A feel good story... இப்படிதான் சொல்லணும். சென்ற மாதமே இந்த புத்தகத்தை பரிசாக வாங்கிட்டேன். புக் கைக்கு வந்ததுமே மொத்தக் கதையையும் படித்து முடித்துவிட்டேன். இருந்தாலும் தளத்தில் முடியும்பொழுது ரெவ்யூ போடலாம் என காத்திருந்தேன்.
அதிகபடியாக தேவையில்லாத எந்த ஒரு விஷயமும் சேர்க்காமல் வெகு எதார்த்தமாக இந்தக் கதையை எடுத்துட்டு போனதுக்கு KPN அக்காவுக்கு என்னோட நன்றிகள்.
தாமரை, கருணா, சத்யா, சக்தி, ஹாசினி, கௌசிக், பாலான்னு எல்லாருமே நாம தினம்தினம் நம்ம வாழ்கைல சந்திக்கற எதார்த்த மக்களா இருக்காங்க.
குறிப்பா மயிலம் அப்பா நம்ம மனசை விட்டு அகல மாட்டேங்கறாரு.
கட்டாயம் எல்லாரும் ஒரு தடவ படிக்க வேண்டிய அருமையான கதை. தாமரைக்கு பிரசவம் நடக்கும் சமயம் போல சில இடங்களை நிச்சயம் நம்ம வாழ்க்கையோட கனக்ட் பண்ணி பார்க்காம இருக்கவே முடியல. அப்படியே கண்ணெல்லாம் கலங்குது.
அம்மாவை துச்சமா பேசும்போது ஹாசினிய பளார்ன்னு அரையனும் போல தோணிச்சு.
கதை படிச்சு முடிச்சதும் சத்யா சக்தி கல்யாணத்துல கலந்துக்கணும்னு ஒரு ஆசை வருது.
இது போல சொல்ல கதைல நல்ல பகுதிகள் நிறைய இருக்கு. ஆனா இதுக்கு மேல எனக்குதான் ஒண்ணும் சொல்ல தெரியல.
வழக்கம் போல KPN அக்காவின் மற்றும் ஒரு நச் ஸ்டோரி...
அன்புடன்...
K.R.Swetha
(பின் குறிப்பு: வலசை போகும் பறவைகள் நாவலும் எனக்கு பரிசா கிடைச்சிருக்கு. சுவேதா ஹாப்பி அண்ணாச்சி மொமன்ட். அந்த கதையை புல்லா படிக்க ஆர்வமாய் இருக்கிறார் பதிவர்)
Oh wow! thank you... thank you... thank you so muchfor your wonderful review dear! me also happy annachi.