top of page

En Manathai Aala Vaa! 8

Updated: Sep 29, 2022

மித்ர-விகா-8


வாகனத்தை நிறுத்திவிட்டு மின்தூக்கியை அடைந்ததும், கைப்பேசியை அழுத்திய மித்ரன், அந்த அழைப்பு ஏற்கப்படவும், "மாம். சென்னைலதான இருக்கீங்க?"


"...”


"நீங்க டூர் முடிஞ்சு வந்துட்டீங்கன்னு மெசேஜ் பண்ணியிருக்கலாம் இல்ல? வந்திருப்பேனே”


"...”


"ஐ நீட் சம் ஹோம் ஃபுட் மாம். அனுப்பி வைங்க.


ம்ம்... ரெண்டு பேருக்கு”


“...”


“ப்ச்... ஷண்முகம் லீவ்ல போயிருக்காரு, அதான்”


“...”


“ம்...ம்... முடிஞ்சா நைட் அங்க வரேன், பை!"


அதற்குள் மின்தூக்கி பதினான்காவது தளத்தை அடைந்திருக்க, அழைப்பைத் துண்டித்தவாறு அவன் வெளியேறவும், புரியாமல் அவள் அவனை ஒரு பார்வை பார்க்க, "என்ன?" என்றான் அவன் அதிகாரமாக.


'திமிரு பிடிச்சவன்' என மனதிற்குள் திட்டிக்கொண்டே, "மார்னிங் ஒரு ப்ரைஸ் லிஸ்ட் ரெடி பண்ண சொல்லியிருந்தீங்க இல்ல, அது பாதில நிக்குது"


பவ்யமாகச் சொல்வதுபோல் சொன்னாள். அதில் கொஞ்சம் எட்டிப்பார்த்த அவளது துடுக்குத்தனம் அவனுடைய மனதை இலகு நிலைக்குக் கொண்டு வர, "அதை விட முக்கியமான வேலையெல்லாம் இருக்கு. இப்ப என் கூட வா" என்றவன் அவளைத் திரும்பியும் பார்க்காமல், அந்தத் தளத்திலிருந்த பகுதியின் முக்கிய கதவை தன் 'அக்சஸ் கார்ட்' கொண்டு திறந்து, உள்ளே சென்றான்.


அதுவும் ஒரு அலுவலகப்பகுதிதான் என்ற எண்ணத்தில் அவனைத் தொடர்ந்து சென்றவள் அதிர்ந்தாள். மிகப்பெரிய கூடத்தில் ஆடம்பரமான 'சோஃபா'க்கள் போடப்பட்டிருந்தன. பெரிய திரையுடன் கூடிய ஒரு தொலைக்காட்சி மாட்டப்பட்டிருந்தது. ஒரு ஓரமாகச் சிறிய உணவு மேசைப் போடப்பட்டு, அதன் அருகில் ரெப்ரிஜிரேட்டரும் ஒரு மைக்ரோவேவ் ஓவனும் வைக்கப்பட்டிருந்தன. அது அவன் தங்குவதற்காகப் பிரத்தியேகமாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் பகுதி என்பது புரிந்தது அவளுக்கு.


அங்கிருந்த ஒற்றை சோஃபாவில் போய் வாகாக அமர்ந்தவன், அனைத்தையும் கண்களால் அளந்துகொண்டு நின்றிருந்தவளிடம், "கவிக்கு கால் பண்ணி வீட்டுக்குப் போயிட்டானா கேளு" என்றான் மித்ரன்.


அவள் உடனே தன் கைப்பேசியை எடுக்க, "நீ இவ்வளவு மரியாதையெல்லாம் கொடுக்க வேணாம். இங்க வந்து உட்கார்ந்தே கால் பண்ணலாம்"


அவளைச் சீண்டும் விதமாக அவன் சொல்ல, அவனுக்கு எதிரில் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தவள் கவியை அழைத்து, "டாக்ட்டரைப் பார்த்துட்டு வீட்டுக்குப் போயிட்டிங்களா கவி அண்ணா?" எனக் கேட்டாள்.


"ஜஸ்ட் இப்பதான் வந்தேன் மா"


அவன் பதில் சொல்லவும், "பெயின் எப்படி இருக்கு?"


அவள் கேட்க, "இன்ஜக்ஷன் போட்டாங்கம்மா. இப்ப பரவாயில்ல" என்றான்.


"ஒரு செகண்ட் இருங்க" என்றவள் அழைப்பை 'ம்யூட்' செய்துவிட்டு, வீட்டுக்குப் போயிட்டாங்களாம்" என்றாள் மித்ரனிடம்.


அந்தக் கைப்பேசியை அவனிடம் கொடுக்குமாறு அவன் கையை நீட்டவும், அவள் அதனைக் கொடுக்க, "கவி. அந்த கதிர்வேலன் அண்ட் ஹிஸ் சன்... வாட்ஸ் ஹிஸ் நேம்? ம்ம். கைலாஷ், அவங்க ட்ரான