இந்தத் தொகுப்பில் மொத்தம் 12 கதைகள் உள்ளன.
ஒவ்வொரு கதையுமே படிக்க சுவாரசியமாக இருக்கிறது.
பேருந்து பயணங்களில் நாம் சந்திக்கும் எதார்த்த மனிதர்களைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் நம்ம ஆத்தர். நல்ல தெளிவான எழுத்து நடை. சில கதைகள் சிரிக்க வைக்கின்றன. சில, மனதைக் கனக்கச் செய்கின்றன.
சாம்பிளுக்கு, முதல் கதை 'பாதை'யில் “ அப்ப விடு. நான் உன் மவன் வீட்டுப் பக்கம் தான் வண்டி ஓட்டுறேன். நீ பஸ்ல என்னைப் பார்த்தா ஏறிக்க என்ன?” என எழுதப் படிக்கத் தெரியாத ஒரு பெண்மணியிடம் பேருந்து ஓட்டுனர் சொல்லும் இடம் அழகு.
6 வது கதையான வெட்டிக் காதலில் “ அய்யோ! இதுலாம் குழந்தை பார்க்கக் கூடாதே?” எனப் பதறியவாறு சந்தனத் தலையும், வைரக் கம்மலுமாக இருந்த மகளை நெஞ்சோடு அனைத்துக் கொண்டு விறுவிறுவென நடந்தாள் திருமதி மஞ்சு. எனும் இடத்தில் காதலின் எதார்த்தத்தைப் போகிற போக்கில் சொல்லிவிட்டார்.
ஒவ்வொரு கதையிலும் இதுபோல ஒரு பகுதி நம்மை நெகிழ வைக்கிறது.
இதுபோன்ற படைப்புகள் வாசகர்களைச் சென்றடைவது அவசியம் எனக் கருதுகிறேன். அமேசான் கிண்டிலில் கிடைக்கிறது.
மேன்மேலும் இதுபோன்ற தரமான படைப்புகளைக் கொடுக்க ஆசிரியருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
Thank you so much akka 😍