல, அது எங்க ஆன்லைன் டிரேடிங் கம்பனில. அதான், இப்ப இங்க ஏன் வந்தார்னு யோசிச்சிட்டு இருக்கேன்” என்றாள் அவனைக் கூர்மையாகப் பார்த்தபடி.


“யா... யா... நான் இங்க வந்திருக்கறதும் அந்த... பிசினஸ் விஷயமா பேசி அவசரமா சில டெசிஷன்ஸ் எடுக்கத்தான்” என சக்தி அவளுக்கு நேரடியாக பதில் கொடுக்க, அவன் அந்த ‘அந்த’வில் கொடுத்த அதிகப்படியான அழுத்தத்திலேயே அவன் சுலபத்தில் இங்கிருத்து போகமாட்டன் என்பது விளங்க, “தென் ஃபைன் வாங்க உள்ள போய் சூடா டீ குடிச்சிட்டே பேசலாம்” என்றவள் தன் மடிக்கணினியைக் கையில் எடுத்துக்கொள்ள, மறுத்துப் பேசாமல் மற்ற இருவரும் அவளுடன் வீட்டுக்குள் வந்தனர்.


“பாட்டிம்மா, மூணு டீ, அதுவும் சுகர் கம்மியா” என குரல் கொடுத்தவள், “அங்கிள், நீங்க ஹாஃப் சுகர்தான சாப்பிடுவீங்க” என்று அக்கறை ததும்பக் கேட்க, வல்லரசுவுக்கோ பெருமை பிடிபடவில்லை. ‘ஆம்’ என தலை அசைத்தவன், அங்கிருந்த நீள்விருக்கையில் அமர்ந்தபடி தனக்கருகில் தட்டி சக்தியை அமரச்சொல்ல அவனறியா வண்ணம் அவளை முறைத்தபடி அங்கே அமர்ந்தான்.


சக்திக்கோ காஃபியின் மீதுதான் ஒரு தீராத மயக்கம். எளியோர் அருந்தும் பானம் என்கிற மூட நம்பிக்கையில் தேநீரின்பால் அவ்வளவு ஈர்ப்பில்லை. இதில் கொடுமை என்னவென்றால் அவனது விருப்பத்தின் தெரிவைக்கூட அவனிடம் அவள் கேட்கவில்லை என்பதே!


ராஜம் தயாரித்து வந்த தேநீர் குவளைகள் நிறைந்த தட்டை தானே போய் கைகளில் வாங்கி வந்தவள் இருவருக்கும் நீட்ட, “நீங்க ஏன் ஸ்வராம்மா இதையெல்லாம் செய்யறீங்க. அதுக்குதான கூலி கொடுத்து ஆளை வெச்சிருக்கோம்” எனக்கேட்டபடி ஓரமாக நின்ற ராஜத்தை ஒரு பார்வை பார்த்தான் வல்லரசு.


ராஜம் சங்கடத்துடன் தலை குனிய, “இட்ஸ் ஓகே அங்கிள், இது ஒரு சாதாரண விஷயம். ஃப்ரீயா விடுங்க” எனக் கத்தரிப்பது போல் பதில் கொடுத்தவள், “முதல்ல இதை எடுத்துக்கோங்க” என்று சொல்ல, ஒரு குவளையைக் கையில் எடுத்துகொண்டான். உள்ளுக்குள்ளே கடுகடுத்தபடி சக்தியும் ஒரு குவளையை எடுக்க, தட்டை அங்கிருந்த தேநீர் மேசை மேல் வைத்துவிட்டு தனக்கானதை எடுத்துக்கொண்டு இருவருக்கும் எதிரில் அமர்ந்தாள் ஸ்வரா.


கசப்பான அந்தத் தேநீரை ஒரு மிடறு பருகியவனுக்கு ஏதோ கஷாயத்தை குடித்த உணர்வு தோன்றி குமட்டிக்கொண்டு வர, அப்படியே வைத்துவிட்டான் சக்தி.


அடக்கப்பட்ட சிரிப்புடன் அவள் அவனைப் பார்த்து வைக்க, அதற்கு மேல் பொறுமை இல்லாதவனாக, “தென் ராஜ், ஹவ் லாங் இட் வில் டேக் ஃபார் யூ டு ஃபினிஷ் திஸ் ப்ராஜக்ட்? (ஹிந்தியில்) எப்ப மும்பை வரதா இருக்க? இன்னும் எவ்வளவு நாள் உனக்காக நான் வெயிட் பண்ணனும்?” எனக் கேட்டான் தன் எரிச்சல் முழுவதையும் குரலில் தேக்கி.


“என்னோட ப்ராஜக்ட் பத்தி உனக்கு என்ன கவலை. இதுக்கெல்லாம் நான் உனக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லன்னு நினைக்கறேன்! மோர் ஓவர், நீ ஏன் எனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்க? கோ ஃபார் அ பெட்டர் ஆப்ஷன். ஐ டோன்ட் மைன்ட்! ராசி டெக்னாலஜிஸ்..ல நம்ம கொலாபரேஷன எப்ப வேணா நாம கலைச்சுக்கலாம், அதனால எனக்கு எவ்வளவு நஷ்டம் வந்தாலும் அதைப் பத்தி எனக்கு கவலை இல்ல” என இந்தியும் ஆங்கிலமும் கலந்து மிக மிக நிதானமாகவே பதில் கொடுத்தாள்.


அவர்கள் பேச்சு புரியாமல் இடையில் கடனே என ஒருவர் அமர்ந்திருப்பதை உணர்ந்து, “சாரி அங்கிள், சில விஷயங்கள எத்தனை தடவ சொன்னலும் சக்திக்குப் புரியாது, ஐ மீன் தமிழ்ல, அதனாலதான் வேற பாஷைல பேச வேண்டியதா போச்சு” என இரு பொருள்பட அவள் சொல்லவும்,


“இதுல என்ன இருக்கு ஸ்வராம்மா, நோ இஷ்யூஸ்” என்றான் வல்லரசு.


“தென் ஷக்தி!” என்று வேறு இடக்காக கத்தரிப்பது போல் சொல்ல,


அவளை அலட்சியமாக ஏறிட்டவன், “நானும் இங்க ஒரு ஃபாரம் ஹவுஸ் வாங்கலாம்னு இருக்கேன். உங்க இந்த பங்களா வேற என்னை ரொம்ப அட்ராக்ட் பண்ணுது. ஸோ, நீங்களே எனக்கு நல்ல இடமா பார்த்துக் கொடுக்க முடியுமா அங்கிள்? என நேரடியாக வல்லரசுவிடம் கேட்க,


தலைமேல் அவன் வைத்த ஐஸில் குளிர்ந்து போனவன், ‘ஐயோ உங்கப்பா எவ்வளவு பெரிய ஆளு, உங்களுக்காக இத கூட செய்ய மட்டனா?’ என்றான் உள்ளுக்குள்ளே ஆயிரம் கணக்குகள் போட்டபடி.


“ஒஹ் வாவ்... தேங்க்யூ ஸோ மச் அங்கிள், அன்ட் தென், எனக்கு இந்த பங்களா ரொம்ப பிடிச்சிருக்கு! இங்க ஒரு நல்ல வைப் இருக்கு! எனக்கும் இங்கயே ஒரு ரூம் அரேஞ் பண்ண முடியுமா? ஒன் ஆர் டூ டேஸ் தங்கி இருந்து லொகேஷன் பார்க்க சரியா இருக்கும்” என அவன் ஒரு பனி மலையையே தூக்கி அரசுவின் தலை மேல் வைக்க,


அப்படியே உச்சிக் குளிர்ந்து போனவனாக, “அட, நீங்க கேட்டு நான் இல்லன்னா சொல்லப்போறேன். ஸ்வராம்மா, அவங்க பாடிகர்ட்ஸ் எல்லாரும் மேல இருக்கற ரூம்ஸ்ல தங்கி இருக்காங்க. இங்க க்ரவுண்ட் ஃப்ளோர்லயே ஒரு மாஸ்டர் பெட்ரூம் இருக்கு. அதை என் சொந்த உபயோகத்துக்காக வெச்சிருக்கேன், அதையே சுத்தம் செஞ்சு தரச் சொல்றேன். நீங்க அதுல தங்கிக்கோங்க” எனப் பட்டென்று அவசரத்தில் வாயை விட்டுவிட்டு, சட்டென தன் தவறை உணர்ந்தவனாக, “ஸ்வராம்மா, தம்பி உங்க ஃப்ரெண்டுதான! அதனால இதுல உங்களுக்கு எதுவும் இடைஞ்சல் இருக்காதுன்னு நினைக்கறேன்’ என்று தன் செயலுக்கு அவன் நியாயம் கற்பிக்க, விழிகளை விரித்து, “நாட் அட் ஆல் அங்கிள், இது உங்க வீடு, ஸோ, நான் என்ன சொல்லமுடியும்?” என்றாள் வஞ்சப் புகழ்ச்சி அணியில்.


“தம்பி ரூம் ரெடி ஆகர வரைக்கும் கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிகோங்க, நைட் குள்ள அரேஞ் பண்ணிட சொல்றேன்” என்றவன், நேராகப் போய் அந்த அறைக்குள் நுழைந்தான்.


ஏற்கனவே ராஜம் அங்கிருந்து அகன்றிருக்க, “என்ன சக்தி, என்ன ஃபாலோ பண்ணிட்டு இவ்வளவு தூரம் வந்திருக்க? இது உங்கப்பாவுக்குத் தெரியுமா?” என எகத்தாளமாகக் கேட்டவள், “என்ன, நான் எங்க போறேன் எங்க வரேன்னு, என் ஃபோனயே ட்ரேஸ் பண்றியா? வேணாம், இது நல்லதுக்கில்ல” என சீற்றமாக அவனை எச்சரிக்க, கையில் சில கோப்புகளை அள்ளிக்கொண்டு அங்கே வந்தான் அரசு. அவனால் அவளுக்குப் பதில் கொடுக்க முடியாமல் போனது.


அதற்குள் அந்த அறையைச் சுத்தம் செய்ய ஆட்கள் வந்துவிட, “திடீர்னு இங்கயே தங்கறேன்னு சொல்லிட்டீங்க. மாத்துத் துணிக்கு என்ன செய்வீங்க?” என்று விசாரிக்க,


“சிட்டில இருக்கற ஸ்டார் ஹோட்டல்ல ரூம் போட்டிருக்கேன். அங்கதான் எல்லாமே இருக்கு. என் பீ.ஏ எடுத்துட்டு வந்துடுவாரு” என்று பதில் கொடுக்க,


“அப்ப சரிங்க தம்பி, நான் கிளம்பறேன். சாப்பிட என்ன வேணும்னாலும் சமையக்கார அம்மா கிட்ட சொல்லுங்க, செஞ்சு தருவாங்க! வேற எதுவும் தேவைனா எனக்குக் கூப்பிடுங்க” என்று பவ்வியமாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.


ஒருவரை மதிப்பாகவும் மற்றொரு சக மனிதரைக் கீழாகவும் நடத்துபவர் எப்படி நல்லவராக இருக்க முடியும்? இப்பொழுது இவன் கொடுக்கும் மதிப்பு இதோ இவனிடமும் என்னிடமும் கொட்டிக் கிடக்கும் பணத்திற்கே ஒழிய, ஸ்வரா என்கிற தனி மனுஷிக்கோ அல்லது சக்தி என்கிற தனி நபருக்கோ நிச்சயாமாக இல்லை! இவர்களைப் போன்றோரை எந்த விதத்தில் சேர்ப்பது?’ என மனதிற்குள் எண்ணிக்கொண்டாள்.


அவளுடைய வயதுக்கு, அவள் கடந்து வந்து அனுபவங்கள் சற்றே அதிகம்தான். அவளுக்கு மிகப் பெரிய அரணாக அவளுடைய அம்மாவும் அம்மம்மாவும் மட்டும் இல்லை என்றால் நிச்சயமாக கசந்த அனுபவங்கள் மட்டுமே அவளுக்கு எஞ்சி இருக்கும். நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக இருந்தது! காலத்தால் துடைக்க முடியாத அவமானங்கள்தான் என்றுமே மறக்க முடியாத கசந்த அனுபவங்களாகப் படிந்துபோகிறதல்லவா? அதுவும் இந்த சக்தியின் அப்பா சிவப்பிரகாசம் அன்று அவ்வளவு பெரிய சபையின் நடுவே இவளது அம்மாவை நிற்க வைத்துக் கேட்கக் கூடாத கேள்வியெல்லாம் கேட்டாரே? அதையெல்லாம் சுலபத்தில் மறந்துவிட முடியுமா? ஒரு பெண்ணின் வளர்ச்சியைக் கொஞ்சமும் சகித்துக்கொள்ள முடியாத ஆண் வர்க்கத்தின் பிரதிநிதியாக அல்லவா அவர் அன்று நின்றார்.


அப்பாவே என்றாலும், தவறென்றால் தவறுதான் எனச் சுட்டிக்காண்பிக்கத் துணிவின்றி, அன்று அதையெல்லாம் சும்மாவேணும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு நின்றுவிட்டு, தொடர்ந்த நாட்களில் இவளிடம் தன் எல்லைக் கோட்டையும் மீறி நின்றவன், இப்படி போகும் இடமெல்லாம் துரத்தி வருகிறானே! இவனை என்ன செய்ய?


இதையெல்லாம் தாண்டி, மனதிற்குள் முட்டிக்கொண்டு நின்ற கணக்கில்லா கேள்விகளுக்கெல்லாம் தேடித் தேடி விடை காண வேண்டும் என்கிற துடிப்பு அதிகரித்துக்கொண்டே போனது.


அலட்சியமாக அவனைக் கடந்து மாடியில் அவள் தங்கியிருக்கும் அறை நோக்கிச் சென்றாள் ஸ்வரா.


அங்கே வராண்டாவில் போடப்பட்டிருக்கும் சோஃபாவில் அமர்ந்திருந்த அவளுடைய மெய்க்காப்பாளன் ஆனந்த் அவளை நோக்கி வர, உள்ளே நுழையாமல் அங்கேயே நின்றாள்.


அவன், “ஏதாவது பிரச்னையா ராஜ்?” என்று கேட்க, “நத்திங், நீ உடனே அம்மம்மாக்கு சொல்லிடாத” என்றாள்.


பதிலுக்கு அவன் பார்த்த பார்வையிலேயே, ஏற்கனவே அவன் சொல்லிவிட்டான் என்பது புரிய, “ஸோ, டயர்ட் ஆனந்த். நான் போய் ரெஸ்ட் எடுக்கறேன்” என்றவள் கதவைத் திறக்க, “ராஜ், சக்தி சார் இங்க வந்திருக்கறது பகலவன் அண்ணாக்குத் தெரியுமா?” என்று அடுத்த கேள்வியை கேட்க,


“ஏன், அவனுக்கு வேற இப்ப மெசேஜ் பாஸ் பண்ணுமா? விடு ஆனந்த், ஐ கேன் மேனேஜ் சக்தி. அண்ட் அவன நீ எதுக்கும் டிஸ்டர்ப் பண்ணாத! அப்பறம் அவன யாராலையும் கன்ட்ரோல் பண்ண முடியாது. ஹி இஸ் ஸோ அரகன்ட்’ என்றாள் அவனைப் புரிந்தவளாக.


அரை மனதுடன் அவன் தலையாட்ட, “முடிஞ்சுதா இல்ல இன்னும் ஏதாவது பாக்கி இருக்கா?” என்று அவள் சலிப்புடன் கேட்க,


“நத்திங், யூ ப்ளீஸ் கேரி ஆன்” என்று சொல்லிவிட்டு அவன் மறுபடியும் போய் அமர்ந்துவிட, அறைக்குள் நுழைந்தவள் கழிவறையுடன் இணைந்த குளியலறைக்குள் போய் புகுந்து கொண்டாள்.


சில நிமிடங்கள் கடந்து, ஒரு துவாலையால் முகத்தைத் துடைத்தபடி அவள் வெளியில் வரும்பொழுது அறை முழுவதும் ஏசியின் குளுமைப் பரவி இருக்கவும் கடுப்புடன் அவள் கட்டிலைப் பார்க்க, ஒய்யாரமாக அங்கே படுத்திருந்தான் சக்தி.


அலட்சியமாக உதடு சுழித்தவள், “என்ன சக்தி, உனக்கு நல்ல விதமா பேசினா புரியாதா?” என்று கேட்க,


நிதானமாக அங்கிருத்து எழுந்து வந்தவன், அப்படியே அவளைத் தள்ளிச் சுவருடன் பதித்தவாறு, “நான் நல்ல விதமா நடத்துட்டா மட்டும் உனக்கு புரிஞ்சிடப்போகுதா என்ன? நீயா நானான்னு ஒரு கை பார்த்துடலாமா?” எனக் கேட்டான் தீவிர பாவத்தில்.


அவனது மூச்சுக் காற்று அவளது முகம் தீண்டியதில் விழிகளை மூடியவள், “வேண்டாம் சக்தி, நீயே தள்ளிப் போயிடு, இல்லன்னா உன் லைஃப் டைம்க்கும் வருத்தப்படற மாதிரி இங்க எதாவது நடந்துடும்?” என்றாள் அழுத்தமான தொனியில்.


அவளது இத்தகையப் பேச்சு அவனை அமைதிப் படுத்துவதற்குப் பதிலாக ஆண்களுக்கே உரித்தான அகங்காரத்தைத் தூண்டிவிட, அவளது கைகள் இரண்டையும் இன்னும் அழுத்தமாகப் பற்றியவன், “என்னடி செய்வ, உன் பாடிகார்ட்ஸ வெச்சு என்ன அடிக்கப் போறியா? அடி” என்றான் கிண்டல் இழையோட.


“ஹ... உன்னை அடிக்க பாடிகார்ட்ஸா?” என்றபடி தன் பலம் முழுதையும் திரட்டி அவனது நெஞ்சில் கை வைத்து அவனை அப்படியே தள்ளினாள். அதில் நிலை தடுமாறி பின்னால் சரிந்தவன், கால்களை ஊன்றி தன்னை நிலைப்படுத்திக்கொண்டு சமாளித்து நின்றான்.


அதற்குள் அருகிலிருந்த தன் கைப்பேசியை எடுத்து, அழைப்பு விடுக்க எதுவாக அதை இயக்கி அதில் ஒரு எண்ணைத் தேர்ந்தெடுத்தவள் அப்படியே திருப்பி திரையை அவனிடம் காண்பிக்க, ‘மிஸ்டர் ஹிப்போகிரட் பிரகாசம்’ என்ற பெயருடன் அவனுடைய அப்பாவின் படம் ஒளிரவும் அதைப் பார்த்த நொடி கொஞ்சம் அதிர்ந்தாலும் பக்கெனச் சிரித்துவிட்டான் சக்தி.


‘என்ன பிறவி இவன்? இவ்வளவு இலகுவாக இவனால் தன்னை எதிர்கொண்டு, கிண்டலாக சிரிக்கக் கூட முடிகிறதே? நேரத்துக்குத் தகுந்தாற்போல் இவனால் எப்படி இதுபோல நடந்துகொள்ள முடிகிறது? தன் காரியத்தைச் சாதிக்க எந்த எல்லை வரைக்கும் போவானா இவன்?’ எனக் கடுப்பாகி, “எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல சக்தி, ஜஸ்ட் இப்படியே டயல் பண்ணி, ‘என்ன மிஸ்டர் சிவப்பிரகாசம், அன்னைக்கு அவ்வளவு பேச்சு பேசினீங்க, இப்ப என்னடான்னா உங்க ப்ரைட், உங்க சாம்ராஜ்ஜியத்தோட எதிர்காலம், உங்க ஒன்லி சன், இந்த வி**ச்ச தேடிட்டு இங்க வந்திருக்கான், இவன்தான் உங்க பெர்மிஷன் இல்லாம எதையும் செய்ய மாட்டானே, இதுக்கு நீங்க எப்படி அலவ் பணணீங்க?’ன்னு ஷார்ப்பா கேட்டுடுவேன், அதுக்கு அப்பறம் என்னன்னு நீயே முடிவு செஞ்சுக்கோ” என்று சீற்றத்துடன் அவனை எச்சரித்தாள்.


அதில் சக்தியின் முகம் சுண்டிப் போக, “வீடியோ கால் வேணா செய்யவா சக்தி? இந்தக் காட்சிய அவர் கண் குளிர பார்க்கட்டும்! தென், மொத்தமா டென்ஷன் ஆகி உன்னோட ஹாஃப் சிஸ்டர் இருக்காங்க இல்ல, அவங்களுக்கு எல்லா ப்ராபர்டீசையும் கொடுத்துட்டு, உன்ன ஃப்ரீயா விட்டுடுவாரு! தென் நாம ஹாப்பியா மேரேஜ் பண்ணிக்கலாம்!” என்று அவள் குறிப் பார்த்து வார்த்தை அம்பை எய்தவும்,


அதில் உண்டான காயத்தின் வலி பொறுக்காமல், “ஸ்டாப் இட் ராஜ்! திஸ் ஈஸ் த லிமிட்! இந்த விஷயத்துல அந்தாளுக்கும் எனக்கும் எந்த அளவுக்கு முட்டிட்டு இருக்குன்னு தெரியுமாடி உனக்கு?” என கர்ஜித்தவன், “ஏன் என் மனச யாருமே புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்க? அந்த ஆளு ஒரு மாதிரி என்ன பிளாக் மெயில் பண்ணா நீ ஒரு மாதிரி என்ன டார்ச்சர் பண்ற, ச்சை” என வருத்தம் மேலோங்கச் சொல்லிவிட்டு, அதற்கு மேல் அவளை ஏறெடுத்தும் பார்க்காமல் அங்கிருத்து அகன்று விட, அவளுக்கே அவனைப் பார்க்கப் பாவமாகத்தான் இருந்தது. ‘போயும் போயும் அந்த ஆளுக்கு இவன் பிள்ளையா பிறந்திருக்க வேண்டாம், இவ்வளவு வேவரிங் மைன்டும் ஒரு ஆம்பளைக்கு இருக்கக் கூடாது’ என்று எண்ணிக்கொண்டாள்.


உடனே, ‘பீ கேர் ஃபுல், ஸ்வரா. நீ கொஞ்சம் இளகினாக் கூட இவன் உன் கிட்ட நிறைய அட்வான்டேஜ் எடுத்துப்பான், அப்பறம் உன்னால அவன சமாளிக்க முடியாது. வாழ்க்கைல கொஞ்சமாவது அடிபட்டு வந்தாத்தான் இவன் திருந்துவான். ஸோ, இவனுக்குப் பாவமே பார்க்காத’ என அவளது மனசாட்சி அவளை எச்சரிக்க, சற்றே ஆசுவாசம் அடைந்தாள்.


அவளது கைப்பேசி இசைக்க, அதில் ஒளிர்ந்த படத்தைப் பார்த்தவள், ‘ஐயோ, இப்ப இவங்கள வேற சமாளிக்கணுமே!’ என மனதிற்குள் புலம்பியபடி, “சொல்லு அம்மம்மூ, எப்படி இருக்க?” என்றபடி அழைப்பை ஏற்றாள்.


அவரிடமிருந்து, “என்ன குசலம் விசாரிக்கறதெல்லாம் இருக்கட்டும், அந்த கம்மினாட்டி எதுக்குடி இப்ப அங்க வந்திருக்கான்?” எனற கேள்வி சூடாக வந்தது.


“இத நீ அவங்கிட்டதான கேக்கணும், என்னவோ நானே அவன இங்கக் கூட்டிட்டு வந்த மாதிரி என்ன மிரட்டுற?” என இவளும் பதிலுக்குச் சூடாக,


“இப்படி கத்தினா, வாய மூடிட்டு எந்தக் கேள்வியும் கேக்காம விட்டுட்டு போயிடுவேன்னு நினைச்சியா? இப்ப இதுக்குப் பதில் சொல்லு, அவனுக்கு நீ அங்க இருக்கறது எப்படிடீ தெரியும்?” என்று அவர் அடுத்த கேள்வியை கேட்க,


“வேணாம் கெழவி, இந்த மாதிரி க்ரிஞ்சா கேள்வி கேட்டதுக்கு நீ மட்டும் என் எதிர இருந்தன்னு வெய்யி, உன்ன அப்படியே கடிச்சு வெச்சிருப்பேன்” என அவள் எரிச்சலுடனேயே சொல்ல,


“நீதான் கோத்தி பில்லான்னு எனக்குத் தெரியுமே, அதெல்லாம் நேர்ல பாக்கும்போது வெச்சிக்கோ, இப்ப நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லு” என அவர் அதிலேயே நின்றாலும் அவரது குரல் கொஞ்சிக் குழைய, அவரது கோபம் மட்டுப் பட்டிருப்பது புரிந்தது.


“எல்லாம் டெக்னாலஜி அம்மம்மூ டெக்னாலஜி. என்ன ஏதுன்னு உன் ‘ஆன’ பேரன் ஒருத்தன் இருக்கான் இல்ல, அவன்கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோ” என அவளும் அதே கொஞ்சலுடன் பதில் கொடுக்க,


“ஆகட்டும், உங்கம்மா இங்கதான் உட்கார்ந்திருக்கா, அவகிட்ட பேசறியா?” என்று குரலைத் தழைத்துக் கேட்க,


“வேணாம் அம்மம்மூ, நான் நினைச்சத செஞ்சி முடிச்சிட்டுதான் அவங்ககிட்ட பேசுவேன். அது அவங்களுக்கும் தெரியும், ஸோ, ஃப்ரீயா விடு” என்று சொல்ல,


“சரி, நீ போன காரியம் என்ன ஆச்சு? இங்கயாவது நாம தேடுறது கிடைக்குமா?” என்று அவர் பூடகமாகக் கேட்க,


“அம்மம்மூ, நானே உனக்கு கால் பண்ணி சொல்லணும்னு நினைச்சேன். அதுக்குள்ள இவன் இங்க வந்து குழப்பம் செஞ்சிட்டான்” என்றவள், “நாம இவ்வளவு நாளா தேடிட்டு இருந்தது இந்த ஊர்லதான் கிடைக்கும்னு தோனுது. அம்மா எக்ஸ்பெக்டேஷனுக்கு பக்கவா செட் ஆகற மாதிரி இடமும் கிடைச்சிடுச்சு. நீ உடனே கிளம்பி வந்தா அடுத்து செய்ய வேண்டியத பத்தி யோசிச்சு முடிவெடுக்கலாம்” என்று தீவிர பாவத்தில் அவள் சொல்லவும், எதிர் முனை மௌனம் காத்தது.


“என்ன, நான் கேட்டுட்டே இருக்கேன், நீ பதில் பேசாம கம்முனு இருக்க?” என்று இவள் படபடக்க,


“இருடி, கொஞ்சம் மூச்சு விட்டுக்கறேன்” எனப் புசுபுசுவென மூச்சு வாங்கியபடி, “அத இத சொல்லி உங்கம்மா இலண்டன் ட்ரிப்ப தள்ளி போட்டுட்டே இருக்காடீ, என்ன… என்ன செய்ய சொல்ற?” என அல்லிக்கொடி கேட்டதிலேயே அவர் மாடிப்படி ஏறி மேலே வந்து அவளுடைய அம்மாவுக்குத் தெரியாமல் பேசுகிறார் என்பது புரிய,


“இனிமேல அவங்களுக்காகத் தயங்க தேவையில்ல அம்மம்மூ, நம்ம திலகாவ அவங்களுக்குத் துணையா வெச்சிட்டு நீ உடனே கிளம்பி வா, காரணம் கேட்டா, இந்த சக்தி தடியன் இங்க வந்திருக்கான்னு மட்டும் சொல்லு, அவங்க அதுக்கு மேல உன்னைக் கேள்வி கேட்க மாட்டாங்க” என்று முடிக்க, அதற்கு ஒப்புக்கொண்டு உடனே கிளம்பி வருவதாகச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தார் அல்லிக்கொடி.


மதிய வெயிலில் ஊரைச் சுற்றி, ராஜம் பாட்டி சொன்னக் கதையைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்டு வந்த அழுகையை அடக்கி மனம் கனத்துப் போய், போதாத குறைக்கு இந்த சக்தியுடன் போராடி மொத்த சக்தியும் வடிந்துபோயிருக்க, தலை வலி வந்ததுதான் மிச்சம்.


சற்று முன் அருந்திய தேநீரே நெஞ்சில் முட்டி நிற்க, சூடாக எதையும் பருகும் வேட்கையும் இல்லை. இலகுவாக ட்ராக்கும் டீ-ஷர்ட்டும் அணித்து, ஸ்போர்ட்ஸ் ஷூவை கால்களில் மாட்டிக்கொண்டவள், சற்றுக் காலாற நடக்கலாம் எனக் கீழே வர, ஆனந்தும் கூடவே இறங்கி வந்தான்.


இதழோரம் கீற்றாகப் புன்னகை எட்டிப் பார்க்க, “கடமையே கண்ணா இருக்க போலிருக்கு” என்று சொல்ல,


“பகலவன் அண்ணா கிளம்பி வந்துட்டு இருக்காங்க ராஜ். அது வரைக்கும் உன்ன ரொம்ப கேர் ஃபுல்லா பார்த்துக்க சொன்னாங்க” என்றவன், “சக்தி சார் அவங்க கிட்ட சொல்லாம கிளம்பி வந்துட்டதா உங்கிட்ட சொல்லச் சொன்னாங்க” என்றான் தகவலாக.


இவ்வளவு நடந்த பின்னும் சக்தியின் நட்பை உதறித் தள்ளாமல் இருக்கிறானே எனக் கோபம் கனன்றாலும், நண்பனை நினைத்து பெருமிதம்தான் உண்டானது. “ஓகே, நான் சும்மா இந்தத் தோப்பைச் சுத்தி ஒரு வாக் போகலாம்னு வந்தேன் அவ்ளோதான், வா போகலாம்” என்று சொல்ல, அவளைப் பின் தொடர்ந்தான்.


வரவேற்பறையில் நின்றபடியே சமையலறையை எட்டிப் பார்க்க, இரவு உணவு தயாரிப்பில் இறங்கியிருந்தார் ராஜம். அவளது பாதுகாவலர்களான  சுரேஷும், ராஜாவும் அவருக்கு உதவியாக ஏதோ செய்துகொண்டிருக்க, அங்கிருத்த படுக்கை அறையை இரண்டு பேர் சேர்ந்து சுத்தம் செய்துகொண்டிருந்தனர்.


அதே நேரம் வாயிலில் கார் ஒன்று வந்து நிற்க, சக்தியின் உதவியாளன் பிரேம்தான் முதலில் இறங்கினான். அதன் பின் அந்த காரை ஓட்டி வந்த ஜீவா இறங்கிபோய் டிக்கியைத் திறந்து சக்தியின் பொருட்களை இறக்கி வைக்க, உள்ளே வேலை செய்துகொண்டிருந்த இருவரும் வந்து அவற்றை ஒவ்வொன்றாக எடுத்துப் போய் அறைக்குள்ளே வைத்தனர்.


'எங்க போனாலும் இவனுக்காக ஒரு கார் ரெடியா இருக்கும், இவன் ஏன் வல்லரசுவோட கார யூஸ் பண்ணிட்டு இருக்கான்?' என்ற கேள்வி எழுந்தது.


நடக்கும் அனைத்தையும் பார்த்தபடி இருவரும் வெளியில் வந்திருக்க, ஸ்வராவைப் பார்த்துவிட்டு, “குட் ஈவினிங் மேம்!” என அவளுக்கு முகமன் தெரிவித்த பிரேம், ‘ஹாய்’ என ஆனந்தைப் பார்த்து கை அசைத்தான்.


ஒரு தலை அசைப்புடன் அதனை ஏற்றவள், ஜீவாவைப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்துவிட்டு, அவர்களைக் கடந்து சென்றுவிட, பதிலுக்கு கை அசைத்துவிட்டு ஆனந்தும் அவளது பின்னோடே செல்ல, கேள்வியுடன் அவளைத் திரும்பிப் பார்த்தபடி வீட்டிற்குள் சென்றான் பிரேம்.


“வாவ் ஆனந்த், வாக்கிங் செய்ய வசதியா கார்டன் டைல்ஸ் எல்லாம் போட்டு, ரெண்டு பக்கமும் மல்லிச் செடி வெச்சு சூப்பரா செஞ்சிருக்காங்க இல்ல! பூப்பூத்து வாசன சும்மா அள்ளுது” என அவள் சிலாகிக்க,


“ஆமா ராஜ், இந்த வல்லரசு சார் சரியான ரசனைக்காரரா இருப்பார் போலிருக்கு” என அவன் புகழ்ந்து தள்ள, அவளுடைய இதழ்கள் இகழ்ச்சியுடன் வளைந்தன.


அவளுக்குப் பின்பாக நடந்து வரவும் அதை அவன் பார்க்க நேரவில்லை. ஆனால், “மனுஷ மனசுல ரசனைக்கா பஞ்சம். துட்டு மட்டும் இருந்தா என்ன வேணா செய்யலாம், இதுக்குப் போயி இவ்வளவு எக்ஸைட் ஆகறீங்க?’ என்று எகத்தாளமாக ஒலித்த குரலில் இருவரும் திரும்பிப் பார்க்க, ஜீவா வந்து நின்றான்.


“வெல் செட் ஜீவா, நான் நினைச்சத நீங்க சொல்லிட்டீங்க’ என ஸ்வரா அவனைப் பாராட்ட, வியப்பாக இருந்தது ஆனந்துக்கு.


“பார்த்து போங்க ஏஞ்சல், இங்க பாம்புங்க நிறைய இருக்கும். அதுவும் மல்லிப்பூ வாசத்துக்கு இந்த பிளாட்ஃபார்ம் ஓரத்துலயே பிரளும், சமயத்துல ஜோடியா பின்னிட்டு கூட கிடக்கும், லேசா இருட்ட வேற ஆரம்பிச்சிடுச்சு. அதனாலதான் ஓடி வந்தேன்’ என்று அக்கறை மேலோங்கச் சொல்லியபடி அவனைக் கடந்து அவளுக்கு அருகில் வந்து நின்றான் ஜீவா.


பயப்படவெல்லாம் இல்லை, ஆர்வத்துடன் விழிகளை சுழலவிட்டபடி, “ஒஹ் ரியலி ஜீவா, எனக்கு இப்படி லைவா பாம்ப பார்க்கணும்னு ரொம்ப ஆச” என்று அவள் சொல்ல,


“என்னாது பாம்ப லைவா பார்க்க ஆசையா, சுத்தம்’ எனக் கிண்டலாக மொழிந்தவன், “விளையாடற விஷயாமா இது, பாம்ப லைவா பார்க்கணும்னா உங்க ஊர்லதான் சிநேக் பார்க் இருக்கில்ல, அங்க போய் பாருங்க, இங்க இருக்கற பாம்பெல்லாம் டெட்லி பய்சனஸ்” என்றான் எச்சரிக்கும் விதமாக.


“சிநேக் பார்க்ல போய் பாம்ப பர்கறதுல என்ன த்ரில் இருக்கு ஜீவா, இப்படி பார்க்கணும், அதுவும் பக்கத்துல ரொம்ப க்ளோசா’ என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அருகில் ஏதோ சலசலப்பு உண்டாக, அனிச்சையாக ‘ஆஆவ்’ என பதறியபடி துள்ளியவள் ஜீவாவின் மீதே மோதி தடுமாற, அவளைத் தாங்கிப் பிடித்து நிறுத்தியவன் வாய் விட்டு சிரிக்க, ஆனந்தோ உச்ச பட்ச பதட்டமாகியிருந்தான்.


ஆனாலும் நிதனாம் தவறாமல், “ஆர் யூ ஓகே?” என அவளது பாதுகாப்பை அளக்க,


நெஞ்சில் கை வைத்து மூச்சை இழுத்துவிட்டு தன்னை சமன் செய்துகொண்டவள், “நத்திங் ஆனந்த், ஐம் ஃபைன்!” என அவனுக்குப் பதில் கொடுத்துவிட்டு, “அப்படினா அது பாம்பில்லையா ஜீவா?” என்று கேட்க,


“இல்ல, ஓணான், காஞ்ச சருகுல குதிச்சி ஓடிச்சு, அதான் அப்படி சலசலன்னு சத்தம் கேட்டுது” என்று சொல்ல,


“ஷ்... ம்மா’ என்று ஆசுவாசம் அடைந்தவளை,


‘இவ்வளவுதானா உங்க வீரமெல்லாம்” என்று அவன் வார,


“அதெல்லாம் ஒண்ணும் இல்ல, திடீர்னு சத்தம் வரவும் தூக்கி வாறி போட்டுடுச்சு, இனிமேல் அலர்ட்டா இருப்பேன்” என்றாள் தன் கெத்தை விட்டுக் கொடுக்காமல்.


இப்படியே ஏதோ சிரித்துப் பேசியபடி நேரம் போனதே தெரியாமல் அவனுடன் இணைத்து அந்த இடத்தைச் சுற்றி மறுபடியும் வீடு வந்து சேர்ந்த போது, ஒரு மணிநேரம் கடந்து போயிருந்தது.


  “ஓகே ஏஞ்சல், நான் கிளம்பறேன், நீங்க போய் ரெஃப்ரெஷ் ஆகுங்க’ என ஜீவா அப்படியே கிளம்ப எத்தனிக்க,


“நோ... நோ... உள்ள வந்து டீ குடிச்சிட்டு போங்க” என அவனை அவள் வற்புறுத்தி அழைக்க, பிகு செய்யாமல் உள்ளே நுழைந்தான்.


அங்கே வரவேற்பறை சோஃபாவிலேயே அமர்ந்திருந்த சக்தியின் விழிகளில் குரோதம் நிரம்பி வழிய, அதை உணர்ந்தாலும் கண்டுகொள்ளாமல் சமையலறை நோக்கிப் போனாள் ஸ்வரா.


அதீத சோர்வுடன் அங்கேயே ஓரமாக சுவரில் சாய்ந்தபடி அமர்ந்திருந்த ராஜத்தின் முகமே சரியில்லாமல் இருக்க, “என்ன பாட்டிம்மா இப்படி தரைல உட்கார்ந்துட்டு இருக்கீங்க?” என்றபடி அவரது கையைப் பிடிக்க, அனலாகக் கொதித்தது. அதிர்ந்து போய் நெற்றியில் கை வைத்துப் பார்க்க, கண்டிப்பாக ஜுரம் நூற்றி இரண்டு அல்லது நூற்றி மூன்று டிகிரியாவது இருக்கும் என்று தோன்ற, அப்படியே அவரைக் கைப்பற்றி எழும்பச் செய்தவள் கைத்தாங்கலாகப் பிடித்துவந்து சோஃபாவில் அமர வைக்க, இவை எதையும் தடுக்கும் நிலையிலேயே இல்லை ராஜம்.


அவரது இந்த நிலையைப் பார்த்து, “ஐயோ, அம்மாவுக்கு என்ன ஆச்சு?” என பதறியே போனான் ஜீவா.


“ஃபீவர் நல்லா கொதிக்குது ஜீவா” என்றவள், “ஆனந்த், தெர்மாமீட்டரும், பாராசிடமல் டேப்லட்டும் எடுத்துட்டு வா, ப்ளீஸ்” என்று பணிக்க, அவனும் உடனே எடுத்து வந்தான்.


அதற்குள் சுரேஷ் ஒரு குவளையில் வெதுவெதுப்பான நீரைக் கொண்டு வந்து நீட்ட, முதலில் மாத்திரையை உட்கொள்ள வைத்தவள், அவருடைய ஜுரத்தின் அளவைப் பரிசோதிக்க, நூற்றி மூன்று எனக் காண்பித்தது.


“ஜீவா, உங்க ஊர்ல டாக்டர் யாரவது இருக்காங்களா?” என்று கேட்க,


‘இல்ல ஸ்வராம்மா, டவுனுக்குதான் போகணும், ஒரு பத்து நிமிஷம் இவங்க இங்க இருக்கட்டும், நான் போய் என் வண்டிய எடுத்துட்டு வரேன்” என்று சொல்ல,


“டூ வீலர்லயா... நோ... நோ... கார்லதான வந்தீங்க, அதுலயே கூட்டிட்டுப் போக வேண்டியதுதான” என்று அவள் கேட்க,


“இல்ல, அது வல்லரசு கார், அதுலயெல்லாம் கூட்டிட்டுப் போக முடியாது’ என அவன் தயங்கவும்,


“புல் *ட், அவசரத்துக்கு உதவாத ஒரு பொருள் இருந்து என்ன யூஸ்” என்றவள்,


“ராஜாண்ணா, நீங்க உங்க வண்டிய எடுங்க” என்று பணிக்க,


அடுத்த நொடி அவன் சாவியுடன் கிளம்ப, அவரைக் கைத்தாங்கலாகப் பற்றி வந்து தானே காரின் பின் இருக்கையில் அமர வைத்தாள்.


ஜீவா அவருக்கு அருகில் வந்து அமர, “டாக்டர பார்த்துட்டு, என்ன கண்டிஷன்னு எனக்குச் சொல்லுங்க, ஜீவா. ராஜாண்ணா, டாக்டர பார்த்துட்டு, பத்திரமா இவங்கள இவங்க வீட்டுல கொண்டுபோய் விட்டுட்டு வாங்க” என்று அவள் கட்டளையாகச் சொல்ல, தலை அசைத்தபடி அந்த வாகனத்தைக் கிளப்பினான்.


இவை அனைத்தையும் ஒரு பார்வையாளனாக மட்டுமே சக்தி பார்த்துக் கொண்டிருக்க, அவனை முறைத்தபடி உள்ளே நுழைந்தவளின் பார்வை அங்கிருத்த உணவு மேசை மீது படிய, அனைவருக்குமான இரவு உணவு அங்கே தயராக இருக்க, அவளது கண்கள் குளமாகிப் போனது.


அவரது அதீத அழுகையும், பழைய நினைவுகள் கொடுத்த மன வேதனையும், வேலைச் சுமையும் அல்லவா அவரை இப்படி ஜுரத்தில் தள்ளியிருக்கிறது!?


ராஜத்தின் அவல நிலையை எண்ணி அவளது உள்ளம் உலைக் கலனாகக் கொதித்தது.


 *** 



6 comments

6 Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Sumathi Siva
Sumathi Siva
Jun 08, 2023
Rated 5 out of 5 stars.

Wow awesome

Like
Replying to

thank you

Like

Guest
Jun 08, 2023
Rated 5 out of 5 stars.

nice epi

Like
Replying to

Thank you

Like

Guest
Jun 07, 2023
Rated 5 out of 5 stars.

Hi sis, this is Vasumathi (Vasu Raj). Intha new story , really a surprise. ella episodes um serthu ippathaan padichen. romba nalla iruku. rajam kathapathiram manasa ennavo seyyuthu. but aarambame ivvalavu heavy ya iruke. inimel eppadi pogum. appadiye nilamangaiyaiyum konjam kannula kaaminga. Damu mangai chemistry semmaya iruku.


Ippadi comment panrathu romba easy ya iruku. Thank you.

Like
Replying to

Thank You vasu ma. Romba happy. Intha kathai konjam heavy thaan. but poga poga normal aagidum. Nilamangai episode next week kodukaren.

Like
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page