top of page

Poove Un Punnagayil!

Public·7 members

Poove Unn Punnagayil - 18


ree

வணக்கம் அன்புத் தோழமைகளே!


பூவே உன் புன்னகையில் அடுத்த அத்தியாயம் பதிவிட்டுவிட்டேன்.


முந்தைய பதிவுகளுக்கு நீங்கள் கொடுத்த Likes மற்றும் Comments அனைத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.


இந்தப் பதிவை பற்றிய உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.


இதோ எபி:


PUP Episode - 18


அடுத்த அத்தியாயத்திலிருந்து சிறு Teaser


"பார்த்தீங்களா மிஸஸ் சக்தி, உங்களுக்குத்தான் என்னை அடையாளம் தெரியல போலிருக்கு. ஆனா நம்ம ஞானம் அண்ணா, என்னை எப்படி ஞாபகம் வச்சுட்டு விசாரிக்காறாரு பாருங்க. சூப்பர் அண்ணா நீங்க!" என அவன் அவரை வெகுவாகப் பாராட்டித்தள்ள,


உச்சி குளிர்ந்து போன ஞானம் தன்னையும் மறந்து, "தம்பி எங்க சக்தி அம்மாவுக்கு இன்னும் கல்யாணம் ஆகல. நீங்க என்ன அவங்கள மிஸஸ்ங்கறீங்க" என அவர் வெள்ளந்தியாக உண்மையைப் போட்டு உடைத்துவிட்டு, "அது எப்படி சக்தி அம்மா உங்களை மறந்தாங்க? அவங்க ஞாபகசக்தியை பத்தி உங்களுக்கு தெரியாதே, எங்க கே.ஆர். சார்க்கே செக்ஷன் ஏதாவது மறந்துபோச்சுன்னா, இவங்ககிட்டதான் கேட்பாரு" என சக்தியுடைய ஞாபசக்திக்கு ஒரு பாராட்டுப்பத்திரம் வாசித்தவர், "அன்னைக்கு எனக்கு உடம்பு சரியில்லாம போய், நான் தெரியாம இவர் பைக்கை தட்டிட்டு, இவருக்கு கால்ல அடிபட்டு ஆஸ்பத்திரிக்கு கூட கூட்டிட்டுபோனீங்களே..ம்மா" என சில நொடிக்குள் பிளாஷ் பேக் அனைத்தையும் அவர் ஓட்டிக்காண்பிக்க,


"ஐயோ ஞானம் அண்ணா, இப்பதான் ஞாபகம் வருது" என்றவாறு அசடுவழிய தலையில் கை வைத்துக்கொண்டாள் சக்தி, 'சரியான ஓட்டவாய் மாரிமுத்து அண்ணா நீங்க, தனியா சிக்குவீங்க இல்ல அப்ப இருக்கு உங்களுக்கு' என உள்ளுக்குள்ளே அவரை கருவியவாறு.

590 Views
Swetha Ram
Swetha Ram
26 Apr 2022

Nice epi akka! but teaser thaan semma. eagerly waiting for next episode. sakthi + sathya combo, supera workout aagumnu nambaren.

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page