
வணக்கம் அன்பு தோழமைகளே!
மிகப்பெரிய இடைவேளைக்குப் பின் மாறுபட்ட முயற்சியுடன் கூடிய ஒரு புதிய கதையுடன் உங்கள் அனைவரையும் சந்திக்க வந்திருக்கிறேன்.
'நிலமங்கை'யே ஒரே இடத்துல நின்னுட்டு இருக்கு, நடுவுல பூவே உன் புன்னகையில் வேற! இதுல புது கதையா?' என்கிற உங்கள் 'மைண்ட் வாய்ஸ்' எனக்கு நன்றாகக் கேட்கிறது.
ஆனால் இது கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன் நான் தொடங்கிய கதை ஆனால் Off-Lineஇல். இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இது 'நிலமங்கை'யின் "Spin-Off'
இதுதான் எனது புதிய முயற்சி என்று சொல்லலாம்.
இரண்டு கதைகளும் ஒரே நேரத்தில் நடப்பதாகவும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளதாகவும் இருக்கும். தனித்துப் படித்தால் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற வெவ்வேறு கதைகளாகவும் தோன்றும்.
கூடியவரை நிலமங்கை - நிலவின் தேசத்தில் நான் இரண்டு கதைகளின் பதிவையும் மாற்றி மாற்றிக் கொடுக்கலாம் என்று இருக்கிறேன்.
இன்றைய பத்திவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள மறக்காதீர்கள்.
எனது மதிப்பிற்குரிய வாசகர்கள் அனைவரின் ஆதரவை எதிர்நோக்கி எனது புதிய முயற்சியுடன்,
நட்புடன்,
KPN.
(அடுத்த பதிவு புதன் அன்று)