top of page

Thirudiya Idhyathai Thirupi Koduthuvidu

Public·5 members

23. கடந்து போ

மல்லி உறங்குகிறாள் என்று நினைத்து சத்தம் எழுப்பாமல் ஆதி குளியல் அறையில் புகுந்து கொண்டதால் அவன் அங்கே வந்ததையே அவள் அறியவில்லை.


அவன் குளித்து முடித்து அவள் அருகில் வந்து உட்காரவும் அந்த மெல்லிய அதிர்விலும், அவனிடமிருந்து எழுந்த குளியல் சோப்பின் மணத்திலும், கண்ணீரில் கரைந்துகொண்டிருந்த மல்லி அவன் வரவை உணர்ந்து திடுக்கிட்டு முகத்தைத் துடைத்தவாறே எழுந்து அமர்ந்தாள்.


அழுது சிவந்திருந்த அவளது முகத்தைப் பார்த்தவாறு, “என்னாச்சு மல்லி? மறுபடியும் கனவு கண்டியா?” என்று கேட்டவாறு ஆதி அவளது நெற்றியில் கை வைத்துப் பார்க்கவும், களைத்து வந்திருப்பவனிடம் எதையாவது பேசி அவனது மனநிலையைக் கெடுக்க வேண்டாம் என எண்ணியவள் என்ன சொல்வது என்று புரியாமல் பொதுவாகத் தலையை ஆட்டிவைத்தாள்.


பிறகு நேரத்தைப் பார்க்க மணி பதினொன்றைத் தொட்டிருக்கவும், “ஐயோ! ரொம்ப நேரம் ஆயிடுச்சே. என்ன சாப்பிடுறீங்க? இட்லி எடுத்துட்டு வரட்டுமா?” என்று கேட்டாள்.


“ராணிம்மா கிட்ட சொல்லிட்டேன். இட்லி அனுப்பிட்டாங்க” என ஆதி சொல்லவும், வெளியில் சென்று உணவு டிரேவை எடுத்து வந்தாள் மல்லி.


சாப்பிட்டுக்கொண்டே, “கண்களெல்லாம் இப்படி வீங்கியிருக்கு ஏன் அழுத மல்லி?” என அவன் மறுபடி கேட்கவும், அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதி காத்தவள், “நீங்க ஏன் மாம்ஸ் உங்க ஸ்டேட்டசுக்கு தகுந்தமாதிரி ஒரு பொண்ண தேர்ந்தெடுக்காம என்ன என்னைக் கல்யாணம் பண்ணிட்டீங்க?” எனக் கேட்கவும், திடுக்கிட்டவன், “உன்னோட இந்தக் கேள்விக்கான பதில நான் உனக்கு இரண்டு நாளுக்கு…


4 Views

    Members

    Developed By:  Krishnapriya Narayan 

    © 2019 - 2026 by KPN Publications

    bottom of page