top of page

Azhage Sugamaa?! 4

Updated: 4 days ago

முகில்நிலவு 4


முகிலன் என்னதான் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாலும், மனதிற்குள் வருந்துகிறானோ என்ற எண்ணம் தோன்றவும், "யாருக்கு யாருன்னு அந்த சர்வேஸ்வரன் எழுதி வெச்ச எழுத்தை யாராலயும் மாத்த முடியாது கண்ணப்பா! 'த்ரிஷா இல்லன்னா நயன்தாரான்னு போயிட்டே இருக்கணும்!" என மாமா இலகுவாகச் சொல்ல, அதற்குப் புன்னகையை மட்டுமே பதிலாகக் கொடுத்த முகிலன், நிலாவைக் காண்பித்து ஜாடை செய்யவும், அது புரிந்தவராக, "ம்மா அழகி! நாளைக்கு மதுரைக்குப் போய் உங்க அம்மா அப்பாவைப் பார்த்துட்டு வாரலாமான்னு கேட்கறான் இவன்?!" என்று கேட்டார் நிலாவிடம்.


அவரது அந்த கேள்வியில் முகம் இருண்டு போக, "வேண்டாம் யங் மேன்! அந்த அம்மாவாவது பரவாயில்ல, ஆனா அவரு ரொம்பவே அடமென்ட்! ஆக்சிடென்ட் ஆன அன்னைக்கு அங்கப் போயிருந்தேன் இல்ல, அப்ப நான் எவ்வளவு கெஞ்சினேன் தெரியுமா? கொஞ்சம் கூட கன்சிடர் பண்ணல! எனக்கு என்னவோ பிடிக்கல!" என்றால் நிலா கண்களில் வெறுமையுடன்.


"இல்ல! நாளைக்கு நாம மதுரைக்குப் போறோம் டாட்! மார்னிங் அஞ்சு மணிக்கு, ஒரு செட் ட்ரெஸ்ஸ பேக் பண்ணிட்டு நீ ரெடியா கீழ வந்திருக்கணும்! நைட்டு மாமா வீட்டிலேயே படுத்துக்கோ! நீ தூங்கினாலும் சரி! இல்லாம போனாலும் பரவாயில்ல! இட்ஸ் அன் ஆர்டர்!" என்றான் முகிலன் திட்டவட்டமாக.


அதில் சுறுசுறுவென கோபம் ஏற, "நீங்க யாரு மிஸ்டர் எனக்கு ஆர்டர் போட! என்னால வர முடியாது!" என அவள் பட்டென்று பதில் சொல்ல,


"உனக்கு பிரபாவைக் கண்டு பிடிக்கணும்னா நான் சொல்றத நீ கேட்டே ஆகணும்! அப்பறம் உன் இஷ்டம்!" என இலகுவாகச் சொல்லிவிட்டு, அவளது பதிலையும் கூட எதிர்பார்க்காமல் அங்கிருந்து சென்றான் முகிலன்.


சென்னையில் இருக்கும் நாட்களில், விளையாட்டுத்தனத்துடன் வெகு இயல்பாக சுற்றிக்கொண்டிருக்கும் முகிலனின் இந்தப் பிடிவாதமும் அழுத்தமும் புதியதாக இருக்கவும், அப்படியே அதிர்ந்துபோய் நின்றார் ஜீ.கே மாமா.


***


இருள் மறையாத அதிகாலை, முகிலன் தன்னுடைய காரை வாகன நிறுத்தத்திலிருந்து கிளப்பி வந்து அந்தக் குடியிருப்பின் வாயிலில் நிறுத்தினான்.


குழப்பம், பயம் என அத்தனை உணர்ச்சிகளும் முகத்தில் அப்பியிருக்க, அங்கே நின்றுகொண்டிருந்தாள் நிலா.


மதுரைக்கு கிளம்பிக் கொண்டிருந்த அவர்களை வழி அனுப்பவென அங்கே அவளுடன் நின்றிருந்தனர் ஜீ.கே மாமாவும், மாமியும்.


கையில் வைத்திருந்த சிறிய பயணப்பையுடன் காரின் பின்புற இருக்கையை நோக்கி நிலா போகவும், முன்புற கதவைத் திறந்தவாறே, "ஹேய்! உனக்கு என்ன மனசுல பெரிய மகாராணின்னு நினைப்பா? என்னை உன்னோட ட்ரைவர்னு நினைச்சியா! ஒழுங்கா முன்னால வந்து உட்காரு!" என அவன் அதட்டலாகச் சொல்ல, "முகிலா! பாவம்டா அவ. இப்படி மிரட்றதா இருந்தா, நீ மட்டும் போய்ட்டு வா!" என்றார் மாமி கண்டனமாக.


அனைத்தையும் மாமா முந்தைய இரவிலேயே மாமியிடம் சொல்லியிருக்க அவருக்கும் ஓரளவிற்கு நிலாவின் நிலைமை புரிந்திருந்தது.


"வாங்க மேடம்! வந்து முன்னால உட்காருங்க மேடம்!" என மிகப் பணிவுடன் சொன்னவன், மாமியிடம், "இது போதுமா பியூட்டி!" என்றான் மேலும் பணிவான குரலில்.


"உன்னோட இந்த துஷ்ட தனத்துக்கு, என் கிட்ட அடிதான் வாங்க போற பாரு! ஒழுங்கா கிளம்பு! குழந்தையைப் பத்திரமா கூட்டிண்டு போ! அவ அப்பா அம்மா அவளை ஏத்துண்டான்னா, அங்கேயே விட்டுட்டு வா! இல்லனா நாம பார்த்துக்கலாம்" என்றார் மாமி மிகவும் கரிசனத்துடன்.


அதற்குள் நிலா முன் பக்க இருக்கையில் வந்து அமர்ந்திருக்க, 'பியூட்டி! அவங்க இந்தக் குழந்தையோட அம்மா அப்பாவா இருக்க வாய்ப்பே இல்ல! அங்கே போனா என்னென்ன காமெடியெல்லாம் நடக்க போகுதோ, ஓ மை கடவுளே!' என மனதுக்குள் புலம்பியவன், "நீங்க சொல்லிட்டீங்க இல்ல, அப்படியே செஞ்சிடலாம் பியூட்டி! பை!" என்று சொல்லிவிட்டு, அவர்களிடம் விடை பெற்று காரைக் கிளப்பினான்.


அதே நேரம், அங்கே வந்து நின்ற கால் டாக்ஸியிலிருந்து இறங்கி, "ஸ்டாப்! ஸ்டாப்!" என்றவாறே பயணப் பெட்டி ஒன்றை இழுத்துக்கொண்டு, முகிலனின் வாகனத்தை நோக்கி ஓடிவந்தான் ஒரு நெடியவன்.


அவனைப்