மனமார்ந்த நன்றி @chitrasaraswathi64 சித்ராம்மா.
கிருஷ்ண ப்ரியா நாராயணனின்(கேபிஎன்) வலசை போகும் பறவைகள் எனது பார்வையில்.
பெண்களின் முன்னேற்றம் பற்றிய அக்கறையுடன் கதை எழுதும் எழுத்தாளர் கிருஷ்ணா. வலசை போகும் பறவைகள் என பெண்களின் வாழ்க்கையை தந்திருக்கிறார்.
குயிலி நாயகி என்றாலும், அஞ்சு மற்றும் தங்கம் இணை நாயகிகள்.
ஒற்றை பெற்றோராக பெண்கள் குழந்தைகளை வளர்ப்பதில் வெளிநாட்டில் வளர்ப்பதற்கும் நம் சமுதாயத்தில் வளர்ப்பதற்கும் உள்ள வேறுபாடு பற்றி சொல்வது உண்மை.
நம் சமூகத்தில் ஆண் ஒற்றை பெற்றோராக பெறும் மதிப்பு அதே பெண் ஒற்றை பெற்றோராக பெறும் மதிப்பிற்கும் உள்ள வேறுபாட்டை யதார்த்தமாக தந்திருக்கிறார்.
இது நாயகிகளின் கதையாக தோன்றுவதால் நாயகன் சூர்யா மேல் எனக்கு ஈர்ப்பு வரவில்லை.
திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க நினைக்கும் குயிலி, மேல் கல்வி படித்து சாதிக்க நினைக்கும் அவள் தோழிகளுக்கு காலமும் சமுதாயமும் வைத்திருக்கும் பதில்தான் கதை.
குயிலி நல்லத் தோழியாக தன் தோழிகளை தன்னுடன் சேர்த்து முயற்சி செய்து முன்னேற்றம் காண வைப்பது நல்ல நேர்மறையான கதையமைப்பு.
குயிலியின் தந்தை நல்லாசிரியருக்கு எடுத்துக் காட்டு.