top of page

Nee Enbathe Naanga - 22

22 - இன்பத்தின் எல்லை


செழியன் மீனாவோடு வீட்டு வாயிலிற்குள் நுழைய அதற்குள் அன்பு தன் பாட்டி தாத்தாவிடம் நடந்தவற்றை கதை கதையாக சொல்லி கொண்டிருந்தாள்.


செழியன் பார்வை ஜானவியை தேட அப்போது சந்தானலட்சுமி, “இரண்டு வாண்டுங்களும் சமாதானம்மாயிட்டாங்களாமே?” என்று ஆர்வமாக கேட்டார்.



“நான் அப்பவே சொன்னேன் இல்ல ம்மா... குழந்தைங்க சண்டை ஒன்னும் பெரிய விஷயம் இல்லன்னு... நீங்கதான் பயந்துட்டீங்க” என்று செழியன் சொல்லும் போதே பாண்டியன் வருத்தாமாக, “இதுக்கு போய் உங்க அம்மா ரெண்டு நாளா என்னை வைச்சி வைச்சி செஞ்சா டா” என்றார் அவர்.


செழியன் தன் அப்பாவை பார்த்து சிரிக்க சந்தானலட்சுமி, “ம்ம்கும்... அப்படி என்ன இவரை சொல்லிட்டாங்க... பிள்ளைங்கள பொறுப்பா பார்த்துக்க கூடாதான்னு கேட்டேன்” என்று நொடித்து கொண்டார்.


“போதும் விடுங்க ம்மா... அந்த பிரச்சனை முடிஞ்சு போச்சு” என்று சொல்லி கொண்டிருக்கும் போதே ஜானவி அறையை விட்டு வெளியே வந்தாள்.


செழியன் பார்வை அவள் முகத்தை ஆர்வமாக முற்றுகையிட ஜானவி வேண்டுமென்றே அவனை பார்க்க தவிர்த்துவிட்டு, “கதை அளந்தது போதும்... வாங்க டிரஸ் சேஞ் பண்ணிக்கலாம்” என்று மகள்களை அழைத்துவிட்டு மீண்டும் உள்ளே சென்றுவிட்டாள்.


‘பார்றா... முகத்தை கூட பார்க்காம போறதை... அவ்வளவு கோபமா?’ என்று செழியன் மனதில் எண்ணி புன்னகைத்து கொள்ள,


சந்தானலட்சுமி அப்போது மகனிடம், “ஆமா... அன்பு நீங்கெல்லாம் சாப்பிட்டீங்களா பா?” என்று கேட்க,


“அதான் ஃபோன்லயே சொன்னேனே ம்மா... ஆசிரமத்திலேயே சாப்பிட்டோம்னு” என்றான்.


“அப்படின்னா சரி” என்று சந்தானலட்சமி வாயில் கதவை பூட்டி கொண்டு தன்னறைக்குள் நுழைந்தார்.


அப்போது பாண்டியன் செழியனை குழப்பமாக பார்த்து, “என்னடா... ஜானு முகம் ஏதோ மாதிரி இருக்கு... புள்ளைங்கள சமாதானம் பண்ணிட்டு நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டீங்கங்ளா என்ன?” என்று சரியாக கணித்து கேட்டார்.


“புருஷன் பொண்டாட்டிக்குள் ஆயிரம் இருக்கும்... அதெல்லாம் நீங்க ஏன் கேட்குறீங்க? போய் படுங்க ப்பா” என்று தன் தந்தையிடம் கடுப்பாக பதிலளித்தான்.


“அப்போ ஏதோ இருக்கு... சரி விடு” என்றவர், “அடி வாங்காம இருந்தா சரி” என்று சொல்லி கொண்டே தன் அறைக்கு சென்றுவிட்டார்.


செழியன் யோசனையோடு, “அடி வாங்குவோமா... அவ்வளவு சீரியஸா போகுமா என்ன ?” என்றவன் தனக்குத்தானே, “ஹ்ம்ம்.. எதுவா இருந்தாலும் சமாளிப்போம்” என்றபடி மனதை திடப்படுத்தி கொண்டு மெதுவாக தன் அறை கதவை திறந்து உள்ளே நுழைந்தான்.


ஜானவி அப்போது குழந்தைகள் இருவருக்கும் உடை மாற்றிவிட்டு கொண்டிருந்தாள். அவன் அவளை பார்த்து கொண்டே நுழைய அவளோ அவனை கண்டுகொள்ளவே இல்லை.


அவள் முகமோ இறுகி போயிருக்க, “என் மேல கோபமா ம்மா” என்ற கேட்ட மீனாவிடம்,


“டிரஸ் மாத்தியாச்சு இல்ல... கம்னு போய் படு” என்று முறை