வணக்கம் அன்புத் தோழமைகளே!
ஒரு கதையைப் படிக்கத் தொடங்கும் வாசகர்கள், முதல் சில அத்தியாயங்கள் அவர்களுக்குப் பிடித்தபடி இருந்தால் மட்டுமே அக்கதையைத் தொடர்ந்து படிக்க முனைவார்கள். இல்லையென்றால் ஆர்வம் போய்விடும்.
அதுவும், ஒரு எழுத்தாளரின் கதையை நேரடியாகப் புத்தகமாக வாங்கிப் படிக்கிறார்கள் என்றால் அது அவர்களுடைய எழுத்தின் மீது இருக்கும் நம்பிக்கையால் மட்டுமே. அப்படிப் படித்துவிட்டு ஒருவர் வந்து, 'உங்கள் கதை நன்றாக இருக்கிறது' என்று சொல்லும்போது உண்டாகும் மகிழ்ச்சி இருக்கிறதே, பல நூறு விருதுகள் வாங்கியதற்குச் சமம். அப்படியான நேர்மறை பின்னூட்டங்கள் சில இந்தக் கதைக்கு வந்துகொண்டிருப்பது, 'நாம் சரியான பாதையில்தான் பயணிக்கிறோம்! இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்ததில் தவறில்லை!' எனும் ஒரு நம்பிக்கையை எனக்குள் விதைக்கிறது.
நன்றி, நன்றி, நன்றி!
நிறைகளை மட்டுமில்லை குறைகளையும் நீங்கள் சுட்டிக் காண்பிக்கலாம்! அது இன்னும் என்னை மேம்படுத்திக் கொள்ள எனக்கு உதவியாக இருக்கும்.
இந்த அத்தியாயத்தைப் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
நட்புடன்
KPN
இதோ எபி