top of page

Thirudiya Idhyathai Thirupi Koduthuvidu

Public·5 members

27. அம்முவின் சஞ்சலம்.

கமலக்கண்ணன் வேல்விழி திருமணம் முடிந்த பிறகு வேறு எந்த சலசலப்பும் இல்லாமல் குடும்பம் அமைதியாகச் சென்றுகொண்டிருந்தது.


வேல்விழி அருகிலேயே இருக்கும் கல்லூரியில் சேர்ந்துவிட, வழக்கம் போல கமலக்கண்ணன் கல்லூரிக்கு சென்றுவந்தான்.


முன்புவரை அடிக்கடி பிறந்தவீடு வந்து போய்க்கொண்டிருந்த கயல் நிரந்தரமாக அங்கேயே தங்க ஆரம்பித்தார்.


அப்பொழுதுதான் கயலையும் வேல்விழியையும் பார்க்கவென அவர்கள் வீட்டிற்கு வந்துபோகத் தொடங்கினாள் ராமலிங்கத்தின் அண்ணன் கணேசனின் மகள் அனுபமா.


மூன்று வருடங்களுக்கு ஒருமுறை கட்டாய பணியிட மாறுதலுக்கூரிய மத்திய அரசு உயர் பதவியில் ராமலிங்கம் இருந்ததால் வெவ்வேறு மாநிலங்களில் அதுவரை வசித்து வந்தவர்கள், அவர் ஓய்வு பெற்றுவிட இங்கேயே குடி வந்துவிட்டனர்.


அனைவருடனும் கலகலப்பாகப் பழகும் அனுவை அங்கே எல்லோருக்கும் பிடித்துப் போனது. அம்முவே அவளுடன் நெருங்கிப் பழகத் தொடங்கினாள்.


12 Views

    Members

    Developed By:  Krishnapriya Narayan 

    © 2019 - 2026 by KPN Publications

    bottom of page