7. இதயச் சங்கிலி
சசிகுமாருடைய அறையில், அவனுக்கு எதிரில் போடப்பட்டிருந்த இருக்கையில் உட்கார்ந்திருந்தான் தேவா.
ஏதோ ஆவணங்களில் கையெழுத்துப் போட்டுக்கொண்டே அவனிடம் அது குறித்த தகவல்களைச் சொல்லிக் கொண்டிருந்தவனின் கைப்பேசி அறிவிப்பு வந்ததற்கான ஓலியை எழுப்பவே அதை எடுத்துப் பார்த்ததப் புன்னகைத்துக் கொண்டான்.
“என்னிடம் சொன்னா நானும் சேர்ந்து சிரிப்பேன் இல்ல?” என்றான் சசி.
“மோஸ்ட் பர்சனல்”
“நிச்சயமா அது 'ஐ லவ் யூ’ கிடையாது. அப்பறம் எதுக்கு ஓவர் பில்டப்”
“லவ் மெசேஜ் இல்லதான், ஆனா என் ஆளுகிட்டயிருந்து வந்திருக்கற ஃபர்ஸ்ட் மெசேஜ். அதுகூட சுகுணாவுக்காகதான்!” என்று சிரித்துக்கொண்டே போனை சசியிடம் காண்பித்தான் தேவா.
18 Views


