Thank You very Much Selvamma for this wonderful Review.
வலசை போகும் பறவைகளாய்.
எத்தனை பெரியார்கள் வந்தாலும் இன்னும் பெண் கல்வி என்பது எல்லாருக்கும் சாத்தியம் இல்லை. பெண் பருவம் அடைந்ததும் கல்யாணம் செய்து விட வேண்டும் என நினைக்கும் மக்கள் எப்போதும் மாறுவதே இல்லை.
தங்கம், குயிலி, அஞ்சு மூவரும் பள்ளி தோழிகள். வசந்தகுமார் போன்ற ஆசிரியர்கள் இந்த சமூகத்துக்கு கிடைத்த பொக்கிஷம். சாதி வெறி பிடித்த கிராம தலைகள் அவரை ஊரை விட்டு துரத்தி விடுகிறார்கள். படிக்க ஆசைப்படும் அஞ்சுவும், தங்கமும் தங்கள் குடும்பத்தினரால் இள வயதிலேயே திருமண வாழ்க்கையில் தள்ளி விடப் படுகிறார்கள்.
பிரிந்த மூவரும் சந்திக்கும் போது அவர்களின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை கதையில் பார்க்கலாம். கணவன் குழந்தை என கனவு கண்ட குயிலியின்வாழ்க்கை தலை கீழாக மாறுகிறது. கதைகளில் படித்த வாழ்க்கை நிஜ வாழ்க்கை இல்லையென அனுபவம் sசொல்கிறது. சூர்யா தன் சபலத்தால் வலிந்து வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொள்கிறான். பாதிக்கப் பட்டது குயிலிதான்.
வலசை பறவைகள் பற்றிய விளக்கங்கள் அருமை. சிறகுகள் வலிக்க வலிக்க பறக்கும் பெண்களின் வலி யாருக்கு புரியும்? எந்த வயதிலும் போராடி வெல்லும் பெண்கள் பாராட்டுக்கு உரியவர்களே. அடுத்த தலை முறையினர் பறக்கும் சிறகுகளாவது வலிமையாக இருக்கட்டும்.