top of page

Azhage Sugamaa?! 10(Final)

Updated: 4 days ago

முகில்நிலவு 10


"அவளைக் கல்யாணம் பண்ணிக்கோ!" என மனநல மருத்துவரான அகிலா சொன்னதும்,


சத்தமாகச் சிரித்த முகிலன், "என்ன ஆன்ட்டி! யோகா பண்ணு; மெடிடேஷன் பண்ணுன்னு சொல்ற மாதிரி கல்யாணம் பண்ணுன்னு சொல்றீங்க!?" எனக் கேட்கவும்,


"இல்லப்பா முகிலா! கல்யாணமும் யோகா மாதிரி, மெடிடேஷன் மாதிரி அமைதியும் ஆரோக்கியமும் கொடுக்கற விஷயமாதான இருக்கணும்?அப்படிப் பார்க்கும்போது, உன்னால இந்தப் பொண்ணுக்கு நிம்மதி கிடைக்கும்னு மனசார நம்பறேன்.


அதுவும் டாக்டர்ஸ் ப்ரஃபஷன்ல இருக்கற பலருக்கு ஒரு நிறைவான குடும்ப வழக்கை அமையறதில்ல! உங்க ஸ்ரீதர் அங்கிள் எனக்குக் கொடுக்கற சப்போர்ட்டாலதான் நான் இங்க உட்கார்ந்திருக்கேன்.


அந்த மாதிரி சப்போர்ட் கிடைக்காமத்தான் பல பேர் எனக்கு எதிர உட்கார்ந்து இருக்காங்க, ட்ரீட்மெண்ட் எடுக்க!" எனச் சொன்னவர்,


"நிலா ரொம்ப ஷார்ப் அண்ட் இன்டெலிஜெண்ட்! இவ பெரிய நியூரோ சர்ஜனா வரணும்! அவ கையால பல உயிர்களைக் காப்பாத்தணும்! அதுக்கு நீ அவளுக்கு துணையா இரு போதும்!" என அவனிடம் சொன்னவர்,


நிலாவை நோக்கி, "டாக்டர்ஸ் கூட சாதாரண ஹியூமன் பீயிங்தான்! ஆனாலும் இப்படி உணர்ச்சிவசப்பட்டா சாதிக்க முடியாது நிலா! என்ன புரிஞ்சிதா?


உன் மனசுல இருக்கற எல்லாத்தையும் முகிலன் கிட்ட சொல்லு! எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவளவு சீக்கிரம் உன் கோர்ஸை முடிச்சிட்டு, உன்னோட சர்வீசை ஸ்டார்ட் பண்ணு, அலாங் வித் யுவர் மேரிட் லைஃப்!" என்றவர், "ஆல் தி பெஸ்ட் ஃபார் யுவர் ப்ரைட் அண்ட் ஜாய்ஃபுல் பியூச்சர்!" என இருவருக்குமாக சொல்லி முடித்தார் அகிலா!


அதன் பிறகு அவர்கள் வீடு வந்து சேரவே, இரவு வெகுநேரம் ஆகிப்போனது.


மேற்கொண்டு முகிலனால் அவளுடன் ஏதும் பேச இயலவில்லை. அவள் மனதில் இருப்பதை அறிந்துகொள்ளாமல், அவளை விட்டுவிட்டு, அங்கிருந்து போகவே மனம் வரவில்லை! அவளுடைய வெட்கச் சிரிப்பு வேறு சேர்ந்து கொண்டு, அவனை ஒரு வழி செய்துகொண்டிருந்தது.


***


அடுத்த நாள் அதிகாலையிலேயே, அவளை எழுப்பி, அவசரமாகக் கிளம்பச் சொன்னவன், நிலாவைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள அவனுடைய நண்பனுக்குச் சொந்தமான ஒரு பண்ணை வீட்டிற்கு வந்திருந்தான்.


விடுமுறை சமயங்களில் வந்து தங்குவதற்கென ஏற்படுத்தப்பட்டிருந்த அந்த வீட்டில், பணியாளர்கள் ஒரு சிலர் மட்டுமே இருந்தனர்.


அங்கே இருந்த நீச்சல் குளத்தின் அருகில் வந்து, தண்ணீரில் கால்கள் நனையும்படி முகிலன் உட்காரவும், தயங்காமல், அவனுக்கு அருகில் வந்து உட்கார்ந்தாள் நிலா!


அதனால் தோன்றிய முறுவலுடன், அவளுடைய கண்களை ஊடுருவி, "அகிலா ஆன்ட்டி சொன்ன மாதிரி, நான் உனக்கு சப்போர்ட்டா இருப்பேன்னு நீ நம்பினா, என்கிட்டே எல்லாத்தையும் சொல்லு பேபி! ஐ ஆம் டோட்டலி அட் யுவர் சர்வீஸ்!" என நெகிழ்ச்சியாக அவன் சொல்லவும்,


அவனுடைய அந்தப் பார்வை, மின்சாரத்தை நொடிப்பொழுதில் விழி வழி அவளது சிந்தைக்குள் பாய்ச்ச, அவனுடைய காதலை அதில் உணர்ந்தவள், அவனுடைய வார்த்தைகளில் நெகிழ்ந்தவளாக, அவனிடம் மனதில் இருக்கும் அனைத்தையும் கொட்டித் தீர்த்தாள் நிலா!


***


நொடிகள் நிமிடங்களில் கரைந்து கொண்டிருக்க, தனது அழுகையிலிருந்து மீண்டு வந்த நிலா, அவனுடைய இதயத்துடிப்பை உணர்ந்து, நிமிர்ந்து முகிலனின் முகத்தைப் பார்க்க,


அவன் சட்டைப் பையில் வைத்திருந்த பொத்தான், சிவந்திருந்த அவள் கன்