top of page

Thirudiya Idhyathai Thirupi Koduthuvidu

Public·4 members

Krishnapriya Narayan
5 days ago · added a group cover image.
37 Views

Thirudiya Idhayathai Thirupi Koduthuvidu


86 Views

38. மன்னிப்பு (Final)

ஐந்து வருடங்களுக்குப் பிறகு.


“எங்க ஆ காமி ஒரே ஒரு வாய் ப்ளீஸ்! வாய தெற அஜய்!” என மல்லி கெஞ்சிக் கொண்டிருந்தாள். உணவருந்தும் மேசை மேல் உட்கார்ந்துகொண்டு கண்களில் குறும்பு மின்ன வாயை இறுக மூடியவாறு, ஒரு வாய் உணவு உண்ண அவளைப் படுத்திக்கொண்டிருந்தான் அஜய், ஆதி மல்லி இருவரின் ஐந்து வயது செல்வப் புதல்வன்.


ஆறடி உயறதில் மிடுக்குடன் உள்ளே நுழைந்த தாய்மாமன் தீபனை கண்ட அடுத்த நொடி, கையை மேலே தூக்கிக் காண்பித்து, “ம்மா நான் பெரியவனா வளந்துட்டேன் இல்ல. நானே சாப்பிடறேன் பாருங்க!” என்றவாறு உணவுக் கிண்ணத்தை மல்லியிடமிருந்து பறித்துக்கொண்டு சமர்த்தாக அதை உண்ணத்தொடங்கினான்.


அவனது செய்கையிலேயே வந்திருப்பது யார் என புரியவும் திரும்பிப் பார்க்காமலேயே, “வா தீபா, பிரேக் பாஸ்ட் சாப்பிடுறியா?” என மல்லி கேட்க, வேண்டாம் என்பதுபோல் கையை காண்பித்துவிட்டு அங்கே இருந்த இருக்கையை அஜயின் அருகில் இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்த தீபன், “அவ்ளோ நல்லவனாடா நீ? சாப்பிட நீ படுத்திட்டு இருந்தத நான் பார்த்துட்டேதான் வந்தேன்? என்னோட அக்காவ தொல்ல பண்ணனு வச்சிக்கோ உனக்கு பெரிய்ய ஊசிதான் பாத்துக்க!” என மருமகனை மிரட்டினான்.


திருதிருவென விழித்தவன், “நான் குட் பாய் மாமா. பாருங்க எல்லா இட்லியும் காலி!” என்று சொல்ல, அவனை வினோதமாக பார்த்தவள், “உலக நடிப்புடா சாமி!” என்று சிரிக்க, அப்பாவி போல் முகத்தை வைத்துக்கொண்டான் அஜய். தாய்மாமன் ஊசி என்ற…


23 Views

37. புதிய பரிமாணம்

புதுப்பிக்கப்பட்டு அழகிய பொலிவுடன் திகழ்ந்த மல்லியின் கிராமத்து வீட்டிற்கு அவளை அழைத்துவந்தான் ஆதி.


வீட்டின் உள்ளே அடியெடுத்து வைத்ததும் ஜிவ்வென்ற ஒரு உணர்வு மனதில் எழ உடல் சிலிர்த்தது மல்லிக்கு. மகிழ்ச்சியில் கண்களில் நீர் கோர்க்க ஆதியின் முகத்தைப் பார்த்தாள்.


விரிந்த புன்னகையூடே புருவத்தைத் தூக்கி, “எப்படி!” என்பது போல் அவன் அவளைப் பார்க்க, “மாம்ஸ்!” என்றவாறு அவனது கையில் நெற்றியால் முட்டியவள் அவளது கண்ணீரை அவனது சட்டையிலேயே துடைக்க, அதில் அவளுடைய கண்ணீருடன் சேர்ந்து வகிட்டில் வைத்திருந்த குங்குமமும் அவனது சட்டையில் படிந்தது.


“ஏய்! ஏண்டி இப்படி சட்டையை கறையாக்கற. இதுதான் நீ எனக்குக் கொடுக்கற ரிட்டன் கிஃப்ட்டா? நான் வேற இல்ல எதிர்பார்த்தேன்” என்று கிரக்கமான குரலில் ஆதி சொல்லிக்கொண்டே அவன், கன்னத்தையும், இதழ்களையும் சுட்டிக்காட்ட, நாணம் மேலிட தலை குனிந்தாள் மல்லி.


அப்பொழுது, வீட்டின் ரேழியில் நின்றுகொண்டிருந்த தீபன் அவர்களை நோக்கி ஓடிவந்தான். மல்லியை இடித்துத் தள்ளிவிட்டு, “தேங்யூ மாம்ஸ்” என்றவாறு ஆதியை அணைத்துக்கொள்ள, மல்லியின் காதுகளில் புகை வராத குறைதான்.


“அடப்பாவி தீபா, இங்க ஒருத்தி நிக்கறது உன் கண்ணுக்கு தெரியல? இவங்கள போய் கட்டி பிடிச்சுக்கற. இது டூ மச். இவங்க எனக்கு மட்டும்தான், மாம்ஸ்! இனிமே நீ இவங்கள அத்தான்னே கூப்பிடு” என்று தீபனிடம் சீறினாள்.


8 Views

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2026 by KPN Publications

bottom of page