top of page

Thookanam Kuivikal-7

கூடு-7

"சோமு சுப்பம்மாள்னு ஒரு தம்பதி. அவங்களுக்கு, 'பாபு, பெருமாள், பலராமன், தீனா'ன்னு நாலு பிள்ளைகள். தன்னோட சொந்த சம்பாத்தியமான பல ஏக்கர் மதிப்பிலான நிலங்களை விட்டுட்டு அந்த சோமுங்கறவர் நைன்டீன் டுவெண்ட்டி த்ரீல இறந்து போனார். தென் அவரோட மனைவி மற்றும் நாலு பிள்ளைகளுக்கு அந்த ப்ராபர்டீஸ 'பார்ட்டிஷன்' பண்ணியிருக்காங்க. அதாவது லீகலா பிரிச்சு செட்டில் பண்ணி டாகுமெண்ட் பண்ணியிருக்காங்க. இதுல அந்த பாபு பெருமாள் ரெண்டுபேரும் நைன்டீன் டுவெண்ட்டி த்ரீல இறந்துபோனதா இந்த நோடீஸ்ல சொல்லி இருக்காங்க. ஆனா அந்த டேட் போலி. ஏன்னா அவங்க ரெண்டு பேரும் ஒரே நாளில் இறந்ததாக காமிச்சிருக்காங்க" என மாதினி சொல்ல 'ஓ' என வியந்தான் கௌசிக். "இதைவிட இன்னும் ஒண்ணு என்னன்னா அந்த பலராமன் அவங்க இறந்த ஒரே மாசத்துல இறந்ததாக சொல்லறாங்க. அதுல இந்த தீனா என்பவர் கல்யாணம் ஆகாமல் வாரிசு இல்லாமல் இறந்துபோனார். எந்த தேதினு இதுல மென்ஷன் பண்ணல. பாபு இறந்ததும் அவரோட ஷேர் அவரோட சன் தேவு என்பவருக்குப் போயிருக்கு. பலராமன் இறந்த பிறகு அவரோட டாட்டர் சீதாவுக்கு அவரோட ஷேர் போச்சு. தென் அவங்க வாரிசு இல்லாம இறந்துபோனாங்க. பெருமாள் இறந்த பிறகு அந்த ஷேர் அவரோட சன் குமாருக்கு போகுது. அந்த குமாரோட லீகல் ஹயர்தான் உங்க பேர்ல இந்த கேஸை போட்டிடுக்கும் சம்பந்தம். இதுல அந்த தீனா ஷேர்ல இருந்த லாண்டோட ஒரு போர்ஷனைதான் உங்க தாத்தா வாங்கியிருக்கார். உங்க தாத்தா அந்த இடத்தை முரளி அண்ட் அவரோட மனைவி ராதா என்பவர்கள் கிட்ட இருந்து வாங்கி இருக்கார். அந்த முரளி அண்ட் ராதா, ஆதவன் என்பவர்கிட்டயிருந்து அந்த நிலத்தை வாங்கி கொஞ்ச நாள் வெச்சிருந்து உங்க தாத்தாவுக்கு சேல் பண்ணியிருக்காங்க. அந்த ஆதவனுக்கு அந்த இடத்தை வித்தவர் சந்தாலால் அண்ட் சாம்ராட்லால். அவங்க ரெண்டுபேரும் பிரதர்ஸ். அவங்க அப்பாவோட நேம் சூரஜ்லால். அவர் தான் வாங்கிய அந்த நிலத்தை தன் பிள்ளைகளுக்கு எழுதிவெச்சார். ஆக்ச்சுவலி அவர்தான் பாபுவோட சன் தேவு கிட்டயிருந்து நேரடியா அந்த நிலத்தை வாங்கியவர். இந்த இடத்துலதான் ஒரு பெரிய குழப்பம் நடந்திருக்கு. அதாவது எந்த அடிப்படையில இந்த நிலம் அந்த தேவுவின் கைக்கு போச்சுன்னு அந்த 'சேல் டீட்'ல அவர் தெளிவா மென்ஷன் பண்ணல! எனக்குச் சொந்தமான இந்த ஸோ அண்ட் ஸோ நிலத்தை இந்த குறிப்பிட்ட நபருக்கு விக்கறேன்னு மட்டும்தான் அந்த சேல் டீட்ல இருக்கு இப்ப என்ன விஷயம்னா, அந்த சம்பந்தம் இன்னும் ரெண்டு பெண்களை அந்த நிலத்தில் உரிமை உள்ளவர்கள்னு சொல்லி கூட சேர்த்துட்டு, நீங்க அங்க பில்டிங் கன்ஸ்ட்ரக்ட் பண்றது இல்லீகல்னு கேஸ் போட்டிருக்கார். அதாவது தீனாவுக்கு சொந்தமான நிலத்தில் அவங்களுக்கும் பங்கு இருக்கு. அந்த தேவு என்பவர் இவங்களோட நாலெட்ஜ் இல்லாம அந்த நிலத்தை வித்திருக்கார். அந்த சேல் சட்டப்படி செல்லாது. அதில் வீடு கட்ட யாருக்கும் உரிமை இல்லைன்னு சொல்லி அதை வாங்கி வேற கைக்கு மாத்தினவங்க, அந்த நிலத்தோட தற்போதைய உரிமையாளரான நீங்க என எல்லார் பேர்லயும் கேஸ் போட்டு ஸ்டே வங்கியிருக்கார். ராஜேஸ்வரி மற்றும் யுவராணி என்கிற அந்த ரெண்டு லேடிஸ்க்கும் அந்த சம்பந்தத்துக்கும் என்ன சம்பந்தம்னு இந்த ப்ளைண்ட்ல அதாவது வழக்குல மென்ஷன் பண்ணல! கர்ரெக்ட்டா சொல்லனும்னா அந்த சம்பந்தம், ராஜேஸ்வரி அண்ட் யுவராணி மூணு பேரும் ப்ளைண்டிஃப்! அதாவது வாதி! இதில் முதல் பிரதிவாதியா இளவரசிங்கறவங்கள சேர்த்திருக்காங்க! அவங்க வேற யாரும் இல்ல அந்த சம்பந்தத்தோட லீகல் வைஃப்!" என மாதினி சொல்ல, "அது எப்படி மேம்! சம்பந்தமே இல்லாம அவரோட மனைவியை இதுல கோர்த்துவிட்டிருக்கார் அந்த சம்பந்தம். இதை எப்படி கோர்ட் அக்செப்ட் பண்ணிச்சு!" எனக் கோமதி கேட்க, "இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்றதுன்னு எனக்கு தெரியல. ஹானரபுல் கோர்ட்ல இருந்து வந்த எந்த ஒரு நோட்டிசும் நம்ம கேள்விகளுக்கு அப்பாற்பட்டவை. அதுல நாம எந்த கருத்தும் சொல்வது குற்றம்" என்ற மாதினி, "அந்த இளவரசியை இதுல முதல் பிரதிவாதியா சேர்ந்ததே, எந்த லீகல் நோட்டிஸ் அனுப்பினாலும் அது அவர்களுக்குத்தான் போகும் அதனாலதான்! நேரடியா உங்களுக்கு அனுப்பினா நீங்க உடனே லீகலா மூவ் பண்ணி ஸ்டே வாங்கவிடாம செஞ்சுருவீங்க இல்ல. அதுக்குதான் இந்த குறுக்குவழி. ஸ்டே வாங்கற கடைசி நிமிஷம் வரைக்கும் உங்களுக்கு தெரியாம மறைக்கற ஒரு கேவலமான தந்திரம்" என்று மாதினி சொல்ல, 'இதுதானே நடந்தது அவளது அம்மாவின் விஷயத்திலும்' என்ற எண்ணம் வர ரத்தம் கொதித்தது சரசுவுக்கு. "லெட் மீ கன்டின்யூ" என்ற மாதினி தொடர்ந்தாள். ரெண்டாவது பிரதிவாதி சந்தாலால். மூணாவது பிரதிவாதி சாம்ராட் லால். நாலாவது ஆதவன். அஞ்சாவது முரளி. ஆறாவது ராதா. இப்ப இவங்க அம்மாவும் தாத்தாவும் உயிரோட இல்லாம போனதால ஏழாவதா சரஸ்வதியையும், எட்டாவது பிரதிவாதியா கோமதியையும் ஒன்பதாவது பிரதிவாதியா சரஸ்வதிக்கு லோன் கொடுத்த பேங்க்கோட பிரான்ச் மேனேஜரையும் சேர்த்திருக்காங்க. ஏன்னா அந்த நிலத்தை மார்ட்கேஜ் பண்ணி அவங்க அந்த லோன் வாங்கினதால" என முடித்தாள் அவள். "இப்ப என்ன செய்யப்போறோம் மேடம்" என ஆர்வமாக கோகுல் கேட்க, "எங்களுக்கு இன்னும் ஒரே ஒரு டாகுமெண்ட் தேவைப்படுது; அதை மட்டும் கண்டுபிடிச்சு எடுத்து கொடுத்தீங்கன்னா நான் கோர்ட்ல பார்த்துப்பேன்!" என மாதினி ஒரு மர்ம புன்னகையுடன் சொல்ல அதற்கு ஒப்புக்கொண்டு ஒரு தெளிவுடனும் நம்பிக்கையுடனும் அங்கிருந்து கிளம்பினார்கள் அனைவரும். *** அன்று காலை விழித்தது முதலே படபடப்பாக இருந்தது சரஸ்வதிக்கு. கோகுலுடைய முகமும் தீவிரத்தைத் தத்தெடுத்திருக்க, இயந்திரகதியில் காலை கடமைகளைச் செய்து முடித்தவள், கடவுள் படத்தருகில் விளக்கை ஏற்றி, மஞ்சள் துணியில் ஒரு ரூபாய் நாணயத்தை முடிந்து வைத்துவிட்டு கற்பூரம் காட்ட, அவளுக்கு அருகில் வந்தவன், "பயப்படாத ஜில்லு! கண்டிப்பா நம்ம பக்கம்தான் தீர்ப்பு வரும். லாயர் மாதினி கடைசியா கேட்ட அந்த டாக்குமெண்டையும் வாங்கி கொடுத்துட்டேன். நல்லதே நடக்கும்" என கோகுல் அவளுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாகச் சொல்ல, "ம்ம்.. இருந்தாலும் கொஞ்சம் டென்க்ஷனா இருக்கு" என்றாள் அவள். மகளைப் பள்ளியில் விட்டுவிட்டு இருவரும் நீதிமன்ற வளாகத்தை அடைய, சில நிமிடங்களில் அங்கே வந்தனர் கோமுவும் கௌசிக்கும். அவர்களை நோக்கி வந்த மாதினி, "நத்திங் டு ஒர்ரி! அந்த ஸ்டே நிச்சயமா வெக்கேட் ஆயிடும்" என அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்துவிட்டுச் சென்றாள். நீண்ட காத்திருப்புக்குப் பிறகு அவர்களது வழக்கு விசாரணைக்கு வர உள்ளே சென்றனர் நான்கு பேரும். அங்கே அந்த சம்பந்தமும் வந்திருக்க, அச்சத்துடன் கணவனின் கையை பற்றிக்கொண்டாள் சரசு. 'பயப்படாத' எனும் விதமாக ஒரு ஆறுதல் பார்வை பார்த்தான் கோகுல். அவர்களுடைய முக மாறுதல்களைக் கவனித்த கோமு, 'என்ன?' என்று ஜாடையில் கேட்க, "இவன்தான் கோமு! நம்ம அம்மா அப்பாவை நம்மகிட்ட இருந்து பிரித்தவன்!' என்றாள் சரசு கண்களில் நீர் கோர்க்க, அதில் கோமுவின் முகம் இறுக, அவளது தோளை மென்மையாகப் பற்றி, "கூல் கோமு! பாவம் செஞ்சவன் அதுக்கான தண்டனையை கண்டிப்பா அனுபவிப்பான் விடு. இந்த கேஸ்ல நாம ஜெயிச்சு அந்த வீட்டைக் கட்டி முடிக்கறோம்! அப்பதான் உங்க அம்மா அப்பாவின் ஆத்மா சாந்தி அடையும்" என்றான் கௌசிக். ஆமோதிப்பாக அவனது விரல்களைப் பற்றிக்கொண்டாள் அவள். அவர்களது வழக்கு எண்ணைச் சொல்லி அழைப்பு வர தன் வணக்கத்தைத் தெரிவித்துவிட்டு நீதிபதிக்கு முன்பாக மாதினி தன் பக்க வாதங்களைச் சொல்லத் தொடங்கினாள். அந்த நிலத்தின் அளவு, அதன் புல எண் மற்றும் அதன் உட்பிரிவு அனைத்தையும் சொல்லி அந்த வழக்கின் நோக்கத்தைச் சுருக்கமாகச் சொன்னவள், "மை லார்ட்! திரு தேவு என்பவர் அந்த நிலத்தை இரண்டாவது பிளைண்ட்டிஃப் திரு சூரஜ் லால் என்பவருக்கு விற்பனை செய்தது சட்டப்படி செல்லாது எனத் திரு சம்பந்தம் க்ளைம் செய்வதில் அடிப்படையே இல்லை" என மாதினி சொல்ல, “அப்ஜக்ஷன் மை லார்ட்! அவருக்கு அதில் உரிமை இருக்கு! அதுக்கு சாட்சியா டாக்குமென்டஸ் ஏற்கனவே கணம் கோர்ட்டார் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது!" எனச் சம்பந்தத்தின் சார்பாக ஆஜரான வழக்குரைஞர் பாலகுமார் தன் பக்க வாதத்தை வைத்தார். “ப்ச்.. ஓவர் ரூல்! நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என அவரை தடுத்த நீதிபதி மாதினியை நோக்கி நீங்க சொல்லுங்கம்மா” என்றார். “தேங்க்யூ மை லார்ட்!” என தன் நன்றியை தெரிவித்த மாதினி தொடர்ந்தாள். “வாரிசு இல்லாமல் இறந்துபோன திரு தீனாவின் பங்காக கொடுக்கப்பட்ட அந்த நிலத்தில் தனக்கும் உரிமை இருப்பதாக அவர் க்ளைம் செய்வது நியாயத்திற்குப் புறம்பானது. ஏன்னா மேலே குறிப்பிட்டுள்ள மிஸ்டர் தீனா இறந்த பிறகும் திரு சோமுவின் முதல் லீகல் ஹயர் திருமதி சுப்பம்மாள் அதாவது தீனாவின் தாயார், உயிருடன் இருந்திருக்காங்க. அதன்படி திரு தீனா விட்டுச்சென்ற அந்த பங்கு நிலத்தின் முழு உரிமையும் அவங்களை மட்டுமே சேரும். முதுமை காலத்தில் மற்ற பிள்ளைகள் அவங்களை கைவிட்டுவிட, அவங்களோட மூத்த மகனான திரு பாபு மட்டுமே அவங்களை ஆதரிச்சத்தால் திருமதி சுப்பம்மாள் ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பத்தி ஒன்றாம் வருடம் தீனாவின் பங்கு முழுதையும் பாபுவின் பெயருக்கே உயில் எழுதி பதிவு செஞ்சிருக்காங்க. சட்டப்படி அந்த லேண்ட் அவரது மகனான தேவு என்பவருக்கு போயிருக்கு. அதனால அந்த நிலத்தை விற்கும் முழு உரிமை தேவுக்கு மட்டுமே உண்டு. ஸோ அடுத்தடுத்த விற்பனைகளும் சட்டத்திற்கு உட்பட்டதே! அதன்படி அந்த இடம் பல கை மாறி என் கட்சிக்காரர்களான திருமதி சரஸ்வதி மற்றும் கோமதிக்கு உரிமையாகி இருக்கு. எனவே அதில் வீடுகட்ட முழு உரிமையும் அவங்களுக்கு இருக்கு" என மாதினி அதன் சட்ட உட்பிரிவுகளை குறிப்பிட்டு விளக்கமாகச் சொல்ல அதை பாலகுமார் ஆட்சேபிக்கவும், "அதுக்கு என்ன ஆதாரம்?" எனக் கேட்டார் நீதிபதி. ஒரு பத்திரத்தின் நகலை அவரது பார்வைக்குக் கொண்டு சென்றவள், "இது அந்த உயிலோட காப்பி மை லார்ட்; பல்லாவரம் சப்ரெஜிஸ்டர் ஆபீஸ்ல இருந்து லீகலா ஃபீஸ் பே பண்ணி வாங்கியது! அதற்கான ஆவணங்களும் கூடவே இருக்கு!" என்று சொல்ல, அந்த பாலகுமாரன் முகம் இருண்டுபோனது. மேலோட்டமாக அதைப் படித்தவர், ஒரு வாரத்திற்கு அந்த வழக்கைத் தள்ளி வைத்தார் மாண்புமிகு நீதிபதி. அன்று மாதினியின் தெளிவான வாதத்திலும் அவள் முன்வைத்த சாட்சியங்களிலும் திருப்தியுற்றவர்களாக அங்கிருந்து அவரவர் வீட்டை நோக்கிச் சென்றனர் நால்வரும்.

0 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page