5. எங்கேயோ பார்த்த ஞாபகம்
எதுவும் பேசாமல் மௌனமாகவே தேவாவுடன் பயணித்திருந்தாள் மல்லி. மனதில் தேவாவைப் பற்றியே ஓடிக் கொண்டிருந்தது.
“என்ன, யோசனையெல்லாம் பலமா இருக்கு?” என்று அங்கே இருந்த அமைதியைக் கலைத்தான் தேவா.
“ம்ம்... உங்கள இதுக்கு முன்னாடி எங்கயோ பார்த்திருக்கேன், ஆனால் ஞாபகம் வரல, நீங்க யாரு?”
மனதில் இருப்பதை அப்படியே கேட்டாள் மல்லி.
“நீ என்னை இதுக்கு முன்னாடி பார்த்திருக்கியா? குட் ஜோக்”
“ப்ச்... இந்தக் கிண்டலெல்லாம் வேணாம், கேட்ட கேள்விக்கு நேரடியா பதில் சொல்லுங்க!”
19 Views


