3. புதியவன்
வியர்க்க விறுவிறுக்க, அலுவலக வளாகத்திற்குள் நுழைந்து பட்டனை அழுத்திவிட்டு லிஃப்ட்டிற்காக காத்திருந்தாள் மல்லி.
அங்கே தெளிக்கப்பட்டிருந்த ரூம் பிரெஷ்னரின் நெடி வேறு அவளது நாசியில் எரிச்சலை உண்டாக்கித் தும்மலை வரவழைத்துக் கொண்டிருந்தது.
அப்பொழுதுதான் அவள் அருகில் வந்து நின்றான் அந்தப் புதியவன்.
அதற்குள் லிஃப்ட் கீழே வந்துவிட, மல்லியுடனேயே அதன் உள்ளே நுழைந்தான்.
லிஃப்ட்டிற்குள்ளும் அந்த ரூம் பிரெஷ்னர் மணம் அதிகமாக இருக்கவே, மல்லிக்கு அடுத்தடுத்து தும்மல்களாக வந்து கொண்டே இருக்க கண்களில் நீர் வடியத்தொடங்கியது.
அவள் இதழிகளிலிருந்து, ‘சாரி’, ‘எக்ஸ்க்யூஸ் மீ’ இரண்டும் அனிச்சையாக, மீண்டும் மீண்டும் உதிர்ந்து கொண்டே இருந்தன.
18 Views


