Nee Enbathe Naanaga - 7
7 - மனத்தாங்கல்
புது வீட்டிற்கு வந்ததிலிருந்து ஜானவிக்கு வேலை வேலை வேலைதான். ஒருபுறம் தன் அலுவலக வேலைகளை வீட்டிலிருந்தபடியே பார்த்து கொண்டவள், மீதமிருந்த நேரங்களில் வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்குவது அடுக்குவது என்று ஓய்வின்றி வேலைகள் செய்தாள். அவளின் அலுவலக வேலையை பொறுத்தவரை ஒரு லேப்டாப்பும் இணையதள இணைப்பும் இருந்தால் போதுமானது. அவர்கள் வேலையை எங்கிருந்து வேண்டுமானாலும் செய்துவிடலாம்.
ஆனால் இதுநாள் வரை அவள் அலுவலகம் சென்று வேலை செய்வதுதான் வழக்கம். அங்கிருந்து செய்ததால்தான் வேலையில் முழு கவனத்தை செலுத்த முடியும் என்பது அவள் எண்ணம். ஆனால் இப்போது நிலைமை வேறு. அலுவலகம் சென்றுவிட்டு வருவது இப்போதைக்கு அவளால் சாத்தியப்படாது.
அவள்தான் மீனாவை பள்ளியிலிருந்து அழைத்துவர வேண்டும். அவள் தன் தம்பி ஜெகனிடம் சொன்னால் அவன் மாலை நேரங்களில் மீனாவை அழைத்து கொண்டு வந்துவிடுவான்தான். நிச்சயம் கிரிஜாவும் அவள் அலுவலகத்திலிருந்து வரும் வரை மகளை பார்த்து கொள்வாள்தான்.
ஆனால் ஜானவிக்கு அவர்கள் தயவை நாட மனமில்லை. அவளுக்கு அவள் வீம்பும் ஈகோவுமே பெரிதாக இருந்தது. அவர்களின் சிறு உதவியும் வேண்டாம் என்று தனியாகவே அனைத்து வேலைகளையும் பார்த்து கொண்டாள். ரொம்பவும் சிரமமாக இருந்த போதும் தன் சுயத்தை இழக்கவும் பிடிவாதத்தை விட்டு கொடுக்கவும் அவள் கிஞ்சிற்றும் விரும்பவில்லை.
இதெல்லாம் ஒருபுறமிருக்க ஜானவிக்கு என்ன காரணத்தினாலோ செழியனை கண்டாலே பிடிக்கவில்லை. அதுவும் அவன் முகம் பார்த்தாலே அவளிடமிருந்து ஒரு வெறுப்பான பார்வை.
ஆனால் செழியனுக்கு ஜானவியின் மீது வெறுப்போ கோபமோ துளிகூட இல்லை. மாறாய் அவளுக்கு அப்படி என்ன தான் செய்துவிட்டோம் என்ற புரியாத குழப்பம்தான்.
இப்படியாக ஒருவாரம் கடந்து சென்றது. ஆனால் வேலை என்னவோ ஜானவிக்கு ஒய்ந்தபாடில்லை. இந்த நிலையில் மீனாவின் பள்ளியில் அன்று பேரன்ட்ஸ் மீட்டிங் என்று சொல்லி அவளை அழைத்திருந்தனர். ஜானவி தயாராகி மகளையும் தயாராக்கி பள்ளிக்கு அழைத்து சென்றாள்.
அங்கே வகுப்பறை வாயிலிற்குள் ஜானவி நுழைய போகும் போது உள்ளே செழியன் வகுப்பாசிரியரிடம் பேசி கொண்டிருப்பதை பார்த்து அவள் முகம் கடுகடுத்தது. செழியனை பார்க்கவும் விரும்பாமல் வாசலிலேயே அவள் ஒதுங்கி நின்று கொண்டாள்.
ஆனால் அந்த வகுப்பாசிரியர் ஜானவியை பார்த்துவிட்டு, “உள்ளே வாங்க மேடம்” என்று இவளை உள்ளே அழைக்கவும் வேறுவழியின்றி உள்ளே வந்து நின்று கொண்டாள்.
அப்போதும் செழியன் பார்வை படாத தூரம் அவள் தள்ளி நிற்க, அப்போது அவள் சுடிதார் டாப்பை இழப்பது போன்ற உணர்வு. ஜானவி தன் பார்வையை கீழ் இறக்கினாள். அங்கே அன்புச்செல்வி நின்றிருக்க, ஜானவி முகம் குழப்பமானது.
அன்புச்செல்வி அப்போது வருத்தமான பாவனையில், “நீங்க மீனாவை என் கூட பேச கூடாதுன்னு சொன்னீங்களா?” என்று கேட்க, ஜானவி யோசனையாய் அவளை பார்த்தாள். ‘நாம அப்படி சொன்னோமா?’ என்று அவள் சிந்திக்க, இரண்டு நாள் முன்பு ஏதோ கோபத்தில் மகளிடம் சொன்னது நினைவுக்கு வந்தது. ஆனால் அன்று மீனாவிடம் ஏதோ டென்ஷனிலும் கோபத்திலும் சொன்னாலே ஒழிய ஆழ்ந்து யோசித்தெல்லாம் அவள் அப்படி சொல்லவில்லை.
இப்போது அன்புச்செல்வி கேட்டதும்தான் அவளுக்கு அந்த விஷயம் மனதில் வந்து நின்றது. அந்த சின்ன பெண்ணிடம் என்ன சொல்வது என்று புரியாமல், “அது வந்து ம்மா” என்று அவள் தயங்கும் போதே,
அன்புச்செல்வி தேம்பி தேம்பி அழ தொடங்கிவிட்டாள்.
ஜானவி அதிர்ந்து அவளை பார்த்து, “பாப்பா” என்று மண்டியிட்டு அன்புச்செல்வியை சமாதானப்படுத்த முயல அவள் அழுது வடிந்தபடி, “மீனாவை என்கிட்ட பேச சொல்லுங்க ஆன்ட்டி” என்றாள்.
ஜானவியின் முகம் இருளடர்ந்து போனது. அவள் அன்புவின் கண்ணீரை துடைத்துவிடும் போதே செழியன் அங்கே வந்து நின்றிருந்தான்.
“என்னாச்சு அன்பும்மா?” என்றவன் பரிவாக மகளிடம் கேட்க, ஜானவி தனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை என்பது போல் ஒதுங்கி நின்று கொண்டாள். ஏற்கனவே அவனுக்கும் தனக்கும் ஒத்து போகவில்லை. அப்படியிருக்க அவன் மகளின் அழுகைக்கு தான்தான் காரணம் என்று தெரிந்தால் ஏதாவது பிரச்சனை நேரமோ என்ற எண்ணம்தான்.
செழியன் அவளை கோபமாக ஒரு பார்வை பார்த்தானே ஒழிய, அவளை அது குறித்து எதுவும் கேட்டு கொள்ளாமல் மகளை அங்கிருந்து அழைத்து கொண்டு சென்றுவிட்டான்.
அதன் பின் மீனாவின் ஆசிரியர் ஜானவியை அழைத்தார். அவர் மீனாவை பற்றி ஒரு பெரிய குற்றப்பத்திரிக்கையே வாசித்து முடிக்க, ஜானவி கடுப்பாகவும் கோபமாகவும் மகளை பார்த்திருந்தாள். சரியாக படிக்கவில்லை என்பதை விட வகுப்பறையில் எந்நேரமும் வேடிக்கை பார்ப்பது ஓரிடத்தில் ஒழுங்காக இருக்காமல் சேட்டை செய்வது என்று மீனாவின் லீலைகளை அவர் முழுவதுமாக ஒப்புவித்துவிட்டார்.
இதையெல்லாம் கேட்ட பின்னும் ஜானவியால் பொறுமையாக இருக்க இயலுமா? மகளை ஸ்கூட்டியில் ஏற்றி வீடு வரும் வரை வசைப்பாடியவள் அதோடு நிறுத்தவில்லை. வீட்டிற்கு வந்த பின்னும் தன் வசையை தொடர்ந்தாள்.
“நான் எல்லாம் ஸ்கூலில படிச்ச காலத்தில் என்னை பத்தி ஒரு சின்ன கம்ப்ளைன்ட் கூட இதுவரைக்கும் வந்ததில்ல... தெரியுமா? அவ்வளவு டிஸப்ளினான ஸ்டூடண்ட்... ஆனா நீ ஏன்டி இப்படி இருக்க?” என்று ஜானவி அவள் பாட்டுக்கு புலம்பி கொண்டிருக்க, அதுவரையில் மீனா எதுவுமே சொல்லாமல் அழுத்தமாக மௌனம் சாதித்தா